The Interest rates for Deposits is again lowered by 0.1% from 1st July 17

ஜூலை முதல் வட்டி விகிதம் மீண்டும் 0.1% குறைப்பு

Showing posts with label Union. Show all posts
Showing posts with label Union. Show all posts

Monday, 24 February 2014

25வது தமிழ் மாநில மாநாட்டிற்கு பிரதிநிதிகள் பயணம்.

            
 
காஞ்சி மாநில மாநாட்டிற்கு நெல்லையில் இருந்து எழுவர்  பயணம்.

              நாளை 25.02.2014 தொடங்கி 27.02.2014 வரை மூன்று நாட்கள் காஞ்சிபுரம் மாநகரில் பேரறிஞர் அண்ணா அரங்கத்தில் வைத்து நடைபெறும் மூன்றாம் பிரிவின் 25வது  தமிழ் மாநில மாநாட்டிற்கு நெல்லை கோட்டத்தில் இருந்து ஏழு பேர் கலந்து கொள்கின்றனர்
கோட்ட தலைவர் திரு.E.ஆனந்தராஜ் அவர்கள் தலைமையில்
கோட்ட செயலாளர் திரு.S.A.இராமசுப்பிரமணியன்
திரு.J.குணா (எ) குணசேகரன்                     திருA.பாரதி 
திரு.M.இரமேஷ்                                               திரு.C.இராமர் 
திரு.M.நம்பிராஜன்                                         திரு.S.அந்தோணி பிச்சை ஆகியோர் கலந்து கொள்கின்றனர்.              மாநாடு சிறக்க வாழ்த்துகிறோம்.

மாநில செயற்குழு கூட்டம்

             நாளை 25.02.2014 தொடங்கி 27.02.2014 வரை மூன்று நாட்கள் காஞ்சிபுரம் மாநகரில் மூன்றாம் பிரிவின் 25வது  தமிழ் மாநில மாநாடு பேரறிஞர் அண்ணா அரங்கத்தில் வைத்து நடைபெறயிருக்கிறது . இதன் தொடக்கமாக இன்று காலை மாநில செயற்குழு கூட்டம் தொடங்கியது.
மாநில தலைவர் திரு விநாயகம் அவர்கள் தலைமையில் செயற்குழு கூட்டம் நடந்து வருகிறது. இதில் மாநில பொறுப்பாளர்கள் கலந்து கொண்டு விவாதித்து வருகிறார்கள்.
நமது திருநெல்வேலி கோட்ட செயலாளர் திரு.S.A.இராமசுப்பிரமணியன் அவர்கள் பார்வையாளராக கலந்து கொண்டுள்ளார்.

Wednesday, 19 February 2014

மாநில மாநாட்டு அழைப்பிதழ்.

 

NFPE & Mr.Mahadevaiah exploiting the sentiments of GDS.

NFPE, Secretary General Com.N.Krishnan and AIGDSU General Secretary, Sri.S.S.Mahadevaiah are not interested in settlement of GDS issues. They are exploiting the sentiments of GDS Employees to show their strength/supremacy to the Department.
FNPO and its affiliated union NUGDS  is not in the habit of cheating the poor GDS employees. We are pursuing the GDS demands/issues, Seriously, Vigorously, Continuously.
We trust that Joint struggles are the only way for settlement of GDS demands. We are ready for joint movement. FNPO &NUGDS will announce the programs shortly.

Click this link to see the statements of NFPE SG M.Krishnan &GS S.S.Mahadecaiah.AIGDSU

ஏமாளிகள் இருக்கும் வரை ஏமாற்றுபேர்வழிகள் இருப்பர்.
காலம் வரும் முகத்திரை கிழியும். 
இவர்கள் பதவி சண்டைக்கு அப்பாவி GDS ஊழியர்கள் பலி.

