

திரு இராமச்சந்திரன் மாநில தலைவர் அவர்கள் தலைமை வகித்தார்.
வரவேற்புரையை வரவேற்புககுழு தலைவர் நிகழ்த்தி னார் .
துவக்க உரையை மாநில செயலாளர் திரு G.P. முத்து கிருஷ்ணன் அவர்கள் நிகழ்த்தினார்.
அப்போது இந்திய பொருளாதார வளர்ச்சியில் பொதுத்துறை நிறுவனங்களின் பங்களிப்பையும் முக்கியத்துவத்தையும் விளக்கினார் . நிறுவனத்தின் தற்போதைய நிலைமையையும் அதே சமயம் நமது நிலையையும் அதற்கு நமது சங்கங்களின் பங்களிப்பையும் விளக்கினார் .
அரசின் புதிய பென்ஷன் திட்டத்தை கடுமையாக விமர்சித்தார்.
அதனை தொடர்ந்து நமது சகோதர சங்கங்களின் மாநில நிர்வாகிகள் பலரும் உரை நிகழ்த்தினர்.
நிறைவாக சம்மேளன பொது செயலாளர் திரு தியாகராஜன் அவர்கள் சிறப்புரை நிகழ்த்தினார்
குறிப்பாக வருகின்ற தொடர் வேலைநிறுத்த போராட்டத்தின் காரணம்,சூழ்நிலையை விளக்கினார் . தொடர் வேலைநிறுத்த போராட்டத்தின் அவசியத்தையும் விளக்கினார்.
உலகளாவிய postal மாற்றம் அதனை தொடர்ந்த தாக்கம் குறித்தும் பேசினார். Relocation of Postoffices, அதற்கு இலாகா கொடுத்த உறுதிமொழி அதனை தொடர்ந்து இலாகாவின் செயல்பாட்டில் மாற்றம். கொடுத்த உறுதிமொழியை காற்றில் பறக்க விடும் இலாகா குறித்து தனது அதிருப்தியை வெளிபடுத்தினார் .
முதல் நாள் நிகழ்ச்சி இனிதே நிறைவுற்றது .
0 comments:
Post a Comment