The Interest rates for Deposits is again lowered by 0.1% from 1st July 17

ஜூலை முதல் வட்டி விகிதம் மீண்டும் 0.1% குறைப்பு

Thursday, 28 August 2014

பெருந்திரள் ஆர்ப்பாட்டம்

தேசிய சங்கத்தின் மத்திய சம்மேளன அறைகூவலுக்கு இனங்க தேசிய சங்கம் தனித்து நடத்திய பெருந்திரள் ஆர்ப்பாட்டம் 28.08.2014 அன்று திருநெல்வேலி தலைமை அஞ்சலகம் முன்பு நடைபெற்றது.
ஆர்பாட்டத்திற்கு நான்காம் பிரிவின் உதவிதலைவர் திரு ராமலிங்கம்  அவர்கள் தலைமை தாங்கினார்.
திரு குணா உதவி செயலாளர் மூன்றாம் பிரிவு
திரு காளிதாசன் தலைவர்  நான்காம் பிரிவு
திரு சாக்ரடீஸ் செயலாளர் நான்காம் பிரிவு ஆகியோர் முன்னிலை வகித்தனர். தமிழ்நாடு ஓய்வு ஊதியர் சங்க மாநில உதவி செயலாளர்
திரு சண்முகசுந்தர ராஜா
NFPE நான்காம் பிரிவின் முன்னாள் தமிழ்மாநில தலைவர்  திரு கிருஷ்ணன் ஆகியோர் வாழ்த்தி பேசினர்
கூட்டத்தில் நமது கோட்ட மூன்றாம் பிரிவின் செயலாளர்
திரு.ச.ஆ.இராமசுப்பிரமணியன் அவர்கள் சிறப்புரையாற்றினார்.
திரு பாரதி அவர்கள் நன்றி நவில ஆர்ப்பாட்டம் நிறைவுற்றது.
கூட்டத்தில் நமது உறுப்பினர்கள் திரளாக கலந்து கொண்டனர்.

விநாயகர் சதுர்த்தி வாழ்த்துக்கள்


வாக்குண்டாம் நல்ல மனமுண்டாம் மாமலராள்
நோக்குண்டாம் மேனி நுடங்காது - பூக்கொண்டு  
துப்பார் திருமேனி தும்பிக்கை யான் பாதம் 
தப்பாமல் சார்வார் தமக்கு

பெருந்திரள் ஆர்ப்பாட்டகோரிக்கைகள்

28.08.2014  அன்று தேசிய அளவில் அனைத்து அலுவலகங்கள் முன்பும்  நடைபெறும் பெருந்திரள் ஆர்ப்பாட்டத்தின்  நமது கோரிக்கைகள்  இதோ


Tuesday, 26 August 2014

ஆர்ப்பாட்ட அறிவிப்பு

அனைத்து தமிழ்மாநில கோட்ட சங்க நிர்வாகிகளுக்கு 
அன்பு வேண்டுகோள்
                  வணக்கம்,  நமது தேசிய சம்மேளனம் 01.08.2014 அன்று தேசிய அளவில் விடுத்த அறைகூவலுக்கு இணக்க ஐந்து கட்ட போராட்ட அறிவிப்பின் முதற்கட்டமாக 28.08.2014 அன்று  அனைத்து கோட்டங்களிலும் ஆர்ப்பாட்டம் நடத்த வேண்டுகிறோம்
  P.திருஞான சம்பந்தம்  
தலைவர் 
தமிழ்மாநில இடைகால குழு

ஐந்து கட்ட போராட்டம்.

1.       28.08.2014  அன்று மத்திய அரசிடமும் நமது இலாகாமுதல்வரிடமும்
 நமது கோரிக்கைகள் அடங்கிய மனு அளிப்பு மற்றும் தேசிய அளவில் அனைத்து அலுவலகங்கள் முன்பும்  பெருந்திரள் ஆர்ப்பாட்டம்.
  
2.       24.09.2014  அன்று அனைத்து கோட்ட அலுவலகங்களின் முன்பும் ஒருநாள் தர்ணா போராட்டம். 

3.       27.10.2014 முதல் 31.10.2014 வரை  மாநில மற்றும் மண்டல அலுவலகங்களின் முன்பு ஐந்து நாட்கள் தொடர் தர்ணா போராட்டம். 

4.       நவம்பர் அல்லது டிசம்பர் மாதங்களில் ஒருநாள்  பாராளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் நடைபெறும் போது பாராளுமன்றம் நோக்கி மிக பிரமாண்ட பேரணி. (தேதி பின்னர் அறிவிக்கப்படும்)

5.      மத்திய (டாக் பவன்) மற்றும்  அனைத்து மாநில மண்டலஅலுவலகங்களின் முன்பு டிசம்பர் 1 முதல் தொடர் உண்ணாவிரத போராட்டம்.

இதற்கும் செவிசாய்க்க அரசும் இலாகாவும் மறுத்தால்.........?
ஜனவரியில் காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டத்திற்கு  தயாராவோம்

Sunday, 24 August 2014

கூட்டு பொதுக்குழு கூட்டம்

                    தேசிய சங்கத்தின் கூட்டு பொதுக்குழு கூட்டம் திருநெல்வேலி  அஞ்சலகத்தில் 24.08.2014 ஞாயிறு காலை 1000 மணிக்கு நடைபெற்றது.
கூட்டத்திற்கு உதவி தலைவர்  திரு.P.சுப்பிரமணியன் அவர்கள் தலைமை தாங்கினார்  முன்னாள் தலைவர் திரு.E.ஆனந்தராஜ் அவர்கள் முன்னிலை வகித்தார்.
கூட்டத்தில்  உதவி தலைவர் திரு.P.சுப்பிரமணியன் அவர்கள் தலைவராக ஒருமனதாக தேர்ந்தெடுக்கபட்டார். அவர் தலைவராக தேர்ந்தெடுக்கபட்டதால்  ஏற்பட்டுள்ள காலியிடத்திற்கு உதவி செயலாளர் திரு அந்தோணி பிச்சை அவர்கள் உதவி தலைவராகவும் உதவி செயலாளராக திரு குணசேகரன் அவர்களும் தேர்ந்தெடுக்க பட்டனர்.
 

தேசிய சங்கம் பெற்று கொடுத்த மரியாதை

அன்பு தோழர்களே 
            வணக்கம். கடந்த பல வருடங்களாக எந்த ஒரு உறுப்பினரையும் கண்டுகொள்ளாத மாற்று சங்கம் இந்த வருடம் நம்மிடையே  வந்து சிலர் உறுப்பினர் ஆனவுடன் புதிய ஞானோதையம் வந்து அவர்களின் வீடு தேடி சென்று கெஞ்சி கூத்தாடி எம்மிடம் மீண்டும் வாருங்கள் வேண்டியதை தருகிறோம் என்று மல்லாடுகிறார்கள்.  அந்த உறுப்பினர்களும் நம்மை அழைத்து உண்மையிலே நாங்கள் இன்று தான் நாங்கள் இழந்த கெளரவத்தை மீண்டும் பெற்றுள்ளோம் என்று நன்றியுடன் நினைவு கூர்கிறார்கள். அவர்களை தேசிய சங்கம் நெஞ்சார வாழ்த்துகிறது.


Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More

 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | Grants For Single Moms