போராடும் போது மட்டும் கூட்டு போராட்டம்.
கிடைக்கும் வெற்றிக்கு தனக்கு மட்டும் சொந்தம் என கொண்டாடும் NFPE மனப்பான்மையை தேசிய சங்கம் சகித்து கொண்டது. 
ஏன் எனில் ஊழியர் நலன் மட்டும் கணக்கில் கொண்டு சுயநலமற்ற தொண்டில் தேசிய சங்கம் செயல்பட்டதால். அதனால் தான் தனி போராட்டம் என்ற போதும் அதே தேதியில் நாமும் போராடினோம். 
ஆனால் NFPE கலாசாரத்தில் ஊறி போன திரு மகாதேவயாவிடம் அதை எதிர்பார்க்க முடியாமா ? 
அதுதான் தற்போதைய பிரச்சனை.  

Inclusion of GDS in the 7th CPC

POSTAL DEPARTMENT REFERRED THE DEMAND FOR INCLUSION GRAMIN DAK SEWAKS IN 7th CPC TO DOP&T (GOVT.)

LETTER FROM DOP ADDRESSED TO SECRETARY GENERAL NFPE / FNPO:


No. 08/01/2014-SR
Ministry of Communications & IT
Department of Posts
(SR Section)

Dak Bhawan, Sansad Marg
New Delhi, dated 18th February, 2014

To
Shri M. Krishnan
Secretary General
National Federation of Postal Employees
Dada Ghosh Bhavan, 215/11
New Patel Road
New Delhi – 110 008

Shri D. Theagarajan
Secretary General
Federation of National Postal Organization
Chambri No. CH 17-1-18
Atul Grove Road
New Delhi – 110 001


Dear Sir,

Subject: Charter of Demands – regarding.


Your demand for inclusion of GDS in the 7th Central Pay Commission has been referred to DoP&T for a decision in the matter.

Yours faithfully,
(Arun Malik)
Director(SR)

Tuesday, 18 February 2014

போராட்டம் வெற்றிபெற வாழ்த்துகிறோம்.

           18.02.2014 முதல் தனது கோரிக்கைகளை வென்றெடுக்க போராடும்  தோழர்கள் (கிராமிய அஞ்சல் ஊழியர்கள்) வெற்றிபெற வாழ்த்துகிறோம்.
      
போராட்டங்களின் இலக்கு ஒன்றாக இருக்கும் போது
ஒன்று பட்ட போராட்டங்களே வெற்றியை தரும் என்ற நிலையில்
சுயநல விருப்புவெறுப்புகளை புறந்தள்ளி ஒன்று பட வேண்டுகிறோம். 
            ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு 
            ஒற்றுமை இல்லையேல் அனைவருக்கும் தாழ்வு  
             
என்ற வரிகளை மட்டும் நினைவு கூர்கிறோம்

Monday, 17 February 2014

பணி சிறக்க வாழ்த்துகிறோம்.

          அருமை இளவல்  திரு கோகுலகிருஷ்ணன் அவர்கள் தன்னை கோட்ட செயலாளர் பொறுப்பில் இருந்து விடுவிக்க கோரியதையடுத்து 16.02.2014 அன்று நடந்த பட்டுகோட்டை பொதுகுழுவில் மூன்றாம் பிரிவின் கோட்ட செயலாளராக புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள திரு.S.அருள்செல்வம் அவர்கள் பணி சிறக்க வாழ்த்துகிறோம்.



S.A. இராம சுப்பிரமணியன்
கோட்ட செயலாளர்

Saturday, 15 February 2014

அழைக்கிறது காஞ்சி....

தோழர்களே.
                     கட்டிட கலைக்கு கட்டியம் கூறும் காஞ்சி மாநகரம் புதிய எழுச்சி கண்டிட உங்களை அழைக்கிறது காஞ்சி நோக்கி..........
  

