The Interest rates for Deposits is again lowered by 0.1% from 1st July 17

ஜூலை முதல் வட்டி விகிதம் மீண்டும் 0.1% குறைப்பு

Showing posts with label Tirunelveli. Show all posts
Showing posts with label Tirunelveli. Show all posts

Thursday, 20 February 2014

பாராட்டு விழா

அன்பார்ந்த தோழர்களே
                           கடந்த 10 ஆண்டுகளாக மாநில செயலாளராக சிறப்பாக பணியாற்றி வருகின்ற 28.02.2014 அன்று பணி ஓய்வுபெரும்
நமது மாநில செயலாளர் திரு முத்து கிருஷ்ணன் அவர்களுக்கு 
சிறப்பாக பாராட்டு விழாவை நடத்துவதற்கு உத்தேசித்து,
அவ்விழா மாநில மாநாட்டு அரங்கில் 27.02.2014 அன்று காலை 10 மணிக்கு மூன்றாம் நாள் நிகழ்ச்சியின் தொடக்கமாக நடைபெற இருக்கிறது. இந்த அறிய வாய்ப்பில் அனைத்து கோட்ட கிளை செயலர்களும் பங்குபெற்று சிறப்பிக்க வேண்டுகிறோம்.

நிகழ்ச்சி ஏற்பாடு :  திருநெல்வேலி மற்றும் தூத்துக்குடி கோட்டம்.

Friday, 14 February 2014

பல்வேறு பத்திரிக்கைகளின் போராட்ட செய்தி.

பெப்ரவரி 12, 13 தினத்தில் நடந்த 48 மணிநேர வேலை நிறுத்த போராட்டத்தில் பங்குபெற்ற அனைத்து தோழர்களுக்கும் நன்றி நன்றி நன்றி போராட்டசெய்தியை வெளியிட்ட பத்திரிகை அன்பர்களுக்கும்  
நன்றி நன்றி நன்றி
 







Wednesday, 12 February 2014

இரண்டு நாட்கள் வேலை நிறுத்தம்

சென்னை: புதிய ஓய்வூதிய திட்டத்தை கைவிட வேண்டும என்பது உட்பட 15 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி மத்திய அரசு நிறுவனங்களின் தொழிற்சங்கங்கள் இன்று முதல் முதல் இரண்டு நாட்கள் அகில இந்திய அளவில் வேலை நிறுத்தம் தொடங்கியுள்ளது. அதனால் கடிதங்கள் பட்டுவாடா உட்பட மத்திய அரசு துறைகளின் பணிகள் பாதிக்கப்படும் நிலை ஏற்பட்டுள்ளது. 
புதிய ஓய்வூதிய திட்டத்தை கைவிட வேண்டும், 
7வது ஊதியக்குழுவில் தொழிற்சங்க நிர்வாகி ஒருவரை உறுப்பினராக நியமிக்க வேண்டும் 
வேலைப்பளுவின் அடிப்படையில் சரியான கணக்கீட்டின்படி, தகுதியுள்ள தபால் நிலையங்களுக்கு தேவையான தபால்காரர்களை நியமனம் செய்யவேண்டும். பதவி உயர்வை 1-1-2006 முதல் அமல்படுத்தவேண்டும் என்பன உட்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அணுசக்தித்துறை, கணக்கு தணிக்கைத்துறை, வருமானவரித்துறை, சுங்க இலாகா உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்ட மத்திய அரசு நிறுவனங்களின் தொழிற்சங்கங்கள் இந்த வேலை நிறுத்தத்தில் பங்கேற்கின்றன. நாடு முழுவதும் நடைபெறும் இந்த வேலை நிறுத்தத்தில் தமிழகத்தில் உள்ள 1.5 லட்சம் மத்திய அரசு ஊழியர்கள் உட்பட நாடு முழுவதிலும் இருந்து சுமார் 12 லட்சம் பேர் இந்த வேலை நிறுத்தத்தில் பங்கேற்கின்றனர். அஞ்சல் துறையில் முக்கிய சங்கங்களான என்எப்பிஈ, எப்என்பிஓ (FNPO), அஞ்சல் ஊழியர் முன்னேற்ற சங்கம் உட்பட அனைத்துச் சங்கங்களும் பங்கேற்கின்றன. அதனால் கடிதங்கள் சேகரிப்பு, பட்டுவாடா, விரைவு அஞ்சல், பார்சல், சேமிப்பு உள்ளிட்ட சேவைகளும் பாதிக்கும் அபாயம் உள்ளது. 
 2 நாள் வேலைநிறுத்தத்தில் ஒட்டுமொத்த தபால் ஊழியர்கள் கலந்துகொள்வார்கள் என அறிவிக்கப்பட்டு இருப்பதால், நாடு முழுவதும் தபால் சேவை குறிப்பாக பட்டுவாடா முழுமையாக பாதிக்கும் என்று கூறப்படுகிறது. அது மட்டுமின்றி, தபால் நிலையங்களில் கார்டு, கவர், ஸ்டாம்ப் விற்பனையும் நடைபெறாது என்று போராட்டத்தில் ஈடுபடவுள்ள சங்கங்களின் நிர்வாகிகள் தெரிவித்தனர்.
நன்றி  : http://tamil.oneindia.in

