
சம்மேளன பொதுச் செயலாளருடன் நமது கோட்ட தலைவர் திரு ஆனந்தராஜ் அவர்கள்
41 ஆண்டு கால தேசிய சங்க உறுப்பினராகவும் பல்வேறு பொறுப்புகளிலும் பணியாற்றி 1990-1991
ஆண்டுகளில் திருநெல்வேலி கோட்ட செயலாளராகவும் 2008 முதல் இன்றுவரை கோட்ட
தலைவராகவும் பணியாற்றி 31.05.2014 இன்று பணிநிறைவு செய்யும் நமது தேசிய சங்க முன்னோடி திரு.E.ஆனந்தராஜ் அவர்கள் பல்லாண்டுகள் நீடுழி வாழ வாழ்த்துகிறோம்.
நெஞ்சம் நிறை நல்வாழ்த்துமடல்
அன்பின் பிறப்பிடமே ஆற்றலின் பூங்காற்றே
இசக்கிமுத்து ஈன்றெடுத்த ஏற்றமிகு பொற்குடமே
உண்மை எனும் மண்ணகத்தே ஊன்றி வைத்த மரிகொழுந்தே
வள்ளுவன் நெறிகண்டு வாழ்ந்து நின்ற இலக்கணமே
சொன்ன சொல் தவறாத தற்கால அரிச்சந்திரனே
என்றும் இளமையோடு ஏந்திழையின் துணையோடும்
செம்மையுற...