The Interest rates for Deposits is again lowered by 0.1% from 1st July 17

ஜூலை முதல் வட்டி விகிதம் மீண்டும் 0.1% குறைப்பு

Saturday 7 January 2012

மனப்பூர்வமான வாழ்த்துக்கள்



மாநில செயலாளருடன் நமது கோட்ட நிர்வாகிகள் 
                         
நான்காவது முறையாக மாநில செயலாளராக தேர்தெடுக்க பட்டுள்ள திரு G.P. முத்துகிருஷ்ணன்  அவர்களுக்கு திருநெல்வேலி கோட்ட சங்கத்தின் மனப்பூர்வமான வாழ்த்துக்கள்.

இரண்டாம் நாள் நிகழ்ச்சிகள்

                                      காலை  1000 மணி  முதல்  தொடங்கிய  subject committee விவாதத்தில்  ஏறக்கொறைய  50 கோட்டங்களின்  சார்பாளர்கள்  உரை  நிகழ்த்தினர் . சுமார்  12 மணிநேரம்  எவ்வித    கூச்சல்   குழப்பம்  இன்றி  மிகவும்  அமைதியாக  ஜனநாயக முறைப்படி விவாதங்கள் நடந்தன . இன்றைய  இலாகாவின் பிரச்சனைகள்  குறித்து  பேசினார் .

குறிப்பாக  மதுரை  கோட்ட  செயலாளர்  திரு  அய்யலு  அவர்கள்  SB minus balance பிரச்சனைகளை ஊழியர்கள் படும்  அவதிகள்  குறித்து விளக்கினர் .
கரூர்  கோட்ட செயலாளர் திரு சுகுமார்  அவர்கள்  தலைவர் KR அவர்களுக்கு தபால்  தலை  வெளியீட  சம்மேளனம்  முயற்சி  எடுத்திட  கோரிக்கை  விடுத்தார் .



நமது  திருநெல்வேலி  கோட்ட  செயலாளர் திரு இராம  சுப்ரமணியன்  பல்வேறு  பிரச்சனைகள் குறித்து தனது  கருத்தை  பதிவு  செய்தார். அவற்றில் சில.

  • வட்டி  விதிதங்களை  நிர்ணயிக்கும்  உரிமை  – பொதுத்துறை  நிறுவனங்களை  போல  அஞ்சல்  இலாகாவிருக்கு  வழங்க   வலியுறுத்த  வேண்டும் 
  • பழுதடைந்த  computer printer களுடன்  போராடும்  அலுவலங்களுக்கு  புதிய  computer printer வழங்க  வேண்டும் 
  • PLI RPLI Decentralised காரணமாக  ஏற்பாடும்   சிரமங்களுக்கு தீர்வு ஏற்படுத்த  வேண்டும் 
  • பணி வழங்க படாமல்  இறுக்கும்  RRR Candidates பிரச்சனைகளுக்கும்  உடனடி  தீர்வுவாக  பணி  வழங்க  பட  வேண்டும் .
(அதற்கு பதிலுரையில் நமது  மாநில  செயலாளர்  ஏறக்குறைய  95 பேரில்  70 க்கு  மேற்பட்டவர்களுக்கு   நமது  தேசிய  சங்கத்தின்  தொடர்  போராட்டத்தின்  மூலம்  Chennai நகர  மண்டலத்தில்  பணி  வழங்கிய  திரு ராமானுஜம்  PMG அவர்களுக்கு  நன்றியை  தெரிவித்தார் . மற்றவர்களுக்கும்  விரைவில்  பணி   கிடைக்க ஆவணம்  செய்வதாக  உறுதி  யளித்தார்கள் )

  • IP examination க்கு LGO exam  கொடுத்தது  போல  புதிய தேர்வு முறையில் Extra வாக 2 Chances வழங்கப்பட  வேண்டும் 
  • IP examination க்கு PM Cadre officials க்கு தேர்வு எழுத  வாய்ப்பு வழங்கப்பட வேண்டும் .
  • Postmaster Cadre க்கு Cadre Restructring ன் போது Grade Pay 4200 பெற்று தர  சமேளனத்தை கேட்டு கொண்டார் 
  • LR பணியிடங்கள்  கண்டறியபட்டு LR List  வெளியிடப்பட  வேண்டும் 
  • குறிப்பாக தெற்கு  மண்டலத்தில் PM Cadre பணி இடங்களில்  தடாலடி  இட மாறுதல்  தடுத்து  நிறுத்த  பட  வேண்டும் 
  • எல்லா  போரட்டமும்  குறிப்பிட காலவரையுடன்  நடைபெற வேண்டும் என்றும்  அதன்மூலம்  போரட்ட முறைகள்  கால  சுழலுக்கு  ஏற்ப  மாற  வேண்டிய  அவசியத்தை வலியுறுத்தினார்
என்பது  போன்ற  பல்வேறு பிரச்சனைகள்  குறித்து  தனது கருத்தை தெரிவித்தார் .

