The Interest rates for Deposits is again lowered by 0.1% from 1st July 17

ஜூலை முதல் வட்டி விகிதம் மீண்டும் 0.1% குறைப்பு

Thursday, 20 February 2014

பாராட்டு விழா

அன்பார்ந்த தோழர்களே
                           கடந்த 10 ஆண்டுகளாக மாநில செயலாளராக சிறப்பாக பணியாற்றி வருகின்ற 28.02.2014 அன்று பணி ஓய்வுபெரும்
நமது மாநில செயலாளர் திரு முத்து கிருஷ்ணன் அவர்களுக்கு 
சிறப்பாக பாராட்டு விழாவை நடத்துவதற்கு உத்தேசித்து,
அவ்விழா மாநில மாநாட்டு அரங்கில் 27.02.2014 அன்று காலை 10 மணிக்கு மூன்றாம் நாள் நிகழ்ச்சியின் தொடக்கமாக நடைபெற இருக்கிறது. இந்த அறிய வாய்ப்பில் அனைத்து கோட்ட கிளை செயலர்களும் பங்குபெற்று சிறப்பிக்க வேண்டுகிறோம்.

நிகழ்ச்சி ஏற்பாடு :  திருநெல்வேலி மற்றும் தூத்துக்குடி கோட்டம்.

50% DA Merger.

மத்திய அரசின் மந்திரிசபை கூட்டம் இன்று காலை நடைபெற்றது.
அதில் 50 சதவிகிதம் அகவிலைப்படி அடிப்படை சம்பளத்துடன் இணைப்பு அளிக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது. 
முறையான அறிவிப்பு எதிர்பார்க்கபடுகிறது.

Wednesday, 19 February 2014

மாநில மாநாட்டு அழைப்பிதழ்.

 

NFPE & Mr.Mahadevaiah exploiting the sentiments of GDS.

NFPE, Secretary General Com.N.Krishnan and AIGDSU General Secretary, Sri.S.S.Mahadevaiah are not interested in settlement of GDS issues. They are exploiting the sentiments of GDS Employees to show their strength/supremacy to the Department.
FNPO and its affiliated union NUGDS  is not in the habit of cheating the poor GDS employees. We are pursuing the GDS demands/issues, Seriously, Vigorously, Continuously.
We trust that Joint struggles are the only way for settlement of GDS demands. We are ready for joint movement. FNPO &NUGDS will announce the programs shortly.

Click this link to see the statements of NFPE SG M.Krishnan &GS S.S.Mahadecaiah.AIGDSU

ஏமாளிகள் இருக்கும் வரை ஏமாற்றுபேர்வழிகள் இருப்பர்.
காலம் வரும் முகத்திரை கிழியும். 
இவர்கள் பதவி சண்டைக்கு அப்பாவி GDS ஊழியர்கள் பலி.

போராடும் போது மட்டும் கூட்டு போராட்டம்.
கிடைக்கும் வெற்றிக்கு தனக்கு மட்டும் சொந்தம் என கொண்டாடும் NFPE மனப்பான்மையை தேசிய சங்கம் சகித்து கொண்டது. 
ஏன் எனில் ஊழியர் நலன் மட்டும் கணக்கில் கொண்டு சுயநலமற்ற தொண்டில் தேசிய சங்கம் செயல்பட்டதால். அதனால் தான் தனி போராட்டம் என்ற போதும் அதே தேதியில் நாமும் போராடினோம். 
ஆனால் NFPE கலாசாரத்தில் ஊறி போன திரு மகாதேவயாவிடம் அதை எதிர்பார்க்க முடியாமா ? 
அதுதான் தற்போதைய பிரச்சனை.  

Inclusion of GDS in the 7th CPC

POSTAL DEPARTMENT REFERRED THE DEMAND FOR INCLUSION GRAMIN DAK SEWAKS IN 7th CPC TO DOP&T (GOVT.)

LETTER FROM DOP ADDRESSED TO SECRETARY GENERAL NFPE / FNPO:


No. 08/01/2014-SR
Ministry of Communications & IT
Department of Posts
(SR Section)

Dak Bhawan, Sansad Marg
New Delhi, dated 18th February, 2014

To
Shri M. Krishnan
Secretary General
National Federation of Postal Employees
Dada Ghosh Bhavan, 215/11
New Patel Road
New Delhi – 110 008

Shri D. Theagarajan
Secretary General
Federation of National Postal Organization
Chambri No. CH 17-1-18
Atul Grove Road
New Delhi – 110 001


Dear Sir,

Subject: Charter of Demands – regarding.