காஞ்சி நகரம்
தென்னிந்தியாவின் மிகவும் பழமையான நகரங்களில் ஒன்றாகும். இது பாலாற்றின் கரையில் அமைந்துள்ள நகரம்,
இந்த கோயில் நகர் காஞ்சிபுரம் மாவட்டத்தின் தலைநகருமாகும். 
இங்குதான் பிரசித்திபெற்ற காமாட்சியம்மன் கோயில், ஏகாம்பரநாதர் கோயில், வரதராஜபெருமாள் கோயில், கைலாசநாதர் கோயில் ஆகியவை அமைந்துள்ளன.
தமிழகத்தின் முன்னாள் முதலமைச்சர் பேரறிஞர் அண்ணா பிறந்த இடமெனும் சிறப்பையும் பெற்றது இந்நகரமாகும்.
காஞ்சிபுரம் நெசவுத்தொழிலுக்கும் மிகவும் புகழ் பெற்றது. இங்கு தயாரிக்கப்படும் காஞ்சிப் பட்டுப் புடவைகள் மிகவும் பிரபலமானவை.

நாயன்மார்களாலும், ஆழ்வார்களாலும் பாடற்பெற்ற தலங்களில் காஞ்சிபுரமும் முக்கியமானதாகும். அப்பர், சுந்தரர் மற்றும் சம்பந்தரால் ஏகாம்பரநாதர் மீது திருமுறைகளை புனைந்துள்ளார்கள்.  


ஆழ்வார்களான திருமங்கை ஆழ்வார், பூதத்தாழ்வார், பேயாழ்வார் நம்மாழ்வார் மற்றும் திருமழிசை ஆழ்வார் ஆகியோரால் மங்களாசாசனம் செய்யப்பட்ட பதின்மூன்று திவ்யதேசங்களான வரதராஜப் பெருமாள் திருக்கோயில், திருவெஃகா (சொன்னவண்ணம் செய்த பெருமாள் திருக்கோயில்) , அஷ்டபுஜகரம், திருஊரகம்-திருநீரகம்-திருகாரகம் அடங்கிய உலகளந்த பெருமாள் திருக்கோயில், திருக்கார்வண்ணப் பெருமாள் திருக்கோயில், வைகுந்தநாத பெருமாள் திருக்கோயில், பச்சைவண்ண-பவளவண்ண பெருமாள் திருக்கோயில், பாண்டவதூதர் பெருமாள் திருக்கோயில், நிலாத்திங்கள் துண்ட பெருமாள் திருக்கோயில், திருக்கள்வனூர், திருவேளுக்கை மற்றும் திருத்தண்கா ஆகியன விஷ்ணுக்காஞ்சியிலேயே அமைந்துள்ளன. பொய்கையாழ்வார், எம்பெருமானார் இராமனுஜர், திருக்கச்சி நம்பிகள், வேதாந்ததேசிகர், பிரதிவாதிபயங்கரம் அண்ணங்காச்சாரியர் ஆகிய வைணவப் பெரியோர்கள் இத்தலத்தோடு நெருங்கிய தொடர்புடையவர்கள்.

இன்னும் ஏராளமான சிறப்புகளுக்குரிய காஞ்சி மாநகரம்
2014 ம் ஆண்டு பெப்ரவரி  25, 26 மற்றும் 27 நாட்களில் உங்களை  
தமிழ் மாநில மாநாட்டிற்கு அழைக்கிறது        வாரீர்     வாரீர்                                

Friday, 14 February 2014

பல்வேறு பத்திரிக்கைகளின் போராட்ட செய்தி.

பெப்ரவரி 12, 13 தினத்தில் நடந்த 48 மணிநேர வேலை நிறுத்த போராட்டத்தில் பங்குபெற்ற அனைத்து தோழர்களுக்கும் நன்றி நன்றி நன்றி போராட்டசெய்தியை வெளியிட்ட பத்திரிகை அன்பர்களுக்கும்  
நன்றி நன்றி நன்றி
 







Thursday, 13 February 2014

SALUTE! SALUTE!! SALUTE!!!

