Saturday, 7 January 2012

இரண்டாம் நாள் நிகழ்ச்சிகள்

                                      காலை  1000 மணி  முதல்  தொடங்கிய  subject committee விவாதத்தில்  ஏறக்கொறைய  50 கோட்டங்களின்  சார்பாளர்கள்  உரை  நிகழ்த்தினர் . சுமார்  12 மணிநேரம்  எவ்வித    கூச்சல்   குழப்பம்  இன்றி  மிகவும்  அமைதியாக  ஜனநாயக முறைப்படி விவாதங்கள் நடந்தன . இன்றைய  இலாகாவின் பிரச்சனைகள்  குறித்து  பேசினார் .

குறிப்பாக  மதுரை  கோட்ட  செயலாளர்  திரு  அய்யலு  அவர்கள்  SB minus balance பிரச்சனைகளை ஊழியர்கள் படும்  அவதிகள்  குறித்து விளக்கினர் .
கரூர்  கோட்ட செயலாளர் திரு சுகுமார்  அவர்கள்  தலைவர் KR அவர்களுக்கு தபால்  தலை  வெளியீட  சம்மேளனம்  முயற்சி  எடுத்திட  கோரிக்கை  விடுத்தார் .



நமது  திருநெல்வேலி  கோட்ட  செயலாளர் திரு இராம  சுப்ரமணியன்  பல்வேறு  பிரச்சனைகள் குறித்து தனது  கருத்தை  பதிவு  செய்தார். அவற்றில் சில.

  • வட்டி  விதிதங்களை  நிர்ணயிக்கும்  உரிமை  – பொதுத்துறை  நிறுவனங்களை  போல  அஞ்சல்  இலாகாவிருக்கு  வழங்க   வலியுறுத்த  வேண்டும் 
  • பழுதடைந்த  computer printer களுடன்  போராடும்  அலுவலங்களுக்கு  புதிய  computer printer வழங்க  வேண்டும் 
  • PLI RPLI Decentralised காரணமாக  ஏற்பாடும்   சிரமங்களுக்கு தீர்வு ஏற்படுத்த  வேண்டும் 
  • பணி வழங்க படாமல்  இறுக்கும்  RRR Candidates பிரச்சனைகளுக்கும்  உடனடி  தீர்வுவாக  பணி  வழங்க  பட  வேண்டும் .
(அதற்கு பதிலுரையில் நமது  மாநில  செயலாளர்  ஏறக்குறைய  95 பேரில்  70 க்கு  மேற்பட்டவர்களுக்கு   நமது  தேசிய  சங்கத்தின்  தொடர்  போராட்டத்தின்  மூலம்  Chennai நகர  மண்டலத்தில்  பணி  வழங்கிய  திரு ராமானுஜம்  PMG அவர்களுக்கு  நன்றியை  தெரிவித்தார் . மற்றவர்களுக்கும்  விரைவில்  பணி   கிடைக்க ஆவணம்  செய்வதாக  உறுதி  யளித்தார்கள் )

  • IP examination க்கு LGO exam  கொடுத்தது  போல  புதிய தேர்வு முறையில் Extra வாக 2 Chances வழங்கப்பட  வேண்டும் 
  • IP examination க்கு PM Cadre officials க்கு தேர்வு எழுத  வாய்ப்பு வழங்கப்பட வேண்டும் .
  • Postmaster Cadre க்கு Cadre Restructring ன் போது Grade Pay 4200 பெற்று தர  சமேளனத்தை கேட்டு கொண்டார் 
  • LR பணியிடங்கள்  கண்டறியபட்டு LR List  வெளியிடப்பட  வேண்டும் 
  • குறிப்பாக தெற்கு  மண்டலத்தில் PM Cadre பணி இடங்களில்  தடாலடி  இட மாறுதல்  தடுத்து  நிறுத்த  பட  வேண்டும் 
  • எல்லா  போரட்டமும்  குறிப்பிட காலவரையுடன்  நடைபெற வேண்டும் என்றும்  அதன்மூலம்  போரட்ட முறைகள்  கால  சுழலுக்கு  ஏற்ப  மாற  வேண்டிய  அவசியத்தை வலியுறுத்தினார்
என்பது  போன்ற  பல்வேறு பிரச்சனைகள்  குறித்து  தனது கருத்தை தெரிவித்தார் .

0 comments:

Post a Comment

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More

 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | Grants For Single Moms