The Interest rates for Deposits is again lowered by 0.1% from 1st July 17

ஜூலை முதல் வட்டி விகிதம் மீண்டும் 0.1% குறைப்பு

Friday, 4 July 2014

ஆனிமாத திருத்தேரோட்டம் மற்றும் தேர்தல் சிறப்பு மாநாட்டு அழைப்பு.

 
தேசிய நெஞ்சங்களே 
சில மாதங்களாக நமது மாநில சங்கத்தில் ஏற்பட்டிருக்கும் சுணக்க நிலையை முடிவுக்கு கொண்டு வரவும், தினம் தினம் ஏற்படுத்தப்படும் புது புது தடைகளை தூள் தூளாகவும்  

பாடுவோமே பள்ளு பாடுவோமே ஆனந்த சுதந்திரம் அடைந்து விட்டோம் என நாமும் ஆனந்த கூத்தாடிட ………………………..   
நம் கனவு மெய்ப்பட எம் பாரதி உலாவிய கோவில்பட்டி நோக்கி 
அழைக்கிறோம் வாரீர் வாரீர்

மாநில தேர்தல் சிறப்பு மாநாட்டிற்கு வரும் தேசிய நெஞ்சங்களே  
நெல்லையில் அசைந்தாடும் ஆனி திருத்தேர் அழகை கண்டுகளிக்க ஆசையா உங்களுக்கு? 

10.07.2014 அன்று ஸ்ரீ நெல்லையப்பர்-காந்திமதியம்மாள் ஆனிமாத திருத்தேரோட்டம் நடைபெறுகிறது. மாநாட்டிற்கு வரும் அன்பர்கள் காலையில் நேராக நெல்லை நோக்கி வருக. சரியாக காலை 8 மணிக்கு திருத்தேர் வடம் பிடித்து இழுக்கப்படும். அதை கண்டு கழித்து விட்டு 1 மணி நேர பயண தூரத்தில் கோவில்பட்டியை அடையலாம். தேர்தல் சிறப்பு மாநாட்டில் பங்குபெற்று ஜனநாயக கடைமையை ஆற்றலாம் வாரீர் வாரீர்.
மேலதிக விவரங்களுக்கு எமது கோட்ட நண்பர்களை தொடர்பு கொள்ளவும். நன்றி நன்றி

Protest against arbitrary grant of TU facilities to BPEFProtest against arbitrary grant of Trade Union facilities to Bharathiya Postal Employees Federation (BPEF) and all its affiliated unions 

No merger of DA - Finance Ministry

Finance Ministry once again ruled out any possibility of merger of D.A. with basic pay for central employees. In a letter addressed to National Council Secretary Shri Shiva Gopal Mishra on 17.6.2014, regarding the main demand of merger of dearness allowance with basic pay, Govt sticked on the resolution taken on 29.08.2008 in respect of definite proposal of sixth pay commission (No merger of D.A.). 

This has been a long standing demand for central employees and it will certainly dishearten them.
View the letter from Dept. of expenditure (Finmin)


மாநில தேர்தல் சிறப்பு மாநாடு.

இடம்           :  L.G.செல்வமஹால் - கோவில்பட்டி
நாள்             :  10.07.2014   வியாழன்         நேரம் :  காலை 0900 மணி
தலைமை  : திரு.P.திருஞான சம்பந்தம் அவர்கள் 
                        Convenor, Adhoc-Committee NAPE Gr C, Tamilnadu Circle
பொருள்      : மாநில நிர்வாகிகள் தேர்வு
சிறப்புரை   : திரு.D.தியாகராஜன் அவர்கள்
                       மஹா பொதுச்செயலாளர், தேசிய அஞ்சல் ஊழியர் சம்மேளனம்
                       திரு.D.கிஷன் ராவ் அவர்கள் 
                       அகில இந்திய பொதுச்செயலாளர் P3 புது டெல்லி
                       திரு. P.S. பாபு  அவர்கள்
                       முன்னாள் அகில இந்திய பொதுச்செயலாளர் P3

அனைவரும் வருகை தந்து மாநாட்டை சிறப்பிக்க அன்புடன் வேண்டுகிறோம்
============================
P.திருஞான சம்பந்தம்
Convenor, Adhoc-Committee NAPE Gr C, Tamilnadu Circle
வரவேற்பு குழு தலைவர்
வரவேற்பு குழு உறுப்பினர்கள்
மோகன்ராவ், கோட்டசெயலாளர் கிருஷ்ணகிரி
ஸ்ரீநிவாசன்,திருச்சி 
J. குணசேகரன்,திருநெல்வேலி

தகவல் : மாநில சங்க வலையதளம்  www.fnpotamilnadu.blogspot.in

Thursday, 3 July 2014

Message of Secretary (Posts) for the staff and officers of the Department over the IT Project.

