ஆதார் அட்டைகளில் திருத்தங்கள் இருந்தால் இனி வரும் காலங்களில் மாவட்டம் தோறும் உள்ள அஞ்சல் அலுவலகங்களில் சரி செய்யலாம் என மத்திய அரசு அறிவித்துள்ளது
ஆதார் திருத்தங்கள் சரி செய்வதற்கு மக்கள் மிகுந்த சிரமத்துக்கு ஆளாகி
வருகின்றனர். இதனைக் கருத்தில் கொண்ட மத்திய அரசு, ஆதார் அட்டையில் உள்ள
திருத்தங்களை மாவட்டம் தோறும் உள்ள அஞ்சல் அலுவலகங்களில் மேற்கொள்ளலாம் என
தெரிவித்துள்ளது.
தமிழகத்தில், ஆதார் அட்டையில் திருத்தங்கள் மேற்கொள்ள முதற்கட்டமாக சென்னையில் உள்ள பத்து அஞ்சல் அலுவலகங்களில் புதிய வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.
அதன்படி, சென்னையில் உள்ள சென்னை தலைமை அஞ்சல் அலுவலகம், அண்ணாசாலை தலைமை அஞ்சல் அலுவலகம், தியாகராய நகர் அஞ்சலகம், மயிலாப்பூர், பரங்கிமலை, பூங்கா நகர், அசோக் நகர் உள்ளிட்ட பத்து அஞ்சலகங்களில் முதல்கட்டமாக ஆதார் திருத்தங்கள் மேற்கொள்ளப்படுகின்றன.
மத்திய அரசின் இந்த புதிய நடைமுறை, நாளை (திங்கட்கிழமை) முதல் சென்னை பெருநகரத்தில் அமலுக்கு வரவுள்ளது.
இதைத்தொடர்ந்து, தமிழகத்தில் பிற மாவட்டங்களில் உள்ள 2,515 அஞ்சல் அலுவலகங்களிலும் இந்தப் புதிய நடைமுறை விரைவில் அமலுக்கு வரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.