We are receiving Messages from all over country that today STRIKE is 100%.
We salute our Divisional/Branch Secretaries and our colleagues for the victory of STRIKE.
Dear colleagues continue this tempo always.
D.Theagarajan, Secretary General, FNPO

Wishes From All India Union :

THE NUPE GROUP C SALUTES ALL THE WORKERS OF THE POSTAL DEPARTMENT FOR MAKING THE STRIKE ON THE FIRST DAY CENT PERCENT. WE REQUEST THE CADRE TO FOLLOW THE SAME TEMPO FOR EVER. TOKEN STRIKES ARE TO RECORD OUR PROTEST AND RESENTMENT AGAINST ANTI EMPLOYEES POLICIES OF GOVERNMENTS ( STATE) NOT AGAINST ANY PARTICULAR PARTY. FNPO BELIEVES IN THE DEMOCRATIC NON POLITICAL CONCEPT IN THE TU MOVEMENT. WE ONCE AGAIN SALUTE THE DEMOCRATIC FORCES WHO MADE THE  PROTEST  A SUCCESS AND A REALITY

Shri Kishan Rao, GENERAL SECRETARY

Wednesday, 12 February 2014

இரண்டு நாட்கள் வேலை நிறுத்தம்

சென்னை: புதிய ஓய்வூதிய திட்டத்தை கைவிட வேண்டும என்பது உட்பட 15 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி மத்திய அரசு நிறுவனங்களின் தொழிற்சங்கங்கள் இன்று முதல் முதல் இரண்டு நாட்கள் அகில இந்திய அளவில் வேலை நிறுத்தம் தொடங்கியுள்ளது. அதனால் கடிதங்கள் பட்டுவாடா உட்பட மத்திய அரசு துறைகளின் பணிகள் பாதிக்கப்படும் நிலை ஏற்பட்டுள்ளது. 
புதிய ஓய்வூதிய திட்டத்தை கைவிட வேண்டும், 
7வது ஊதியக்குழுவில் தொழிற்சங்க நிர்வாகி ஒருவரை உறுப்பினராக நியமிக்க வேண்டும் 
வேலைப்பளுவின் அடிப்படையில் சரியான கணக்கீட்டின்படி, தகுதியுள்ள தபால் நிலையங்களுக்கு தேவையான தபால்காரர்களை நியமனம் செய்யவேண்டும். பதவி உயர்வை 1-1-2006 முதல் அமல்படுத்தவேண்டும் என்பன உட்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அணுசக்தித்துறை, கணக்கு தணிக்கைத்துறை, வருமானவரித்துறை, சுங்க இலாகா உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்ட மத்திய அரசு நிறுவனங்களின் தொழிற்சங்கங்கள் இந்த வேலை நிறுத்தத்தில் பங்கேற்கின்றன. நாடு முழுவதும் நடைபெறும் இந்த வேலை நிறுத்தத்தில் தமிழகத்தில் உள்ள 1.5 லட்சம் மத்திய அரசு ஊழியர்கள் உட்பட நாடு முழுவதிலும் இருந்து சுமார் 12 லட்சம் பேர் இந்த வேலை நிறுத்தத்தில் பங்கேற்கின்றனர். அஞ்சல் துறையில் முக்கிய சங்கங்களான என்எப்பிஈ, எப்என்பிஓ (FNPO), அஞ்சல் ஊழியர் முன்னேற்ற சங்கம் உட்பட அனைத்துச் சங்கங்களும் பங்கேற்கின்றன. அதனால் கடிதங்கள் சேகரிப்பு, பட்டுவாடா, விரைவு அஞ்சல், பார்சல், சேமிப்பு உள்ளிட்ட சேவைகளும் பாதிக்கும் அபாயம் உள்ளது. 
 2 நாள் வேலைநிறுத்தத்தில் ஒட்டுமொத்த தபால் ஊழியர்கள் கலந்துகொள்வார்கள் என அறிவிக்கப்பட்டு இருப்பதால், நாடு முழுவதும் தபால் சேவை குறிப்பாக பட்டுவாடா முழுமையாக பாதிக்கும் என்று கூறப்படுகிறது. அது மட்டுமின்றி, தபால் நிலையங்களில் கார்டு, கவர், ஸ்டாம்ப் விற்பனையும் நடைபெறாது என்று போராட்டத்தில் ஈடுபடவுள்ள சங்கங்களின் நிர்வாகிகள் தெரிவித்தனர்.
நன்றி  : http://tamil.oneindia.in

