தென் மண்டல இயக்குனர் திரு .V.S. ஜெயசங்கர் அவர்களின் தனி மனித சுதந்திரத்திற்கு எதிரான காட்டு தர்பார் உத்திரவு !
ஊழியர்கள் தங்களது EB BILL ஐ அந்தந்த
மாதம் அவர்கள் பணி புரியும் அந்தந்த அஞ்சலகங்களில் தான் கட்ட வேண்டும் !
இல்லையென்றால் ' IT WILL BE VIEWED SERIOUSLY' என்றும் அந்த ஊழியர்கள்
மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தனது அதிகார வரம்பை மீறிய
உத்திரவு !
இதனை நாம் ஏற்று நடத்திடலாம் ! ஆனால்
, நாளை ஒவ்வொரு ஊழியரும் தனது ஊதியத்தில் RELIANCE COMPANY இன் தங்கத்தை
அந்தந்த அஞ்சலகத்தில் மாதா மாதம் வாங்க வேண்டும் . இல்லையென்றால்
உடன் தண்டனை கொடுக்கப் படும் என்பார் !.
பிரிதொரு நாள் , அஞ்சலகத்தில் எல்லோரும் ' CHOTTU KOOL' கட்டாயம் வாங்க வேண்டும் என்பார் ! இல்லையென்றால் தண்டனை என்பார் !
மற்றொரு நாள் வேறு ஏதேனும் 'டுபாக்கூர்
' பொருளை ஏஜென்சியில் எடுத்து அதனையும் வாங்க வேண்டும் என்பார்.
இதற்கெல்லாம் உன் சம்பளத்தில் ஏற்கனவே ECS இல் பிடித்தாயிற்று . உனக்கு
இந்த மாதம் சம்பளமில்லை என்பார் . இவையெல்லாம் சரியா ?
எதை வாங்க வேண்டும் . எதை வாங்க வேண்டாம்
. எங்கு கட்ட வேண்டும் . எங்கு கட்ட வேண்டாம் . என்றெல்லாம் தீர்மானிக்க
தனி மனிதனுக்கு முழு உரிமை உள்ளது ! இந்திய அரசியல் அமைப்பு சட்டம்
தெளிவாகக் கூறுகிறது . அவரவர்களுக்கு உணர்வும் உள்ளது. இலாக்கா மீது பற்றும் உள்ளது. அதை அவர்களே தீர்மானித்துக் கொள்வார்கள்.
இலாக்கா நடத்தை விதிகளிலோ , இலாக்கா சேவை
விதிகளிலோ, பணி நியமன விதிகளிலோ , அடிப்படை விதிகளிலோ இதுவெல்லாம்
செய்ய வேண்டும் என்றோ, இல்லை எனில் தண்டனை என்றோ எங்கும் இல்லை.
இந்த விதிகளையெல்லாம் மீறி , தானே
புதிதாக விதி வகுக்க இந்த அதிகாரிக்கு அதிகாரம் யார் தந்தது ? அரசாங்கமா ?
இலாக்காவா ? அல்ல ! அல்ல !
இதன் தாக்கமே இது ! இது சரியா என்று உயர் அதிகாரிக்கு NFPE-FNPO
அஞ்சல் மூன்று சங்கங்களின் சார்பாக கூட்டுக் கடிதம் அளிக்கப்பட்டுள்ளது அந்த கடிதத்தின் நகலை கீழே பார்க்க !
0 comments:
Post a Comment