Your demand for inclusion of GDS in the 7th Central Pay Commission has been referred to DoP&T for a decision in the matter.

Yours faithfully,
(Arun Malik)
Director(SR)

Tuesday, 18 February 2014

போராட்டம் வெற்றிபெற வாழ்த்துகிறோம்.

           18.02.2014 முதல் தனது கோரிக்கைகளை வென்றெடுக்க போராடும்  தோழர்கள் (கிராமிய அஞ்சல் ஊழியர்கள்) வெற்றிபெற வாழ்த்துகிறோம்.
      
போராட்டங்களின் இலக்கு ஒன்றாக இருக்கும் போது
ஒன்று பட்ட போராட்டங்களே வெற்றியை தரும் என்ற நிலையில்
சுயநல விருப்புவெறுப்புகளை புறந்தள்ளி ஒன்று பட வேண்டுகிறோம். 
            ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு 
            ஒற்றுமை இல்லையேல் அனைவருக்கும் தாழ்வு  
             
என்ற வரிகளை மட்டும் நினைவு கூர்கிறோம்

Monday, 17 February 2014

மத்திய இடைக்கால பட்ஜெட் 2014

மக்களவையில் 2014-15-ம் ஆண்டுக்கான மத்திய இடைக்கால பட்ஜெட்டை நிதியமைச்சர் ப.சிதம்பரம் இன்று (திங்கள்கிழமை) தாக்கல் செய்தார்.
புதிய வரிவிதிப்புகள் இல்லாத இந்த பட்ஜெட்டில், உற்பத்தி வரிகள் குறைக்கப்பட்டதன் காரணமாக, கார்கள், இரு சக்கர வாகனங்கள், மொபைல் போன்கள், டிவி, ஃபிரிட்ஜ் உள்ளிட்ட பொருள்களின் விலை குறையும்.
நாட்டின் பொருளாதார நிலை, இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு இருந்ததைவிட தற்போது சிறப்பாக உள்ளது என்று குறிப்பிட்ட மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம், அடுத்த 30 ஆண்டுகளில் அமெரிக்கா, சீனாவுக்குப் பின், உலகின் 3-வது பெரிய பொருளாதார வளர்ச்சி மிக்க நாடாக இந்தியா திகழும் என்று பட்ஜெட் உரையில் நம்பிக்கை தெரிவித்தார்.
பல்வேறு முயற்சிகளால், அமெரிக்க டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு சரியான நிலைக்கு கொண்டுவரப்பட்டதாகவும், நாட்டின் உணவு பணவீக்க விகிதம் குறைந்திருந்தாலும், அது தொடர்ந்து கவலைக்குரியாதாகவே உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
அதேநேரத்தில், வரி ஏய்ப்பைத் தடுக்கும் வகையில், வரிச் சீர்திருத்தங்களை மேற்கொள்ள எதிர்க்கட்சிகள் ஒத்துழைக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.
மத்திய இடைக்கால பட்ஜெட் மற்றும் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் பட்ஜெட் உரையின் முக்கிய அம்சங்கள்:
* வருமானவரி விகிதத்தில் மாற்றம் இல்லை.
* ரூ.1 கோடிக்கு மேல் ஆண்டு வருமானம் உள்ளவர்களுக்கு 10 சதவீத கூடுதல் வரி.
* ரூ.10 கோடி வருவாய் கொண்ட நிறுவனங்களுக்கு 3 சதவீத கூடுதல் வரி.
* 2013-14 நிதியாண்டில் உணவுப் பயிர் உற்பத்தி 263 டன்கள் என மதிப்பிடப்பட்டுள்ளது.
* 2013-14-ல் நாட்டின் நிதிப் பற்றாக்குறை 4.6 சதவீதம்; இது, அடுத்த ஆண்டில் 4.1 சதவீதம். வருவாய் பற்றாக்குறை 2013-14-ல் 3 சதவீதம்.
* 2012-13-ல் 88 பில்லியன் டாலர்களாக இருந்த நடப்புக் கணக்குப் பற்றாக்குறை தற்போது 45 பில்லியன் டாலர்களாக உள்ளது.
* சிறிய கார்கள், மோட்டார் சைக்கிள்கள் மற்றும் வர்த்தக வாகனங்களுக்கு உற்பத்தி வரி 12-ல் இருந்து 8 சதவீதமாக குறைப்பு.
* எஸ்.யு.வி. வாகனங்களுக்கு உற்பத்தி வரி 30-ல் இருந்து 24 சதவீதமாக குறைப்பு.
* பெரிய மற்றும் நடுத்தர கார்களுக்கு உற்பத்தி வரி 27-ல் இருந்து 24 சதவீதமாகவும், 24-ல் இருந்து 20 சதவீதமாகவும் குறைப்பு.
* மொபைல் போன்களுக்கான உற்பத்தி வரி 6 சதவீதமாக குறைப்பு.
* மூலதனப் பொருள்கள் மீதான உற்பத்தி வரி 12-ல் இருந்து 10 சதவீதமாக குறைப்பு.
* மார்ச் 31, 2009-க்கு முந்தைய மாணவர்களின் கல்விக் கடன்களுக்கான வட்டி செலுத்துவதில் சலுகை. இதன்மூலம் 9 லட்சம் பேர் பயனடைவர்.
* அன்னியச் செலாவணியில் 2013-14-ல் கூடுதலாக 15 பில்லியன் டாலர்கள்.