நாடு முழுவதும் 48 மணி நேர வேலைநிறுத்த போராட்டம் தொடங்கியது

                
13.2.2014 - ஆர்ப்பாட்டத்தில்.
NFPE ,FNPO , மற்றும் PEPU  நிர்வாகிகள்
இன்று 12.02.2014 காலை முதல் 48 மணி நேர வேலைநிறுத்த போராட்டம்  தேசிய அளவில் தொடங்கியது. குறிப்பாக நமது நெல்லை கோட்டத்தில் ஏறத்தாழ அனைத்து தோழர்களும் ( 100 %  )போராட்டத்தில் கலந்து கொள்கின்றனர் என்ற மகிழ்ச்சியான செய்தியை தெரிவித்து கொள்கிறோம்.  நாடு முழுவதிலும் இருந்து வேலை நிறுத்த வெற்றி செய்திகள் வந்தவண்ணம் உள்ளன.

         இன்று காலை ஸ்ரீபுரம் திருநெல்வேலி தலைமை அஞ்சலகம் முன்பு நமது  கோட்ட தலைவர் திரு ஆனந்தராஜ் அவர்கள் தலைமையில் கூட்டு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது  இதில் இரு சங்கங்களின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.  நாளையும் பாளையங்கோட்டை &  திருநெல்வேலி தலைமை அஞ்சலகம் முன்பு பெருந்திரள் ஆர்ப்பாட்டம் நடத்த உத்தேசிக்க பட்டுள்ளது அனைவரும் கலந்து கொள்ள வேண்டுகிறோம்.

வெல்லட்டும்                                             வேலைநிறுத்தம் வெல்லட்டும்
நமது கோரிக்கைகள் எட்டட்டும்     மத்திய அரசின் காதுகளை எட்டட்டும்


மாநில சங்க வாழ்த்துக்கள் இதோ
 
Dear colleagues, 

The two days strike of entire Central Govt Employees including Postal commenced today.  The information received so far about the participation of the strike is either  total or near total in so many places of Tamil Nadu Circle.  The Circle Union congratulate all the circle office bearers , Divisional and Branch Secretaries those to have worked  tirelessly to make the strike very much successful and it also congratulates all the officials those who have participated in this historic strike.

 with kind regards

                                                                                                      G.P. MUTHUKRISHNAN
                                                                                                           CIRCLE SECRETARY


Tuesday, 11 February 2014

RT 2014 - Notification Issued.

Thursday, 6 February 2014

கோட்ட கண்காணிப்பாளர் அவர்களுக்கு நெஞ்சார்ந்த நன்றிகள்.

"போற்றுவோர் போற்றலும் தூற்றுவோர் தூற்றலும் கண்ணனுக்கே"
என்கிறது கீதை.                          நமது வேதனை கண்ணன் மேல் இல்லை.
எய்தவரை விட்டு அம்பை நொந்து என்னபயன் ?