Dear colleagues,

     It gives me immense pleasure to update you about the ambitious IT Modernization project of the Department of Posts. As you know, with this project we have embarked upon a transformational journey. I take this opportunity to congratulate and thank each one of you for your dedication and hard work to bring about this historic transformation.

     At this point in time, we have already networked close to 23,000 locations, making our the largest WAN in the country. Implementation of our Core Banking System and PLI solutions have attained a critical mass, which will enable us to undertake performance testing & certification before further roll outs. Core SI solutions relating to Mail Operations, Human Resources and F&A are in the UAT stage; and we are nearing identification of a vendor for the Rural Hardware program to support the modernization of our rural post offices.

       Implementation of the CBS and Core-PLI solutions has been gradual by design so that we can pinpoint errors/ defects in the solutions and address them appropriately, before graduating to an exponential roll-out phase. As expected, officers and staff are facing some challenges during the initial implementation phase. While we continue to strengthen the solutions based on these valuable experiences, the extra mile that you all have traversed in order to manage these challenges is commendable. 

        As the implementation gathers steam, I would request each one of you to keep up the energy & commitment you have demonstrated so far. We will make sure that the required technical and administrative support for success is made available.

       The primary objective of the IT modernization project has been to enhance customer, satisfaction through better service delivery. The project will enhance the Post Offices capabilities, and enable it to deliver more efficient services, and more add-on services & products. Hon’ble Prime Minister of India has also urged the Department to fast-track the IT-modernization project and improve the quality of service. Thus, being sensitive and responsive to the customer is the need of the hour. 

      You will agree that it is a matter of great pride for each one of us to be associated with this huge transformational project. We must now work hand in hand to make this historical transformation happen quickly.

Together we can, and we will do it!!

Kavery Banerjee
Secretary (Posts)

