Wednesday 30 September 2015

Sweeper/Water Carrier Allowance Revision சம்பந்தமாக உங்கள் கவனத்திற்கு

அன்பார்ந்த தோழர்களே  
                 வணக்கம் நமது அலுவலகங்களில் Sweeper/Scavenger/Water Carrier ஆக பணிபுரிபவர்களுக்கு மிக குறைந்த தொகை வழங்கபடுவது அறிந்ததே.
அதன் காரணமாக பல்வேறு அலுவலகங்களில் அடிக்கடி அவர்கள் வேலையை விட்டு நின்று விடுவதும் அதற்கு மாற்றாக ஆள் தேடி அலைவதும் வாடிக்கையானது. 
               அதை நாமும் பல முறை கோட்ட நிர்வாகத்திடம் முறையிட்டும் சமிப காலமாக எவ்வித முன்னேற்றமும்  ஏற்படாமல் இருந்தது. தற்போது கடந்த 28.09.2015 அன்று மாதாந்திர பேட்டியில் நமது கண்காணிப்பாளர் அவர்கள் அதை  மறுசீராய்வுக்கு உட்படுத்தபட வேண்டிய அவசியத்தை ஒப்புகொண்டுள்ளர்கள்.   
                Sweeper/Scavenger/Water Carrier களுக்கு நியாயமான முறையில் Sweeper/Scavenger/Water Carrier Allowance ஐ அதிகபடுத்தி தர ஒப்புகொண்டுள்ளர்கள் . எனவே அதற்காக தாங்கள் தங்கள் அலுவலக Sweeper/Scavenger/Water Carrier ரிடம் ஒரு கடிதம் பெற்று அதை தங்களுடைய குறிப்புடன் FORWARD செய்யுமாறு நமது கண்காணிப்பாளர் அவர்கள் கூறியுள்ளார். அவ்வாறு செய்யும் பட்சம் தங்கள் அதை வைத்து அவர்கள் Allowance ஐ அதிகபடுத்தி தர ஒப்பு கொண்டுள்ளார்கள்.  
               உடனடியாக தங்கள் அலுவலக Sweeper/Scavenger/Water Carrier ரிடம் ஒரு கடிதம் பெற்று அனுப்பி வைக்க வேண்டுகிறோம். 
அதன் நகல் ஒன்றை நமது கோட்ட செயலாளர்  
திரு J.குணசேகரன், கோட்ட செயலாளர் (பொ) 
திருநெல்வேலி டவுன் SO 627 006.
என்ற முகவரிக்கு அனுப்பிட வேண்டுகிறோம்.
நன்றி 

திரு J.குணசேகரன், கோட்ட செயலாளர் (பொ) 
தேசிய சங்கம் 
நெல்லை கோட்டம்

0 comments:

Post a Comment

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More

 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | Grants For Single Moms