       நேற்றைய பதிவில் நாம் திருநெல்வேலி டவுன் அஞ்சலகத்தில் இரவு காவலராக பணிபுரியும் நமது தோழர் திரு தங்கபாண்டியனுக்கு ஏற்பட்ட பிரச்சனையை கூறியிருந்தோம்.
யார் மனதையும் புண்படுத்துவது நமது நோக்கம் அல்ல.
ஆனாலும் திருநெல்வேலி டவுன் அஞ்சல் அதிகாரி தமது பொறுப்பை தட்டி கழிக்க முற்பட்டது தான் வேதனை.
தொடர்ந்து இதுபோல நமக்கு இழைக்கப்படும் அநீதிகளை கண்டு மனவேதனை அடைகிறோம். நமது கோட்டத்தில் அடிப்படை உரிமையை கூட போராடி பெறவேண்டிய நிலை வருத்ததுக்குரியது. எல்லா பிரச்சனைகளையும் அந்தந்த மட்டங்களில் தீர்க்கவே நமது விருப்பம்.
கோட்ட கண்காணிப்பாளரிடம் கொண்டு சென்று பெறவேண்டும் என்பது நமது நிலைப்பாடும் அல்ல.
இந்த பிரச்சனையை நமது கோட்ட கண்காணிப்பாளர் அவர்களிடம் கொண்டு சென்ற உடன்,  உடனடியாக தலையிட்டு C-Off  வழங்கிட உத்தரவிட்டதை நன்றியுடன் நினைவு கூர்கிறோம்.    
ஊழியர் தம் பிரச்சனைகளுக்கு தீர்வு வழங்கிட உடனடியாக முயற்சி எடுக்கும் நமது கோட்ட கண்காணிப்பாளர் அவர்களுக்கு நெஞ்சார்ந்த நன்றிகள்.

Wednesday, 5 February 2014

FNPO தோழருக்கு இழைக்கப்படும் அநீதி


           திருநெல்வேலி டவுன் அஞ்சலகத்தில் இரவு காவலராக பணிபுரியும் நமது தோழர் திரு தங்கபாண்டியனுக்கு திருநெல்வேலி டவுன் அஞ்சல் அதிகாரியால் தொடர்ந்து அநீதி இழைக்கபடுகிறது. கடந்த டிசம்பர் மாதம் முதல் இன்றுவரை தொடர்ச்சியாக சுமார் 45 நாட்கள் பணிபுரிகிறார். ஆனால் ஞாயிற்று கிழமைகளில் வாரந்திர விடுமுறையை மறுப்பதோடு  C Off கூட அளிக்க மறுக்கிறார்.
      உழைக்கும் வர்கத்திற்க்காக போராடுவதாக காட்டிகொள்ளும் தொழிற்சங்க வா(வியா)திகள் தொடர்ந்து தொழிற்சங்க பாகுபாடு காட்டுவது ஏன்?

          கடந்த வருடம் உறுப்பினர் சேர்க்கையின் போது அதே அலுவலகத்தில் FNPO தோழர்கள் இருவரை இதுபோல் மிரட்டி கையெழுத்து வாங்கியதைப்போல இவரிடமும் கையெழுத்து பெற மிரட்டும் தொனியில் செயல்பட தூண்டுவது யார் ?  இது யாருடைய ஆலோசனை ? 
அலுவகங்களில் தொழிற்சங்க பாகுபாடு ஏன் ?
          அதேசமயம் உங்கள் அலுவலகத்தில் மாற்று சங்க தோழர்களுக்கு அளிக்கும் சலுகைகளை நாங்கள் பட்டியல் இடட்டுமா?  மற்றவர்கள் பணியை முடிக்காமல் மதியம் 3 மணிக்கு செல்ல அனுமதிக்கும் நீங்கள் ஒரு ஊழியரின் அடிப்படை உரிமையை மறுப்பது ஏன்? 

Monday, 3 February 2014

தமிழ்நாட்டில் MTS பணியிடங்கள் நிரப்ப அறிவிப்பு

Notification for Direct Recruitment of MTS Cadre Issued in Tamilnadu Circle.
Applications are invited from the eligible candidates for filling up the posts of MTS in various divisions in Tamilnadu Circle. 

Total No of Vacancies : 227
In Tirunelveli Division : MTS  2
     PSD, Tirunelveli      : 6

Click the below link to see the Notification and download the application Form :

Direct Recruitment of Multi-Tasking Staff - Notification

Click here to download Application Form

Thursday, 30 January 2014

பணிநிறைவு பாராட்டு

      
31.01.2014 அன்று பணிநிறைவுபெறும் நமது தேசிய சங்கத்தின்
காஞ்சி கோட்டத்தின் முன்னாள் செயலரும்  எங்கள் இனிய நண்பருமான காவேரிபாக்கம் Postmaster Grade I (அரக்கோணம் கோட்டம் ) மதிப்பிற்குரிய திரு G. சுந்தரராஜ் அவர்களை வாழ்த்தி வணங்குகிறோம்.
அவர்தம் ஓய்வு காலங்களில் மனநிறைவோடும் மகிழ்ச்சியோடும் வாழ வாழ்த்துகிறோம். 

பணிநிறைவு பாராட்டு.