நாடு முழுவதும் 48 மணி நேர வேலைநிறுத்த போராட்டம் தொடங்கியது

                
13.2.2014 - ஆர்ப்பாட்டத்தில்.
NFPE ,FNPO , மற்றும் PEPU  நிர்வாகிகள்
இன்று 12.02.2014 காலை முதல் 48 மணி நேர வேலைநிறுத்த போராட்டம்  தேசிய அளவில் தொடங்கியது. குறிப்பாக நமது நெல்லை கோட்டத்தில் ஏறத்தாழ அனைத்து தோழர்களும் ( 100 %  )போராட்டத்தில் கலந்து கொள்கின்றனர் என்ற மகிழ்ச்சியான செய்தியை தெரிவித்து கொள்கிறோம்.  நாடு முழுவதிலும் இருந்து வேலை நிறுத்த வெற்றி செய்திகள் வந்தவண்ணம் உள்ளன.

         இன்று காலை ஸ்ரீபுரம் திருநெல்வேலி தலைமை அஞ்சலகம் முன்பு நமது  கோட்ட தலைவர் திரு ஆனந்தராஜ் அவர்கள் தலைமையில் கூட்டு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது  இதில் இரு சங்கங்களின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.  நாளையும் பாளையங்கோட்டை &  திருநெல்வேலி தலைமை அஞ்சலகம் முன்பு பெருந்திரள் ஆர்ப்பாட்டம் நடத்த உத்தேசிக்க பட்டுள்ளது அனைவரும் கலந்து கொள்ள வேண்டுகிறோம்.

வெல்லட்டும்                                             வேலைநிறுத்தம் வெல்லட்டும்
நமது கோரிக்கைகள் எட்டட்டும்     மத்திய அரசின் காதுகளை எட்டட்டும்


மாநில சங்க வாழ்த்துக்கள் இதோ
 
Dear colleagues, 

The two days strike of entire Central Govt Employees including Postal commenced today.  The information received so far about the participation of the strike is either  total or near total in so many places of Tamil Nadu Circle.  The Circle Union congratulate all the circle office bearers , Divisional and Branch Secretaries those to have worked  tirelessly to make the strike very much successful and it also congratulates all the officials those who have participated in this historic strike.

 with kind regards

                                                                                                      G.P. MUTHUKRISHNAN
                                                                                                           CIRCLE SECRETARY


Monday, 10 February 2014

FNPO AFFLIATES DECIDED TO CONTINUE THE STRIKE

Today department called meeting to discuss the charter of demand. The following attended from FNPO side.

1.Sri D.Thagrajan
2.Sri T.N.Rahathe
3Sri D.Kishan Rao
4.Sri P.U.Murlidharan
5.R.K.Tripathi
                         The Department is not  ready to discuss part-1 of charter of demands.Staff side demanded to record our protest on the Charter of Demands relating to part I.It was agreed to  by the Official side and the Postal board will inform our displeasure to the Government.
 In  regard to Postal demands  under part II 9 items were discussed in Detail. Department is not ready to consider Postal demands seriously. FNPO recorded the protest to the official side .The earlier agreements  were also not honored fully.After the meeting the General secretaries discussed the Developments and unanimous  decision to go on strike as per the schedule.
The Branch /Divisional Secretaries are requested  to go with strike programme seriously and make thundering success
GENERAL SECRETARY

Saturday, 8 February 2014

காரைக்குடி தேசிய சங்க கோட்ட மாநாடு

09.02.2014 அன்று நடைபெறும் 29 வது காரைக்குடி தேசிய சங்க கோட்ட மாநாடு சிறப்புற வாழ்த்துகிறோம்
நிகழ்ச்சி நிரல் 

தலைமை : திரு CSP. வசந்தகுமார் அவர்கள் தலைவர் P3
                      திரு.C.சுப்பையா,அவர்கள், தலைவர் P4
வாழ்த்துரை :
                       திரு.P.  குப்புசாமி பாரதிஅவர்கள்  மாநில உதவிப்பொருளாளர்
                       திரு.K.V. ராஜன் அவர்கள் 
                       மாநில உதவிச்செயலாளர் P3   & மதுரை கோட்டச்செயலாளர்
                       திரு .G.சமுத்திர பாண்டியன் அவர்கள் 
                       கோவில்பட்டி கோட்டச்செயலாளர்
                       திரு.S.A.. இராம சுப்பிரமணியன்அவர்கள்  
                       திருநெல்வேலி கோட்டச்செயலாளர்

