The Interest rates for Deposits is again lowered by 0.1% from 1st July 17

ஜூலை முதல் வட்டி விகிதம் மீண்டும் 0.1% குறைப்பு

Saturday, 4 May 2013

மாநாடு சிறக்க வாழ்த்துகிறோம்.

            தாம்பரம் கோட்ட தேசிய சங்கத்தின் ஆவடி கிளையின் 30 வது கோட்ட மாநாடு சிறக்க வாழ்த்துகிறோம்.
நாள் 05.05.2013                          இடம் : ஆவடி கேம்ப் தலைமை அஞ்சலகம்
சிறப்புரை திரு முத்து கிருஷ்ணன் மாநில செயலாளர் P3

                   திரு குணசேகரன் மாநில செயலாளர் P4
                   திரு கோதண்டராமன் மாநில செயலாளர் GDS

தகவல் : திரு R. இராஜகோபாலன், Postmaster Grade I, கொடுங்கையூர் 

Friday, 3 May 2013

FNPO P3 Monthly subscription raised to Rs.40

       The Department issued orders vide letter No. 15-2/2007-SR dated 16-4-2013 raising the monthly subscription from Rs 30/- to Rs 40/-. Our Central HQ requested all the Divisional Secretaries to take action for recovery of subscription @ of Rs 40/- from the pay of April 2013. 
To download the original orders click here.

Wednesday, 1 May 2013

Rotational Transfer 2013

இந்த ஆண்டிற்க்கான சுழல் மாறுதல் உத்தரவு வெளியிடப்பட்டுள்ளது
நகலை பார்க்க இங்கே சொடுக்கவும்

May day celebrations

                 

மே தினத்தை முன்னிட்டு நமது தேசிய சங்க கொடியினை இன்று  காலை 8 மணிக்கு அஞ்சல் மூன்று கோட்ட தலைவர் திரு ஆனந்தராஜ் அவர்கள் தலைமையில் திருநெல்வேலி தலைமை அஞ்சலக அதிகாரி திரு கடற்கரையாண்டி அவர்கள் ஏற்றி வைத்தார்.
உடன் திரு இராம சுப்பிரமணியன் திரு காளிதாசன் திரு குணா திரு பாரதி திருமதி சுப்பு லக்ஷ்மி திரு ரமேஷ்  திரு தங்கபாண்டியன் மற்றும்  திரு மாரிகண்ணு                                                           

JCA Leaders met with SPOs

            அஞ்சல் & RMS ஊழியர் கூட்டு நடவடிக்கை குழுவின் ( JCA ) சார்பாக திருநெல்வேலி அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளர் திரு சாந்தகுமார் அவர்களை 30.04.2013 அன்று மாலை JCA Convener திரு இராம சுப்பிரமணியன் மற்றும் NFPE Asst Circle Secretary திரு தியாகராஜன் ஆகியோர் தலைமையில் JCA தலைவர் திரு காசி விசுவநாதன், 
FNPO P4 திரு காளிதாசன், 
Ambai NFPE P4 திரு சுப்பிரமணியன், 
FNPO P3 தலைவர் திரு ஆனந்தராஜ்  ஆகியோர் சந்தித்து பேசினார்கள்.
            V.K..புரம் திருநெல்வேலி நகர் அஞ்சலகங்களில் இருந்து தபால்காரர் Re-Deployment பற்றி விவாதித்தனர். மேலும் KTC Nagar அஞ்சலகத்தை Delivery SO ஆக மாற்றினால் ஏற்படும் நன்மைகளை நமது பிரதிநிதிகள் எடுத்து கூறினார்.  நமது கோட்ட கண்காணிப்பாளர் திரு சாந்தகுமார்அவர்கள் பரிவுடன் கோரிக்கைகளை பரிசிலிக்க தயாராக இருப்பதாகவும் தனக்கு,அதாவது கோட்ட நிர்வாகத்துக்கு உள்ள பிரச்சனைகளையும் விளக்கினார்கள். மண்டல நிர்வாகத்துடன் பேசி முடிக்க முயற்சி செய்வதாக கூறினார்கள். 
நமது JCA மண்டல அளவில் இப்பிரச்சனையை கொண்டு சென்று தீர்வு காண தொடர்ந்து முயலும் என தெரிவித்து கொள்கிறோம்.