               31.01.2014 அன்று பணிநிறைவுபெறும்
மதுரை தலைமை அஞ்சலகத்தின் உதவி அஞ்சலகஅதிகாரியும்
நமது தேசிய சங்கத்தின் முன்னாள் தென்மண்டல செயலருமான
மதிப்பிற்குரிய திரு M. முத்துசாமி அவர்களை வாழ்த்தி வணங்குகிறோம்.
அவர்தம் ஓய்வு காலங்களில் மகிழ்ச்சியோடும் மனநிறைவோடும் வாழ வாழ்த்துகிறோம்.

             மண்டல செயலாளராக அவர்தம் காலங்களில் நெல்லை கோட்ட மட்ட பிரச்சனைகளை மண்டல நிர்வாகத்தில் பேசி சாதித்த அவரின் பல்வேறு
பணிகளை நினைவுகூர்ந்து நெல்லை கோட்ட சங்கம் நன்றி பாராட்டுகிறது.

வாழ்த்துகிறோம்.


Tuesday, 28 January 2014

Monthly Interview - Jan 2014

இன்று (29.01.2014) நடைபெறுவதாக இருந்த மாதாந்திரபேட்டி ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
நமது கண்காணிப்பாளர் அவர்கள் மண்டல அலுவலகத்தில் நடைபெறும் கூட்டத்தில் கலந்து கொள்ளவேண்டியதிருப்பதால் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது   
மறுதேதி பின்னர் அறிவிக்கப்படும்.

Saturday, 25 January 2014

நன்றி! நன்றி! நன்றி!

     
Mr.S.Raja Prasad, Divisional Treasurer
கடந்த 05.01.2014 அன்று நடந்த 25 வது கோட்ட மாநாட்டில்  
P3 கோட்டப் பொருளாளராக தேர்ந்தெடுக்கப்பட்ட  
திரு S. இராஜா பிரசாத் ( PA, VK Puram) அவர்களை தொழிற்சங்க பணியாற்றிட ஏதுவாக விக்கிரமசிங்கபுரத்திலிருந்து நெல்லை நகர எல்லைக்கு உட்பட்ட பெருமாள்புரத்திற்கு இடமாறுதல் (Transfer) தந்து உத்தரவிட்ட
நமது கோட்ட கண்காணிப்பாளர் அவர்களுக்கு நமது நெஞ்சார்ந்த நன்றி உரித்தாகுக.

Wednesday, 22 January 2014

Monthly Meeting - Jan 2014

           The Monthly Meeting with SPOs for the month of January 2014 is proposed to be held on 29.01.2014 at 1500 Hrs. All are requested to send your subject (if any) before 25.01.2014.

- G.Socretis                                                     - S.A.Rama Subramanian
Secretary P4  94886 73761                                  Secretary P3   94439 00200

Tuesday, 21 January 2014

Circular 01 / 2014 Dated 17.01.2014



Monday, 20 January 2014

தமிழ் மாநில மாநாடு

அன்பார்ந்த நெல்லை கோட்ட தோழர்களே 
                வணக்கம் வருகிற பிப்ரவரி திங்கள் 25,26 மற்றும் 27 ஆகிய நாள்களில் காஞ்சிபுரம் மாநகரில் நமது தேசிய சங்க மூன்றாம் பிரிவின் தமிழ் மாநில மாநாடு நடைபெற இருக்கிறது. மாநாட்டிற்கு செல்ல புகைவண்டிக்கு முன்பதிவு செய்ய வேண்டிருப்பதால் அதில் கலந்து கொள்ள விரும்பும் தோழர்கள் செயலாளர் திரு இராம சுப்பிரமணியன் அவர்களை (94439 00200, 96 26 26 4774) உடனடியாக தொடர்பு கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

காஞ்சி மாநகரம் தென்னிந்தியாவின் மிகவும் பழமையான நகரங்களில் ஒன்றாகும். இங்குதான் பிரசித்திபெற்ற காமாட்சியம்மன் கோயில், ஏகாம்பரநாதர் கோயில், வரதராஜபெருமாள் கோயில், கைலாசநாதர் கோயில் ஆகியவை அமைந்துள்ளன.
தமிழகத்தின் முன்னாள் முதலமைச்சர் பேரறிஞர் அண்ணா பிறந்த இடமெனும் சிறப்பையும் பெற்றது இந்நகரமாகும்.
காஞ்சிபுரம் நெசவுத்தொழிலுக்கும் மிகவும் புகழ் பெற்றது. இங்கு தயாரிக்கப்படும் காஞ்சிப் பட்டுப் புடவைகள் மிகவும் பிரபலமானவை.