Wednesday, 2 July 2014

Federation NEWS

அஞ்சல் துறையில் லஞ்சம் - இந்து நாளிதழில் செய்தி காற்றில் பறக்கும் மானம்

அஞ்சல் துறை ஊழியர்கள் பரஸ்பர இடமாறுதல் (Mutual Transfer) வேண்டி வேறு ஊரில் பணிபுரியும் ஊழியர்களை அணுகும்போது, அவர்களிடம் சம்பந்தப்பட்ட சில ஊழியர்கள் லஞ்சம் கேட்பதாக புகார் எழுந்துள்ளது.
இந்தியாவின் பழைமையான துறைகளில் அஞ்சல் துறையும் ஒன்று. இந்தியா முழுவதும் சுமார் 4.5 லட்சத்துக்கும் அதிகமான ஊழியர்கள் அஞ்சல் துறையில் பணியாற்றி வருகின்றனர். இதில் துறைசார் ஊழியர்களும், EDS எனப்படும் கூடுதல் துறை ஊழியர் களும் அடக்கம். தமிழகத்தில் மட்டுமே அஞ்சல் துறையில் 30,000-த்துக்கும் அதிகமான ஊழியர்கள் பணிபுரிகின்றனர்.
வேறு ஊரில் வேலை
இதில் வட்டம், மண்டலம், பிரிவு, இணை என பல்வேறு வகையான அலுவலகங்கள் இயங்கி வருகின்றன. இவற்றில் அஞ்சல் உதவியாளர்கள், கணக்கர்கள், பல்பணி ஊழியர்கள் (multi tasking staff) என்று பல மட்டங்களில் ஊழியர்கள் பணி செய்து வருகின்றனர். அஞ்சல் துறையால் நடத்தப்படும் தேர்வுகளின் மூலம் மேற்கண்ட பொறுப்புக்கு வரும் இவர்களுக்கு, எடுத்த எடுப்பிலேயே நினைத்த இடத்தில் வேலை கிடைப்பதில்லை. இப்படி தேர்வாகும் ஊழியர்கள் வேலை கிடைக்கின்ற ஊரில் உள்ள அலுவலகத்தில் குறிப்பிட்ட சில ஆண்டுகளுக்கு பணிபுரிந்துவிட்டு, அதன்பின்னர்தான் இடமாறுதலுக் காக விண்ணப்பிக்க முடியும்.
பரஸ்பர இடமாறுதல்
இது தவிர பரஸ்பர இடமாறுதல் என்னும் வசதியும் அஞ்சல் துறையில் உள்ளது. அதாவது திருநெல்வேலியில் பணிபுரியும் ஒரு ஊழியருக்கு சென்னைக்கு இடமாறுதல் வேண்டுமென்றால், அவரைப்போலவே சென்னையில் பணிபுரிந்து கொண்டு திருநெல் வேலிக்கு இடமாறுதல் வேண்டி காத்திருக்கும் ஒருவரை அணுகி இருவரும் பரஸ்பர இடமாறுதல் கோரலாம். அப்படி அவர் ஒப்பு கொள்கிற பட்சத்தில் பரஸ்பர இட மாறுதல் முறைப்படி இருவரும் தங்களது வேலையிடங்களை மாற்றிக்கொள்ளலாம்.
ஆனால் இந்த முறையிலும் இப் போது சில முறைகேடுகள் நடப்ப தாகக் கூறப்படுகிறது. சிலர் அவ சரத்துக்காக பரஸ்பர இடமாறுதல் வேண்டி சில ஊழியர்களை அணுகுகிறபோது இடமாறுதல் கோரி வருபவர்களிடம் கணிச மானத் தொகையை கேட்பதாக புகார் எழுந்துள்ளது.
இதுதொடர்பாக திண்டுக்கல் அஞ்சல் பிரிவின்கீழ் வரும் ஒரு இணை அலுவலகத்தில் பணி புரியும் பெயர் வெளியிட விரும்பாத ஊழியர் ஒருவர் கூறுகையில், “எனக்கு சொந்த ஊர் கோவை பக்கம். தேர்வின் மூலம் அஞ்சல் துறை உதவியாளர் பணிக்கு சேர்ந் தேன். சில மாதங்களுக்கு முன்பு தான் திருமணம் ஆனது. எனது கணவர் சென்னையில் மென் பொருள் நிறுவனம் ஒன்றில் பணியாற்றி வருகிறார். பரஸ்பர மாறுதல் கிடைத்தால் சென்னைக்கு செல்லலாம் என் நினைத்தேன்.
இந்நிலையில் திண்டுக்கல்லை சேர்ந்த ஒருவர் சென்னை பிரிவில் பணியாற்றுவது தெரியவந்தது. இது தொடர்பாக அவரை அணுகிய போது, பரஸ்பர இடமாறுதல் செய்ய வேண்டுமென்றால் ரூ. 1 லட்சம் தரவேண்டும் என்றார். நான் அதற்கு சம்மதிக்காமல் அந்த முடிவை கைவிட்டுவிட்டேன் என்றார்.
ஏற்கமுடியாது
இது தொடர்பாக அனைத்திந்திய தபால்துறை ஊழியர்கள் கூட்ட மைப்பின் தமிழக மாநில செய லாளர் ஜெ.ராமமூர்த்தியிடம் கேட்ட போது, “சென்னையில் வேலை செய்யும் ஒரு ஊழியருக்கு மற்ற ஊர்களில் வேலை செய்பவர் களைக் காட்டிலும் சலுகைகள் அதிகம். எனவே அதை ஈடு செய்யும் விதமாக சிலர் இப்படி செய் யலாம். ஆனால் இதை ஒரு போதும் ஏற்க முடியாது” என்றார்.
நடவடிக்கை உறுதி
இந்தப் பிரச்சினை குறித்து சென்னை வட்ட பொது அஞ்சல் துறை அதிகாரி மெர்வின் அலெக்ஸாண்டர் கூறுகையில், “அஞ்சல் துறையை பொறுத்த வரை பரஸ்பர இடமாறுதல் நினைத்த போதெல்லாம் கிடைக் காது. பரஸ்பர மாறுதலுக்காக விண்ணப்பதாரர் சொல்லும் காரணங்கள் ஏற்புடையதாக இருக்க வேண்டும். மேலும் பரஸ்பர இடமாறுதலுக்கு யாரேனும் பணம் கேட்டால் அது குறித்து பயப்படா மல் புகார் அளிக்கலாம். புகார் அளிப்பவரின் விவரம் ரகசியம் காக்கப்படுவதுடன் லஞ்சம் கேட் கும் ஊழியர் மீது உரிய நட வடிக்கை எடுக்கப்படும்” என்றார்.
பரஸ்பர இடமாறுதலுக்கு யாரேனும் பணம் கேட்டால் அது குறித்து பயப்படாமல் புகார் அளிக்கலாம் என அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