                       திருமதி. நதியா அவர்கள், சிவகங்கை கோட்டச்செயலாளர்
சிறப்புரை :
                      திரு  திரு.G.P. முத்து கிருஷ்ணனன் அவர்கள்  
                      மாநிலச்செயலாளர் P3
                      திரு.K. குணசேகரன்அவர்கள் மாநிலச்செயலாளர் P4
                      திரு.P. கோதண்டராமன் அவர்கள் மாநிலச்செயலாளர் GDS
                      திரு.N.J.உதயகுமாரன் அவர்கள் மண்டலச்செயலாளர் P3
                      திரு.A. பாண்டி அவர்கள் மண்டலச்செயலாளர் P4

Thursday, 6 February 2014

கோட்ட கண்காணிப்பாளர் அவர்களுக்கு நெஞ்சார்ந்த நன்றிகள்.

"போற்றுவோர் போற்றலும் தூற்றுவோர் தூற்றலும் கண்ணனுக்கே"
என்கிறது கீதை.                          நமது வேதனை கண்ணன் மேல் இல்லை.
எய்தவரை விட்டு அம்பை நொந்து என்னபயன் ?


       நேற்றைய பதிவில் நாம் திருநெல்வேலி டவுன் அஞ்சலகத்தில் இரவு காவலராக பணிபுரியும் நமது தோழர் திரு தங்கபாண்டியனுக்கு ஏற்பட்ட பிரச்சனையை கூறியிருந்தோம்.
யார் மனதையும் புண்படுத்துவது நமது நோக்கம் அல்ல.
ஆனாலும் திருநெல்வேலி டவுன் அஞ்சல் அதிகாரி தமது பொறுப்பை தட்டி கழிக்க முற்பட்டது தான் வேதனை.
தொடர்ந்து இதுபோல நமக்கு இழைக்கப்படும் அநீதிகளை கண்டு மனவேதனை அடைகிறோம். நமது கோட்டத்தில் அடிப்படை உரிமையை கூட போராடி பெறவேண்டிய நிலை வருத்ததுக்குரியது. எல்லா பிரச்சனைகளையும் அந்தந்த மட்டங்களில் தீர்க்கவே நமது விருப்பம்.
கோட்ட கண்காணிப்பாளரிடம் கொண்டு சென்று பெறவேண்டும் என்பது நமது நிலைப்பாடும் அல்ல.
இந்த பிரச்சனையை நமது கோட்ட கண்காணிப்பாளர் அவர்களிடம் கொண்டு சென்ற உடன்,  உடனடியாக தலையிட்டு C-Off  வழங்கிட உத்தரவிட்டதை நன்றியுடன் நினைவு கூர்கிறோம்.    
ஊழியர் தம் பிரச்சனைகளுக்கு தீர்வு வழங்கிட உடனடியாக முயற்சி எடுக்கும் நமது கோட்ட கண்காணிப்பாளர் அவர்களுக்கு நெஞ்சார்ந்த நன்றிகள்.

Wednesday, 5 February 2014

FNPO தோழருக்கு இழைக்கப்படும் அநீதி


           திருநெல்வேலி டவுன் அஞ்சலகத்தில் இரவு காவலராக பணிபுரியும் நமது தோழர் திரு தங்கபாண்டியனுக்கு திருநெல்வேலி டவுன் அஞ்சல் அதிகாரியால் தொடர்ந்து அநீதி இழைக்கபடுகிறது. கடந்த டிசம்பர் மாதம் முதல் இன்றுவரை தொடர்ச்சியாக சுமார் 45 நாட்கள் பணிபுரிகிறார். ஆனால் ஞாயிற்று கிழமைகளில் வாரந்திர விடுமுறையை மறுப்பதோடு  C Off கூட அளிக்க மறுக்கிறார்.
      உழைக்கும் வர்கத்திற்க்காக போராடுவதாக காட்டிகொள்ளும் தொழிற்சங்க வா(வியா)திகள் தொடர்ந்து தொழிற்சங்க பாகுபாடு காட்டுவது ஏன்?