நாயன்மார்களாலும், ஆழ்வார்களாலும் பாடற்பெற்ற தலங்களில் காஞ்சிபுரமும் முக்கியமானதாகும். அப்பர், சுந்தரர் மற்றும் சம்பந்தரால் ஏகாம்பரநாதர் மீது திருமுறைகளை புனைந்துள்ளார்கள்.  

ஆழ்வார்களான திருமங்கையாழ்வார், பூதத்தாழ்வார், பேயாழ்வார் நம்மாழ்வார் மற்றும் திருமழிசையாழ்வார் ஆகியோரால் மங்களாசாசனம் செய்யப்பட்ட பதின்மூன்று திவ்யதேசங்களான (திவய தேசம் என்பது 108 வைணவ திருப்பதிகள் ஆகும். 108 இல் 13 கோயில்கள் இங்கு உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது ) வரதராஜப் பெருமாள் திருக்கோயில், திருவெஃகா (சொன்னவண்ணம் செய்த பெருமாள் திருக்கோயில்) , அஷ்டபுஜகரம், திருஊரகம்-திருநீரகம்-திருகாரகம் அடங்கிய உலகளந்த பெருமாள் திருக்கோயில், திருக்கார்வண்ணப் பெருமாள் திருக்கோயில், வைகுந்தநாத பெருமாள் திருக்கோயில், பச்சைவண்ண-பவளவண்ண பெருமாள் திருக்கோயில், பாண்டவதூதர் பெருமாள் திருக்கோயில், நிலாத்திங்கள் துண்ட பெருமாள் திருக்கோயில், திருக்கள்வனூர், திருவேளுக்கை மற்றும் திருத்தண்கா ஆகியன விஷ்ணுக்காஞ்சியிலேயே அமைந்துள்ளன. பொய்கையாழ்வார், எம்பெருமானார் இராமனுஜர், திருக்கச்சி நம்பிகள், வேதாந்ததேசிகர், பிரதிவாதிபயங்கரம் அண்ணங்காச்சாரியர் ஆகிய வைணவப் பெரியோர்கள் இத்தலத்தோடு நெருங்கிய தொடர்புடையவர்கள்.

இன்னும் ஏராளமான சிறப்புகளுக்குரிய காஞ்சி மாநகரம்.
அது மட்டுமல்ல காஞ்சிக்கு மிக அருகில்
வேடந்தாங்கள் பறவைகள் சரணாலயம்.
குடவோலை முறைக்கு பெயர்பெற்ற உத்திரமேரூர்.
மகாபலிபுரம், திருகழுகுன்றம், திருத்தணி முருகன் ஆலயம்
சிவபெருமானின் திருத்தாண்டவத்தில் தொடர்புடைய இரத்தினசபை என அழைக்கப்படும் திருவாலங்காடு.
இராமானுஜர் அவதார் ஸ்தலமான ஸ்ரீபெரும்புதூர் 
(மறைந்த முன்னாள் பிரதமர் திரு ராஜீவ்காந்தி அவர்கள் நினைவிடம் )


Wednesday, 1 January 2014

மாதாந்திர பேட்டி புறக்கணிப்பு.

அன்பு தோழர்களே. 
              கோட்ட கண்காணிப்பாளர் உடன் இன்று (31.12.2013) நடைபெறுவதாக இருந்த மாதாந்திர பேட்டியை  தவிர்க்க முடியாத காரணத்தால் நாம் புறக்கணித்துள்ளோம்.
குறிப்பாக நமது தொழிற்சங்க உரிமைகளை தொடர்ந்து மறுக்கும் நடவடிக்கையாக தபால்காரர் தோழர்கள் கூட தனது பணியை செய்துமுடித்து விட்டு 0400/0500 PM  மணிக்கு பிறகு மாதாந்திர பேட்டியில் கலந்து கொள்ள வேண்டிய நிர்பந்தம். கடந்த ஒருவருட காலமாக எந்த பிரச்சனையிலும் தீர்வு காணபடாமல் இழுத்தடிக்கும் மனோபாவம், இதைவும் மீறி நாம் கோட்ட நிர்வாகத்துடன் ஊழியர் நலன் சார்ந்து கடைபிடித்துவரும் இணக்கமான சூழலை சுமூக போக்கை சீர்குலைக்கும் மனோநிலை வருத்ததோடு வேறுவழியின்றி  இன்றைய புறக்கணிப்பு.
             ஏற்கனவே நாம் இழந்தது அதிகம்  இனி இழப்பதற்கு ஏது ? என்ற நிலையிலும் சிறு சிறு சலுகைகளை கூட மறுக்கும் அவலம். இதுவே நமது புறக்கணிப்புக்கு காரணம்.

