
அதர்மத்தை அழிந்து தர்மத்தை நிலைபெற்றிட
சூரஸம்ஹர மூர்த்தியை வணங்குவோம். குறிஞ்சி நிலத் தெய்வமாகப் போற்றப்படுகின்ற முருகப்பெருமானுக்கு,
தமிழகத்தில் பல திருத்தலங்கள் இருந்தாலும், திருப்பரங்குன்றம்,
திருச்செந்தூர், பழநி, சுவாமிமலை, திருத்தணி, பழமுதிர்சோலை ஆகிய ஆறு
தலங்கள் முருகனின் ஆறுபடைவீடுகளாக கருதப்பட்டு பக்தர்களால் வணங்கப்பட்டு
வருகிறது. போர் புரியச் செல்லும் தளபதி தனது படைகளுடன் தங்கியிருக்கும்
இடம் ‘படைவீடு' என்றழைக்கப்படுகிறது. அவ்வகையில் சூரபத்மனை வதம்
செய்வதற்காக முருகப்பெருமான் வேல் கொண்டு படைவீடு அமைத்து தங்கியிருந்த
தலம், இரண்டாம் படைவீடாக கருதப்படுகின்ற திருச்செந்தூர் ஆகும்.
ஆறுபடை வீடுகளில் திருச்செந்தூர் மட்டும் கடற்கரையிலும், பிற ஐந்துவீடுகள்
மலைக்கோவிலாகவும் அமைந்துள்ளதாக தோன்றினாலும், திருச்செந்தூரும்...