ஸ்ரீ ஆண்டாள் |
மாதங்களில் நான் மார்கழி யாக இருக்கிறேன் என்பது கண்ணபிரானின் அருள்வாக்கு
ஸ்ரீ ஆண்டாள் |
நம் முன்னோர்கள் முழு ஆண்டையும் ஆறு பருவங்களாக பிரித்தனர் அவை கார் கூதிர் முன்பனி பின் பனி இளவேனில் முதுவேனில் என வகுத்தனர்
அவற்றில் கார்த்திகை - மார்கழி கூதிர் பருவம் ஆகும் கூதிர் என்பது குளிர் அதிகமான காலமாகும் இக்காலத்தில் உடல் வெப்பம் தனிய விடியற் களத்தில் குளிப்பது உடல் நலத்திற்கு பயன் அளிக்கும்
உடல் குளிர்ச்சியுடன் உள்ளமும் குளிர இறைவழிபாடு மிக்க அவசியம் .
வைணவ சமய வழிபாட்டில் ஒன்றறக் கலந்து விட்ட ஒன்று திருப்பாவையாகும். மாதவனாகிய எம்பெருமானுக்கு உகந்த மார்கழி மாதக் காலைகளில் அனைத்து வைணவக் கோயில்களிலும் இசைக்கப்படுவதே இதன் பெரும் சிறப்பு. தமிழில் புனையப்பெற்ற பாடல்களே ஆயினும், தமிழறியா அடியார்கள் கொண்ட வைணவத் தலங்களிலும், மார்கழி மாதக் காலைகளில் திருப்பாவை இசைக்கப்படுவதும், இந்தியாவில் எங்கெல்லாம் பெருமானின் திருக்கோயில்கள் உள்ளனவோ அங்கெல்லாம், கோதை தனக்கும் ஒரு தனிச் சந்நதி கொண்டுள்ளதும் வேறு எந்த ஒரு அடியவருக்கும் காணப் பெறாத தனிச் சிறப்பாகும். மொழி வேறுபாடின்றி, வைகுந்த நாதனின் வழிபாட்டில் இந்தியக் கண்டம் முழுவதும் விரவிக் காணப்படுவது திருப்பாவைத் தொழுகை.
அப்படி பட்ட பெருமைக்குரிய திருப்பாவை நோன்பு இன்று (December 17) முதல் கடைபிடிக்க படுகிறது. அந்நோன்பை நாமும் கடைபிடித்து பெருமாளின் பேரன்புக்கு பதிரமவோமாக.
மேலும் படிக்க இங்கே சொடுக்கவும்
மேலும் படிக்க இங்கே சொடுக்கவும்
0 comments:
Post a Comment