Saturday, 28 December 2013

27th National Postal Athletic Meet

        பெங்களூருவில் நடைபெற்ற27வது தேசிய அஞ்சல் தடகள போட்டியில்  பல பதக்கங்களை பெற்று நமது திருநெல்வேலி கோட்டத்திற்கு பெருமை சேர்த்த நமது தேசிய தோழர்கள்
திரு பால் பாண்டி தபால்காரர் மஹாராஜா நகர் 
3000 M                வெள்ளி (2nd Place)
5000 M                வெண்கலம் (3rd Place)
10000 M              வெள்ளி (2nd Place)
திரு தர்மா தபால்காரர் மஹாராஜா நகர்
200   M          வெண்கலம் (3rd Place)
400   M          வெண்கலம் (3rd Place)
800   M          வெண்கலம் (3rd Place)
4 X 400 M  Relay       வெள்ளி  (2nd Place)
ஆகியோரை இன்னும் வெற்றிகள் பல பெற்றிட வாழ்த்துகிறோம். 

Thursday, 26 December 2013

The Monthly Interview.

The Monthly Meeting of Dec 2013 with the Divisional Head will be held on 31.12.2013 at 1600 Hrs. All the members are requested to send/convey your subject to the Divisional secretaries on or before 27.12.2013.
S.A.Rama Subramanian, Divisional Secretary P3   94439 00200
A.Kalidasan, Divisional Secretary P4 & MTS        94426 91775

Saturday, 16 November 2013

Dear Postmasters/Sub Postmasters of Tirunelveli Division,

You may received a eMail about the Role of Postman and GDS Mail Deliverers - Are they Honoured ?

நமது SPOs அவர்கள் உண்மையிலே நல்ல மனிதர். சிறந்த பண்பாளரும் கூட அவர் அவ்வாறு கூறுவதில் வியப்பில்லை. அதுபோலவே நம்மிடையே பல்வேறு அதிகாரிகள் உள்ளனர் என்றாலும் தவறில்லை.
ஆனால் சில அதிகாரிகளின் நடவடிக்கை நம்மை மன உளைச்சலுக்கு உள்ளாக்குவது வேதனைக்குரியது.
நெல்லையில் சில உதவி கோட்டங்களில் 
ஏன் இன்னும் சில வருடங்களின் ஓய்வு பெறப்போகும் Sub PMs, Postman and GDS படும் அவஸ்தை சொல்ல முடியாது. 
ஒருமையில் ஏக வசனங்கள், பேச்சுக்கள்  பழிவாங்கும் நடவடிக்கைகள்

இவற்றிக்கு பிறகும் எப்படி மனநிறைவோடு வேலைபார்ப்பார் என்பது தான் நமது ஐயம்.  உண்மையிலேயே  Postman and GDS மட்டுமல்ல அனைவரும் மதிக்கப்படவேண்டும் என்பதே நமது அவா. 
காலம் மாறட்டும்.          கருணையும் பிறக்கட்டும். 

உங்களின் பார்வைக்கு அந்த e Mail. இதோ.
Dear Postmasters/Sub Postmasters,

Please review the role of Your Postman and GDS Mail Deliverers at Your POs.

Postman shall do wonders if they think. Our Project Arrow Performances, Reveune Targets, iMO booking, WUMT, Money Gram targets, Net New POSB Accounts, PLI/RPLI, My stamps, ePOSTS, PD Account, MNOP all are achievable if each of your Postman and GDS Mail Deliverer co operates with you all.

The Postmen and GDS Mail Deliverers are either NOT honoured or ill treated and left out in our hurry to close accounts, run clients, send reports and scanning.

please review the role of your Postman and    
GDSMail Deliverers of your office and take them in confidence in all of your activities.

If you co ordinate the activities along with them, definitely each target is achievable.

It is once again requested to each of the PMs/SPMs to convene a MEETING OF ALL
OF DELIVERY STAFF AND YOUR OTHER STAFF every day evening atleast for 15 MINUTES
an reiterate our targets and our commitment to achieve. 

Please take a positive mode and achieve.

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More

 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | Grants For Single Moms