          கடந்த வருடம் உறுப்பினர் சேர்க்கையின் போது அதே அலுவலகத்தில் FNPO தோழர்கள் இருவரை இதுபோல் மிரட்டி கையெழுத்து வாங்கியதைப்போல இவரிடமும் கையெழுத்து பெற மிரட்டும் தொனியில் செயல்பட தூண்டுவது யார் ?  இது யாருடைய ஆலோசனை ? 
அலுவகங்களில் தொழிற்சங்க பாகுபாடு ஏன் ?
          அதேசமயம் உங்கள் அலுவலகத்தில் மாற்று சங்க தோழர்களுக்கு அளிக்கும் சலுகைகளை நாங்கள் பட்டியல் இடட்டுமா?  மற்றவர்கள் பணியை முடிக்காமல் மதியம் 3 மணிக்கு செல்ல அனுமதிக்கும் நீங்கள் ஒரு ஊழியரின் அடிப்படை உரிமையை மறுப்பது ஏன்? 

Meeting at Directorate on Strike Demands

Directorate  called FNPO & NFPE federations to discuss charter of demands on 7.2.2014.

Monday, 3 February 2014

தோழர் முத்துசாமி அவர்களுக்கு பாராட்டு விழா

            02.02.2014 அன்று மதுரையில் நமது முன்னாள் தென்மண்டல செயலாளர் திரு முத்துசாமி அவர்களுக்கு பாராட்டு விழா மிகவும் சிறப்பாக நடைபெற்றது.
           இவ்விழாவை முன்னாள் அகில இந்திய உதவி பொது செயலாளரும் முன்னாள் தென்மண்டல செயலாளருமான திரு S.பாண்டியன் அவர்கள் தலைமையேற்க முன்னாள் மதுரை கோட்ட செயலாளர் திரு N. அய்யலு அவர்கள் முன்னிலை வகிக்க நமது மாநில செயலாளரும் அகில இந்திய உதவி பொது செயலாளருமான திருG.P. முத்து கிருஷ்ணன் அவர்கள் முன்னாள் தென்மண்டல செயலாளர் திரு S.ஆதிமூலம் அவர்கள் தென்மண்டல செயலாளர் திரு.N.J.உதயகுமரன் அவர்கள்
மதுரை கோட்டசெயலாளர் திரு.K.V. ராஜன் அவர்கள்
மதுரை NFPE P3 கோட்டசெயலாளர் திரு சுந்தரமூர்த்தி அவர்கள்
முன்னாள் மதுரை கோட்டசெயலாளர் திரு நாராயணன் அவர்கள்
P4 தென்மண்டல செயலாளர் திரு A.பாண்டி அவர்கள்
திருநெல்வேலி கோட்டசெயலாளர் திரு S.A. இராம சுப்பிரமணியன் அவர்கள் இராமநாதபுரம் கோட்டசெயலாளர் திரு முகமது இஸாதீன்அவர்கள் 
கோவில்பட்டி கோட்டசெயலாளர் திரு சமுத்திர பாண்டியன் அவர்கள் 
திண்டுக்கல் கோட்டசெயலாளர் திரு முத்தையா அவர்கள் 
மதுரை கோட்ட உதவி செயலாளர் திரு சேகர் அவர்கள் மற்றும் பலர் கலந்து கொண்டு வாழ்த்தினர்.
முடிவில் தோழர் முத்துசாமி அவர்கள் ஏற்புரை வழங்கினார். 

Saturday, 1 February 2014

Our Secretary General nominated in JCM

Cabinet Secretary and Department approved the nomination of our Secretary General as Member,National Council(JCM)
Click below link to see the letter.Page1        Page2                                                        

Deparment appeal to reconsider Strike

Deparment appeal our Federation to re-consider Strike decission.
Click here to see the Details

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More

 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | Grants For Single Moms