
February 08, 2012

Secretary, FNPO Tirunelveli

இந்திய அஞ்சல் துறையை புதுமைப்படுத்தும் புதிய கொள்கை நிகழாண்டில் அமலுக்கு வரும் என்றும், இதன் மூலம் அஞ்சல் நிலையங்கள் வங்கிகளாக மாறும், கூரியர் நிறுவனங்கள் அஞ்சல் துறையில் பதிவுசெய்து உரிமம் பெறுவது கட்டாயமாக்கப்படும் என்றும் மத்திய தகவல் தொடர்புத் துறை அமைச்சர் கபில் சிபல் கூறியிருக்கிறார். இவர் பொறுப்பேற்ற நேரத்திலும்கூட இதையேதான் சொன்னார். இப்போதும் சொல்கிறார்.
அஞ்சல் நிலையங்களின் மிக முக்கியப் பணியான கடிதங்கள், பார்சல்கள் பட்டுவாடா செய்வது கூரியர் நிறுவனங்களின் வருகையால் பாதிக்கும் மேலாகக் குறைந்து...