திருநெல்வேலி கோட்டம் தேசிய அஞ்சல் ஊழியர் சங்கத்தின்
சிறப்பு பொதுக்குழு கூட்டம் 16.10.2013 அன்று மாலை 4 மணிக்கு திருநெல்வேலி தலைமை அஞ்சலகத்தில் வைத்து
மரியாதைக்குரிய தலைவர் திரு.E. ஆனந்தராஜ் அவர்கள் தலைமையில் நடைபெற்றது கூட்டத்தில் ஏராளமான உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் ஊழியர் மட்ட பிரச்சனைகள் விவாதிக்கபட்டன. பல்வேறு ஊழியர்கள் நமது கோரிக்கைக்கு பாராமுகம் காட்டும் கோட்ட மற்றும் மண்டல நிர்வாகங்களின் செயல்களை கண்டித்து பேசினார்.
கடந்த ஏப்ரல் 2013 போல வருகின்ற 2014 ம் ஆண்டும்
புதிய உறுப்பினர் சேர்க்கைக்கு அனைவரும் ஒத்துழைத்து அதிக உறுப்பினரை சேர்க்கவும்,
வருகின்ற நமது
25வது கோட்ட
"வெள்ளி விழா" மாநாட்டை டிசம்பர் திங்கள் சிறப்பாக நடத்துவது என்றும் முடிவு செய்யப்பட்டது.
மாநாட்டில் மூத்த உறுப்பினர்கள் திரு சுப்பிரமணியன் திரு குணா திரு பாரதி
திரு இராமர் திரு சபரி மணிகண்டன் திரு சுடலைமுத்து
திரு காளிதாசன் திரு சங்கரலிங்கம் திரு இராமலிங்கம்
திரு பால்பாண்டி திரு தர்மர் திரு திருநாமம் திரு சோமசுந்தரம்
திரு வெங்கிடாசலம் திரு கற்பகராஜ் திரு ஆனந்தன்
மற்றும் பலர் கலந்து கொண்டனர.
திரு சுப்பிரமணியன் அவர்கள் நன்றி நவில கூட்டம் இனிதே நிறைவுற்றது.
அன்புடன் :
S.A. இராமசுப்பிரமணியன், கோட்டசெயலாளர்,
மூன்றாம் பிரிவு
A. காளிதாசன், கோட்டசெயலாளர்,
தபால் காரர் & பன்முக திறன் ஊழியர்கள் பிரிவு
D. செய்யது அஹமது கபீர், கோட்டசெயலாளர்,
கிராமிய அஞ்சல் ஊழியர்கள்