.bmp)
இந்திய பிரதமரை "வணக்கம்' தெரிவிக்க வைத்த ஜப்பான் தமிழறிஞர் நொபுரூ கராஷிமா. ஜப்பானியத் தமிழறிஞர் நொபுரூ கராஷிமாவுக்கு, டோக்கியோ நகரத்தில் இந்தியப் பிரதமர் "பத்மஸ்ரீ' விருது வழங்கினார்
தமிழை நேசிக்கும் அந்த ஜப்பானியர், தள்ளாத வயதில் சக்கர நாற்காலியில்
மேடைக்கு அழைத்து வரப்பட்டபோது, இருகரம் கூப்பி "வணக்கம்' என்று சொன்னதும்,
பிரதமர் சிரித்துக்கொண்டே அவருக்குத் தமிழில் "வணக்கம்' தெரிவித்ததும்
நெகிழ்ச்சியான நிமிடங்கள். இந்தியப் பிரதமரை அந்நிய மண்ணில் "வணக்கம்' தெரிவிக்க வைத்தமைக்கே, அந்த மாமனிதருக்கு நாம் ஆயிரம் வணக்கங்கள் தெரிவிக்கலாம்.
கரகோஷத்துக்கு இடையே தனக்கு வழங்கப்பட்ட "பத்மஸ்ரீ' விருதைப்
பெற்றுக்கொண்ட நொபுரூ கராஷிமா, "நன்றி' என்று நல்ல தமிழில் கூறியபோது
மீண்டும் கரகோஷம். டோக்கியோ நகரில் தமிழ் ஒலித்தது கேட்டு, மகிழ்ச்சியே ! முனைவர்...