நன்றி சொல்லும் நேரம்

               Membership forms submitted yesterday on 30.4.2013. We thank all who have joined their hands with us and shown their faith in our Association.Totally 30 members have joined in our Union. We also thank our members who have shown their support in all ways to increase our strength. We would like to ensure them that we will fulfill their expectations with our best level. 

Tuesday, 30 April 2013

May Day Wishes

உழைக்கும் வர்க்கத்தின் உரிமை திருநாள் -    மே தின நல்வாழ்த்துக்கள் 

  
அன்பு தோழர்களே !
                    மே தினத்தை முன்னிட்டு நமது தேசிய சங்க கொடியினை ஏற்றிட மே 1 அன்று காலை 8 மணிக்கு திருநெல்வேலி தலைமை அஞ்சலகத்திற்கு அனைவரும் வருகைதந்து சிறப்பிக்க வேண்டுகிறோம்.
சங்க கொடியினை ஏற்றி வைப்பவர் : திரு ஆனந்தராஜ் அவர்கள் 
                                                               கோட்ட தலைவர் அஞ்சல் மூன்று 

பெருந்திரள் ஆர்ப்பாட்டம்

               மத்திய தொழிற்சங்கங்களின் அறைகூவலை ஏற்று 7 வது ஊதிய குழு அமைக்க வேண்டியும்  புதிய பென்ஷன் திட்டத்தை வாபஸ் பெற கோரியும் நேற்று 29.04.2013 அன்று திருநெல்வேலி தலைமை அஞ்சலகம் முன்பு மாலை 0530 மணிக்கு நடைபெற்ற பெருந்திரள் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
             ஆர்ப்பாட்டத்தை தெட்சன ரயில்வே ஊழியர் சங்க கிளை செயலாளர் திரு ராஜு அவர்கள் தலைமை ஏற்று நடத்திவைதர்கள்
 FNPO P3 தலைவர் திரு ஆனந்தராஜ் அவர்கள் , AIPEU P3 திரு சண்முக சுந்தர ராஜா அவர்கள், FNPO P4 செயலாளர் திரு காளிதாசன் அவர்கள் ஆகியோர் முன்னிலையில்  நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் NFPE Circle Asst Secretary 
திரு S.T. தியாகராஜன் அவர்களும் 
FNPO Divisional Secretary திரு இராம சுப்பிரமணியன்  அவர்களும் சிறப்புரை ஆற்றினர்.
கூட்டத்தில் BSNL NFTE திரு பாபநாசம் R3 திரு பழனி தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க தோழர் பார்த்தசாரதி ஆகியோர் வாழ்த்தி பேசினார்

ஆர்ப்பாட்டத்தில் எங்கள் அழைப்பை ஏற்று கலந்துகொண்ட அனைவருக்கும்  எங்கள் நெஞ்சார்ந்த நன்றிகள்.
இச் செய்திகளை வெளியிட்ட நாளிதழ்கள் தினத்தந்தி தினமணி தினகரன் மற்றும் The New Indian Express பத்திரிக்கைகளுக்கு எங்கள் நெஞ்சார்ந்த நன்றிகள்.
போராட்ட வாழ்த்துக்களுடன்
E. காசி விசுவநாதன்  President    NFPE GDS                
S.A. இராம சுப்பிரமணியன்   Convener  FNPO P3    
S.இராமசாமி     Tresurer NFPE PSD P3                     

