The Interest rates for Deposits is again lowered by 0.1% from 1st July 17

ஜூலை முதல் வட்டி விகிதம் மீண்டும் 0.1% குறைப்பு

Saturday, 20 April 2013

சொல்ல மறந்த கதைதான்.

தம்பிக்கு என ஆரம்பித்த அண்ணனுக்கு.............

சொல்ல மறந்த கதைதான் நாங்களும் சொல்ல விரும்பினால்  ?
வேண்டாம் உங்களை போல மாற நாங்களும் விரும்பவில்லை.


கூட்டு நடவடிக்கை குழு Notice க்கு பதில் சொல்ல விரும்பிய அண்ணா.......
எதற்கு எடுத்தாலும் "தான்" "தான்"  என்ற எண்ணம் கொண்ட தாங்கள் கூட்டு நடவடிக்கை குழு Notice க்கு தனி நபரை (தம்பியை) குற்றம் சுமத்துவதில் வியப்பில்லை. இருந்தபோதிலும் கூட்டு நடவடிக்கை குழு அமைப்பாளர் என்ற முறையில் பதில் சொல்ல விரும்புகிறேன்.
மூன்றாவது முறையாக FNPO சங்கம்  உங்கள் செயல்பாடுகளை  விமர்சனம் செய்வதாக குறிப்பிட்டுள்ளீர்கள்.  
விமர்சனத்தை எதிர்கொண்டு தானும் மாறிகொள்வது தான் சிறப்பு.
இல்லையேல் பதில் சொல்ல வேண்டும்  இத்தனை நாள் பதில் சொல்ல மறந்தது ஏன் ? இன்றாவது மவுனம் கலைந்ததற்கு சந்தோசமே.
 FNPO  பங்கு பற்றி குறிப்பிட்டுள்ளீர்கள்  நாங்கள் எந்த இடத்திலும் தவறான ஒன்றை சொல்லவில்லை  பெரிய சங்கம் போராட்டத்தை குலைக்கும்  போது என்ன நடக்கும் என நான் சொல்லி தாங்கள் தெரியவேண்டிய அவசியம் இருப்பதாக கருதவில்லை. 
12.12.2012  வேலை நிறுத்தத்தை முறியடிக்க NFPE க்கு எதிராக  நாங்கள் செய்த உள்ளடிகள்  உங்களால்  கூற முடியுமா ? என்றைக்கும் தொழிலாளர் மற்றும் தொழிசங்க நலன்களுக்கு எதிராக நாங்கள் செயல்பட்டதில்லை. அதே சமயம் 
FNPO பங்குபெறாத போது பாளை FNPO தோழர் வேலை செய்ய அனுமதித்தல் எப்படி குற்றமாகும் ? சிந்திப்பீர்.
R 4 குறித்து சரியான தகவல்கள்  மட்டுமே கொடுக்கபட்டுள்ளது. பொய்சொல்லி அரசியல் பொழப்பு நடத்தவேண்டிய அவசியம் எங்களுக்கு இல்லை. அத்தனைக்கும் மேலாக மனசாட்சி இருக்குமானால் சிந்திப்பீர்.
பல்வேறு JCA போராட்டங்களில் தங்களோடு கைகோர்த்து வந்ததை  மறைக்கலாமா ?   இல்லை மறுக்கமுடியுமா ?
ஆனால் இன்று FNPO ஏன் இந்த நிலை எடுத்தது என்பதையும், தங்களின் Double Stand ஐ முடிந்தால் எண்ணி பாருங்கள்........   
கடந்த 20,21 போராட்டத்தின் போது  10 தினகளுக்கு முன்பாக போராடுவதில்லை என முடிவெடுத்துவிட்டு இரு தினங்களுக்கு முன்பாக JCA சார்பாக Notice போடுவதற்கு FNPO ஒப்புதல் கேட்டது ஏன் ? பிறகு அனைத்து NFPE Member களையும் கூப்பிட்டு வேலை செய்ய சொன்னது ஏன் ? 
JCA ஏன் தங்களின் மத்திய மாநில தலைமைகளையும் மதிக்க தெரியாத நீங்கள் எங்களுக்கு சொல்ல முனையும் கதை தான் என்ன ? 
கதை சொல்லி இதுவரை ஏமாற்றியது போதும். உண்மை சற்று  கசக்கத்தான் செய்யும். மேலும் முறையாக அனைத்து சங்கங்களும் கலந்து கொள்ள அழைப்பு விடுத்தும் JCA கூட்டத்தில் கலந்து கொள்ள மறுத்தது ஏன்? உங்கள் நிலைப்பாட்டை அங்கே விளக்க வேண்டியது தானே? பெரும்பான்மை முடிவுக்கு கட்டுபடுவதை விட்டு விட்டு விதண்டா வாதம் செய்வது ஏன்?   
நீங்கள் எண்ணிக்கையில் பெரியவர்களாக இருக்கலாம் ? 
ஆனால் எண்ணத்தில் இல்லையே என்பதே எங்கள் வேதனை.
குழப்பவாதிகளை கொஞ்சம்  தள்ளி  வைத்தே  பார்போம் . ஆம் தொழிலாளர் பிரச்சனைக்கும் தொழிற்சங்க குழு மனப்பான்மைக்கும் வித்தியாசம் தெரியாத குழப்பவதிகளை சற்றே தள்ளிவைப்போம்.
பல்வேறுபட்டவர்களின் சிந்தனைகளை பிரசுரிப்பதோடு விட்டு விடாமல் சற்று உள்வாங்கி கொள்ள முயற்சியுங்கள்
இன்னும் காலம் கெட்டு போயிடவில்லை 
வாருங்கள் இணைந்த கரங்களாய் போராடுவோம்
நம் போராட்டம் அதிகார வர்க்கத்திற்கும்  அடக்குமுறைக்கும் எதிராக தானே தவிர நமக்குள் இல்லை.மனசாட்சி உள்ளவர்கள் சிந்திக்கட்டும். 

