Tuesday, 29 September 2015

மாதாந்திர பேட்டியில் தீர்வு காணப்பட்டவை.

இந்த மாத மாதாந்திர பேட்டி 28.09.2015 அன்று நடைபெற்றது.
நமது கோட்டத்தில் மூன்றாம் பிரிவு சார்பாக கோட்டச்செயலாளர் 
திரு.S.A.இராமசுப்பிரமணியன்,  திரு.S.வெங்கடேஸ்வரன், திரு.S.சுடலைமுத்து ஆகியோரும், நான்காம் பிரிவு சார்பாக கோட்டச்செயலாளர் திரு.S.இராமலிங்கம், திரு.S.சுவாமிநாதன் மற்றும் திரு.S.அம்பேத் ஆகியோரும் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் நமது கோட்டகண்காணிப்பாளர் திரு.V.P. சந்திரசேகர் அவர்களுடன் துணைக் கோட்டகண்காணிப்பாளர் திரு சொர்ணம் அவர்களும் கலந்து கொண்டனர் .
ஏற்கனவே அளிக்கப்பட்ட நமது மாதந்திர கோரிக்கைகளுடன் விவாதித்தோம் பல்வேறு கோரிக்கைகளை திறந்த மனதுடன் தீர்வு காண முற்பட்டு அவைகள் தீர்க்கப்பட்டன.  அதற்காக நமது கோட்டகண்காணிப்பாளர் திரு சந்திரசேகர் அவர்களுக்கும் துணைக் கோட்டகண்காணிப்பாளர் திரு சொர்ணம் அவர்களுக்கும் நமது மனமார்ந்த நன்றிகள் 

நமது கோரிக்கைகளை ஏற்று கீழே கண்ட கோரிக்கைகள் தீர்வு காணபட்டன.
1. பாளையங்கோட்டை WPTC க்கு நமது நீண்ட நாள் கோரிக்கையை ஏற்று குடிநீர் உபகரணம் வழங்கிட RO ஒப்புதல் பெற்று அனுமதி வழங்கப்பட்டது. 
2. ராவணசமுத்திரம் அஞ்சலகத்தில் Generator உடனடியாக சரிசெய்ய நடவடிக்கை எடுக்கபட்டு சரிசெய்யபட்டது.
3. மணிமுத்தார் அஞ்சலகத்துக்கு நாற்காலி வழங்கப்பட்டது. 
4. நீண்ட நாட்களாக மறுசீராய்வுக்கு உட்படுத்தபடாத Sweeper/Scavenger/Water Carrier Allowance பிரச்சனைக்கு வழிஏற்பட உறுதி.

0 comments:

Post a Comment

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More

 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | Grants For Single Moms