Monday, 30 June 2014

மே மாதம் வரை 6 சதவிகிதம் DA உயர்வு

AICPIN for the month of May2014
Consumer Price Index Numbers for Industrial Workers (CPI-IW)- May2014
According to a press release issued by the Labour Bureau, Ministry of Labour & Employment the All-India CPI-IW for May, 2014 increased by 2 points and pegged at 244 (two hundred and forty four only)
மே மாதம் வரை 6 சதவிகிதம் DA உயர்ந்து 106 சதவிகிதத்தை தொட்டது. ஜூன் மாதம் வரையிலான உயர்வை அறிய ஜூலை 31 ம் தேதி வரை காத்திருக்கவும்.
 

மணநாள் வாழ்த்து

30.06.2014 அன்று மணநாள் காணும் நமது சேலம் மேற்கு கோட்ட செயலாளர் திரு.M.துரைசாமி - திருமதி C.தமிழ்செல்வி அவர்களின் புதல்வி
மணமகள் செல்வி D.நிரஞ்சனா,B.E.,             Weds
மணமகன் செல்வன் K.ராம்குமார், B.E.,
இணை வாழ்வில் வளம் பதினாறும் பெற்று  பல்லாண்டுகள்  வளமுடன் வாழ வாழ்த்துகிறோம்.
இடம் :T.A.ராமசாமி முதலியார் அம்மணியம்மாள் திருமண மண்டபம்   
            திருச்செங்கோடு 
நாள்   : 30.06.2014  திங்கள் கிழமை
நேரம் : காலை 06 மணிக்கு மேல் 07 மணிக்குள்
29.06.2014  அன்று நடைபெற்ற மிக பிரமாண்ட திருமண வரவேற்பு விருந்தில் நமது தமிழ் மாநில சங்கத்தின் சார்பாக
தூத்துக்குடி கோட்ட செயலாளர் திரு.N.J.உதயகுமாரன்,
திருநெல்வேலி கோட்ட செயலாளர் திருS.A. இராம சுப்பிரமணியன் ஆகியோர் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினர்.

மணநாள் வாழ்த்து.

30.06.2014 அன்று மணநாள் காணும் நமது தேசிய சங்க துணை தலைவர்
திருP.சுப்பிரமணியன் அவர்களின் புதல்வி
மணமகள் செல்வி S. சிவபிரியா B.E., Weds
மணமகன் செல்வன் P.சண்முகராஜா B.A., B.L., அவர்கள்
இருவரும் வாழ்வில் வளம் பதினாறும் பெற்று வளமுடன் வாழ வாழ்த்துகிறோம்.

நாள் :  30.06.2014                         இடம் : KTC நகர் மகராசி மஹால்
நேரம் : காலை 1000 மணி முதல்

"வாழ்க வள்ளுவம் காட்டிய வழி" என வாழ்த்துவோம் வாரீர் தோழர்களே !

Sunday, 29 June 2014

Happiness let's begin.........

புனித குரானை இவ்வுலகிற்கு தந்த புனித ரமலான் மாதத்தின் தொடக்கம் இன்று.  இந்நாள் அனைவருக்கும் அன்பையும் சமாதானத்தையும் கொண்ட வளமான வாழ்வின் தொடக்கமாகட்டும்.
        இஸ்லாத்தின் ஐம்பெரும் கடமைகளில் ஒன்றான உண்ணா நோன்பை இன்றுமுதல் நோர்க்கபோகும் இனிய இசுலாமிய பெருமக்கள் அனைவருக்கும் எமது வாழ்த்துக்கள் உரித்தாகட்டும்.

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More

 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | Grants For Single Moms