வேதனையோடு நாங்கள் சொன்னதை மீண்டும் இதோ கீழே தருகிறோம் மீண்டும் படித்து பாருங்கள் 

Friday, 19 April 2013

POSTAL JCA DEMAND REALISED

Filling up the vacancies in Higher Selection Grade- (HSG.I) in post Offices (POs) and Raitway Mail Service (RMS) Offices_Reg.
Click here to see the order.

அப்பாட! ஒருவழியா அறிவிச்சாச்சு

          THE CENTRAL GOVERNMENT TODAY APPROVED TO RELEASE  
8 %  HIKE IN DEARNESS ALLOWANCE TO CENTRAL GOVERNMENT EMPLOYEES AND PENSIONERS, THIS HIKE IS TO BE EFFECTIVE RETROSPECTIVELY FROM JANUARY 2013...

Thursday, 18 April 2013

The Reason for the delay in DA announcement

           According to the PIB release dated 13-4-2013 , The Union Finance Minister Shri P. Chidambaram left for one week two nation tour to Canada and USA on Sunday,14th April, 2013. The Finance Minister will leave for the back home on 20th April, 2013 and will arrive in the national capital on the early morning of 22nd April, 2013.

Monday, 15 April 2013

Tamilnadu Circle Gradation List of Postmasters Grade I & II

Tamil Nadu Circle Gradation List of Postmasters Grade I & II as on 01.07.2012 has been released
To see the list Click here

Tirunelveli Postal Division in Web

           A Blogspot has been created for our Tirunelveli Postal Division to update the information regarding this Division by Our Divisional administrationOur Divisional Union is welcome this decision and wish them to get success.

Sunday, 14 April 2013

Dr Ambedkar Birth Anniversary


பீமாராவ் பாபா சாஹிப் டாக்டர் அம்பேத்கர் அவர்கள் பிறந்த நாளில் நினைவு கூர்கிறோம்

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More

 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | Grants For Single Moms