மாநாட்டின் முதல் நாள் நிகழ்ச்சிகள்

 காலை தேசிய கொடியும் மற்றும் சங்க கொடியேற்றத்துடன் தொடங்கியது. மாலை 4 மணிக்கு ஊர்வலமும் அதனை தொடர்ந்து பொது அரங்க நிகழ்ச்சியும் நடந்தன.




திரு இராமச்சந்திரன் மாநில தலைவர் அவர்கள் தலைமை வகித்தார்.
வரவேற்புரையை வரவேற்புககுழு தலைவர் நிகழ்த்தி னார்  .


துவக்க உரையை மாநில செயலாளர் திரு G.P. முத்து கிருஷ்ணன் அவர்கள் நிகழ்த்தினார்.
அப்போது இந்திய பொருளாதார வளர்ச்சியில் பொதுத்துறை நிறுவனங்களின் பங்களிப்பையும் முக்கியத்துவத்தையும் விளக்கினார்  .  நிறுவனத்தின் தற்போதைய நிலைமையையும் அதே சமயம் நமது நிலையையும் அதற்கு நமது சங்கங்களின் பங்களிப்பையும் விளக்கினார் .
அரசின் புதிய பென்ஷன் திட்டத்தை கடுமையாக விமர்சித்தார்.
                                                                    அதனை தொடர்ந்து நமது சகோதர சங்கங்களின்                                                                                                                        மாநில நிர்வாகிகள் பலரும் உரை  நிகழ்த்தினர்.
 நிறைவாக சம்மேளன பொது செயலாளர் திரு தியாகராஜன் அவர்கள் சிறப்புரை நிகழ்த்தினார்
குறிப்பாக வருகின்ற தொடர் வேலைநிறுத்த போராட்டத்தின் காரணம்,சூழ்நிலையை விளக்கினார் .  தொடர் வேலைநிறுத்த போராட்டத்தின் அவசியத்தையும் விளக்கினார்.
                       உலகளாவிய  postal மாற்றம்  அதனை  தொடர்ந்த  தாக்கம்  குறித்தும்  பேசினார். Relocation of Postoffices, அதற்கு  இலாகா  கொடுத்த  உறுதிமொழி   அதனை  தொடர்ந்து   இலாகாவின்  செயல்பாட்டில்  மாற்றம்.  கொடுத்த  உறுதிமொழியை  காற்றில்  பறக்க  விடும்  இலாகா  குறித்து  தனது  அதிருப்தியை  வெளிபடுத்தினார் . 
முதல்  நாள்  நிகழ்ச்சி  இனிதே  நிறைவுற்றது .


புதிய வடிவில் WEB PAGE

 இந்த தற்போதைய View - Internet Explorer Version New , Google Chrome and Mozilla Firebox   போன்றவற்றில் மட்டும் பார்க்க முடிவதால் , பரந்து பட்ட தமிழகம் முழுதும் உள்ள  தோழர்களின் ஏகோபித்த விருப்பத்திற்கு இணக்க இன்று முதல் மாற்றம் செய்கின்றோம். எப்போதும் போல தங்களின் மேலான ஆதரவை வேண்டுகின்றோம்  நன்றி 

Thursday 5 January 2012

இன்று மாநில மாநாட்டின் இரண்டாம் நாள்:
                 Seminars
" Government Postal Service should be override private couriers - Responsibility rests with the Staff " 
          By Shri.M.S.RAMANUJAN  I.P.S., Postmaster General CCR Chennai. 
" Participation of Woman Employees in Trade Union Activities"
By Smt.R.VIJAYALAKSHMI, Women's Wing NUPE P3
      Smt.N.Kannamal, South Zone LIC Employees Co-ordination Committee, Pudukottai


Subject Committee will be held from 1000 Hrs to Till the end of Conference

Wednesday 4 January 2012

கோலாகலமாக துவங்கியது மாநில மாநாடு

                            இன்று 24 வது மாநில மாநாடு புதுக் கோட்டை மாநகரில்  கோலாகலமாக துவங்கியது. காலைமுதலே மாநாட்டின் சார்பாளர்களும் பார்வையாளர்களும் வரத்தொடங்கினர். தங்களது வருகையை பதிவுசெய்தனர். இன்று மாலை 3 மணிக்கு ஊர்வலமும் அதனை தொடர்ந்து பொது அரங்க  நிகழச்சியும் நடைபெறும்.
பொது அரங்கில்
FNPO Secretary General திரு தியாகராஜன் அவர்களும்
மூன்றாம் பிரிவின் பொது செயலாளர் திரு கிஷன் ராவ் அவர்களும் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றுகின்றனர்.

 மேலும் தகவல்களை அவ்வப்போது உங்களுக்கு தருகிறோம் தொடர்ந்து பார்க்கவும் நன்றி

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More

 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | Grants For Single Moms