* நடப்பு நிதியாண்டில் ரூ.40,000 கோடியில் இருந்து ரூ.16,027 கோடியாக முதலீடு விலக்கல் இலக்கு (Disinvestment target) குறைப்பு. அடுத்த ஆண்டில் ரூ.36,925 கோடியாக இருக்கும் என எதிர்பார்ப்பு.
* நிர்பயா நிதிக்கு ரூ.1,000 கோடி ஒதுக்கீடு.
* ஜனவரி இறுதி வரை 296 முதலீடுகளுக்கு ரூ.6.6. லட்சம் அனுமதி.
* 2013-14-ன் 3-வது மற்றும் 4-வது காலாண்டில் மொத்த உள்நாட்டு உற்பத்தி 5.2 சதவீதம்.
* 2014-15 நிதியாண்டில் திட்ட செலவு ரூ.5.55 லட்சம் கோடி; திட்டமிடப்படாத செலவு ரூ.12.08 லட்சம் கோடி.
* அடுத்த நிதியாண்டில் பொதுத் துறை வங்கிகளுக்கு ரூ.11,200 கோடி வழங்க ஒப்புதல்.
பொதுத் துறை நிறுவனங்களிடம் இருந்து ரூ.88,188 கோடி பங்கினைப் பெறுகிறது அரசு.
2013- 14-ல் பொதுத் துறை நிறுவனங்களால் ரூ.2.57 லட்சம் கோடி அளவில் முதலீட்டுச் செலவு.
* கல்பாக்கம் அணு உலையில் விரைவில் 500 மேகாவாட் மின் உற்பத்தி; நாட்டில் புதிதாக 7 அணு உலைகள் அமைக்கப்பட்டு வருகிறது.
* 2014-15-ல் தேசிய சூரிய மின்சக்தி திட்டத்தின் கீழ் 4 மிகப் பெரிய மின் திட்டங்கள்.
* வடகிழக்கு மாநிலங்களுக்கு கூடுதல் நிதியாக ரூ.1,200 கோடி.
* ஆதார் திட்டம் நிறைவேற அரசு உறுதி. தற்போதைக்கு மானிய சிலிண்டர் பெற ஆதார் கட்டாயம் என்ற திட்டம் நிறுத்தி வைப்பு.
* உணவு, உரம் மற்றும் எரிவாயு மானியத்துக்கு ரூ.2,46,397 கோடி.
* பாதுகாப்புத் துறைக்கு 10 சதவீதம் உயர்த்தி, ரூ.2.24 லட்சம் கோடியாக ஒதுக்கீடு.
* ராணுவத்தினருக்கு 2014—15 ஒரே பிரிவு - ஒரே ஓய்வூதியம் (ஒன் ரேங்க் - ஒன் பென்ஷன்) அறிமுகம். இதற்கு ரூ.500 கோடி கணக்கிடப்பட்டுள்ளது.
* 2014 நிதியாண்டின் ஏற்றுமதி இலக்கு 326 பில்லியன் அமெரிக்க டாலர்கள். இது, 6.3 சதவீத உயர்வு.
* சிறுபான்மையினருக்கான வங்கிக் கணக்கு எண்ணிக்கை, 10 ஆண்டுகளில் 14,15,000-ல் இருந்து 43,53,000 ஆக உயர்வு.
* கடன் மேலாண்மை அலுவலகம் அமைக்க அரசு பரிந்துரை. இது, அடுத்த நிதியாண்டில் இருந்து இயங்கும்.
* சேவை வரி விதிக்கும் வேளாண் பொருட்கள் பட்டியலில் இருந்து அரிசிக்கு விலக்கு. அதாவது, அரசி மீதான சேவை வரி ரத்து.
* ரத்த சேமிப்பு வங்கிகளுக்கு சேவை வரியில் இருந்து முழு விலக்கு.
* தற்காலிகமாக நிறுத்திவைக்கப்பட்டுள்ள நேரடி மானியத் திட்டத்தில் உள்ள குறைபாடு நீக்கப்பட்டு மீண்டும் நடைமுறைக்கு வரும்.
* சமூக நீதி அமைச்சகத்துக்கு ரூ.6730 கோடி ஒதுக்கீடு.
* பஞ்சாயத்து ராஜ் அமைச்சகத்துக்கு ரூ.7000 கோடி ஒதுக்கீடு.
* நாட்டில் 14 கோடி மக்கள் வறுமை கோட்டில் இருந்து நிலை மேம்படுத்தப்பட்டுள்ளனர்.
* சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகத்துக்கு ரூ.33,725 கோடி.
* மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சகத்துக்கு ரூ.67,398 கோடி.
* சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தலுக்கு ரூ.6730 கோடி.
* குடிநீர் மற்றும் வடிகால் அமைச்சகத்துக்கு ரூ.15,260 கோடி ஒதுக்கீடு.
* மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகத்துக்கு ரூ.21,000 கோடி ஒதுக்கீடு.
* வீட்டு வசதித் துறை அமைச்சகத்துக்கு ரூ.6000 கோடி.
* ரயில்வே துறைக்கான ஒதுக்கீடு, ரூ.29,000 கோடியாக உயர்வு.
* உணவு மானியத்துக்கு ரூ.1,16,000 கோடி ஒதுக்கீடு.
* மானியங்களுக்கு ரூ.2,46,397 கோடி ஒதுக்கீடு.
* தேசிய திறன் மேம்பாட்டு அறக்கட்டளைக்கு கூடுதலாக ரூ.1000 கோடி.
* தேசிய வேளாண் - வனக் கொள்கைக்கு அரசு ஒப்புதல்.
* தற்போது நாட்டில் 3.9 லட்சத்துக்கும் மேற்பட்ட கிராமங்களில் சாலைகள் உள்ளன.
* கல்விக்கு ரூ.79,541 கோடியை அரசு செலவிட்டுள்ளது.
* 236 மில்லியன் டன் உணவுப் பயிர் உற்பத்தி செய்யப்பட்டுள்ளது. 554 மில்லியன் டன் நிலக்கிரி உற்பத்தி செய்யப்பட்டுள்ளது.
* உணவுப் பாதுகாப்பு சட்டத்தின் கீழ் 67 சதவீத மக்கள் பயனடைகின்றனர்.
* உலகின் மற்ற வளரும் நாடுகளுடன் ஒப்பிடும்போது, இந்தியாவின் பொருளாதாரம் சிறப்பாக உள்ளது.
 