Monday, 29 April 2013

முதல் வெற்றி. இனி தொடரும் நம் வெற்றி

பெருந்திரள் ஆர்ப்பாட்டம் நெல்லை மாவட்ட அஞ்சல் ஊழியர்களின் கூட்டு போராட்டக்குழுவிற்கு கிடைத்த முதல் வெற்றி.
             ஆம் தோழர்களே நமது JCA வின் முதல் நோக்கம் அரசை எதிர்க்கும் ஊழியர் போராட்டம் வலிமைமிகுந்ததாக இருக்கவேண்டும் என்பதே. 
அந்த போராட்ட களத்தில் நம்மவர்கள் சுணக்கம் காட்டிய போது நம்மிடையே ஏற்பட்ட மனக்குறையே JCA புது பொலிவு பெறவேண்டிய அவசியத்தை கொடுத்தது. 
அதன் விளைவு ஊழியர் போராட்டம் வலிமைமிகுந்ததாக கட்டமைக்க படவில்லை எனில் தொழிலாளர்கள் நம்மை விட்டு விலகிசெல்ல நேரிடும் என உணர்த்து சிலர்  மத்திய தொழிற்சங்கங்களின் அறைகூவலை ஏற்று 7 வது ஊதிய குழு அமைக்க வேண்டியும், புதிய பென்ஷன் திட்டத்தை வாபஸ் பெற கோரியும் ஆர்ப்பாட்டம் நடத்த வேண்டிய கட்டாயத்துக்கு தள்ளப்பட்டனர். அதனை தொடர்ந்து இன்று அவர்களும் நம்மைப்போல ஆர்ப்பாட்டம் நடத்தினர். அதுவும் சிரமேற்கொண்டு செயல்பட்டனர் என்ற செய்தி நமக்கெல்லாம் சந்தோசமே. இதை தான் நாம் எதிர்பார்த்தோம் தோழர்களே நமது முதல் நோக்கம் நிறைவேறியது மட்டுமல்ல 
இதுவே நமது  முதல் வெற்றி !
இனி தொடரும் நம்(ஊழியர்)  வெற்றி !

குறிப்பு : நமது பெருந்திரள் ஆர்ப்பாட்டம் குறித்த செய்திகள் விரைவில்.

மதுரை புதிய நிர்வாகிகளுக்கு நல் வாழ்த்துக்கள்

              28.04.2013 அன்று மதுரை தலைமை அஞ்சலகத்தில் நடைபெற்ற 29 வது மதுரை கோட்ட மாநாட்டில் தலைவராக திரு P. பெருமாள் அவர்களும் செயலாளராக திரு.K.V. ராஜன்  அவர்களும்
பொருளாளராக திரு அசோக்குமார் அவர்களும் ஒருமனதாக தேர்ந்தெடுக்க பட்டனர், அவர்களுக்கு திருநெல்வேலி கோட்ட சங்கத்தின் மனமார்ந்த நல் வாழ்த்துக்கள்
மாநாட்டில் மாநில செயலாளர் திரு G.P. முத்து கிருஷ்ணன் அவர்களும்
முன்னாள்  முன்னாள் மாநில உதவி செயலாளர் திரு பாண்டியன் அவர்களும்
முன்னாள் கோட்ட செயலாளர் திரு அய்யலு அவர்களும்
முன்னாள் மண்டல செயலாளர் திரு முத்துசாமி அவர்களும்
மண்டல செயலாளர் திரு G.பாஸ்கரன் அவர்களும்
மாநில உதவி செயலாளர் திரு N.J.உதயகுமரன் அவர்களும்


திருநெல்வேலி கோட்டசெயலாளர் திரு S.A. இராமசுப்பிரமணியன் அவர்களும்  கோவில்பட்டி கோட்ட செயலாளர் திரு சமுத்திர பாண்டியன் அவர்களும்
இராமநாதபுரம் கோட்ட செயலாளர் திரு முகமது இஸாதீன் அவர்களும்
தேனீ கோட்ட செயலாளர் திரு முத்தையா அவர்களும்
விருதுநகர் கோட்ட செயலாளர் திரு சேவுக பாண்டியன் ஆகியோர் கலந்து கொண்டனர். அதனை தொடர்ந்தது தென்மண்டல கோட்ட செயலர்களின் கூட்டம் நடைபெற்றது.

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More

 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | Grants For Single Moms