Click Here to see Budget Highlights (Key Features) in English

Our Federation sent a letter to Hon’ble Prime Minister .

நன்றி சொல்லும் நேரம்.

The Strike is total in many Circles according to the Department of Post. Thanks go to our Divisional/ Branch/Circle Secretaries.
Let us hope the Government will consider our demands seriously in the coming days.
We are not against to the UPA Govt. or any party. We are interested only in the settlement of C.G. employees demands.
FNPO is not worried about who is ruling the country. We are fighting only to achieve the C.G .employees demands in general and Postal Employees in particular.
Once again Thanks to our colleagues for the successful strike in the Postal Industry.
D.Theagarajan, Secretary General, FNPO

பணி சிறக்க வாழ்த்துகிறோம்.

          அருமை இளவல்  திரு கோகுலகிருஷ்ணன் அவர்கள் தன்னை கோட்ட செயலாளர் பொறுப்பில் இருந்து விடுவிக்க கோரியதையடுத்து 16.02.2014 அன்று நடந்த பட்டுகோட்டை பொதுகுழுவில் மூன்றாம் பிரிவின் கோட்ட செயலாளராக புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள திரு.S.அருள்செல்வம் அவர்கள் பணி சிறக்க வாழ்த்துகிறோம்.



S.A. இராம சுப்பிரமணியன்
கோட்ட செயலாளர்

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More

 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | Grants For Single Moms