போலி தொழிற்சங்க வா(வியா)திகள்
நாடு தழுவிய இரண்டு நாள் வேலைநிறுத்த போராட்டம் பிப்ருவரி 20 மற்றும் 21- 2013 இன்று வெற்றிகரமாக தொடங்கியது. நாட்டின் பல்வேறு இடங்களில் இருந்தும் செய்திகள் வந்தவண்ணம் உள்ளன.ஆனால் தமிழ்நாட்டில் மட்டும் அதுவும் அஞ்சல் துறையில் Mixed Responseஆக உள்ளது. ஏன் இந்த நிலை ?. இரு காரணங்கள் சொல்லபடுகிறது
1. இரு மாத இடைவெளியில் அடுத்த போராட்டம் :
ஊழியர் தரப்பில் ஒருவித அதிருப்தியும் உள்ளது என்னவென்றால் கடந்த 8, 10மாதங்களுக்கு முன்பே இந்த வேலைநிறுத்த போராட்ட தேதி முடிவு செய்திட்ட போது , கடந்த டிசம்பர் மாதம் ஒரு நாள் வேலைநிறுத்த போராட்ட அறிவிப்பு NFPE தலைமை செய்தது ஏன் ?
அந்த அரசியல் சார்பு போராட்டம் தேவைதானா ? என ஊழியர் தரப்பில் வினா எழுப்பிகின்றனர். இதை மாற்று சங்கத்தின் தலைமை சிந்திக்குமா ?
உடனடியாக இரு மாத இடைவெளியில் அடுத்த போராட்டம் ஒருவித சலனத்தை நம்மிடையே தோற்றுவிக்க காரணமாக விடலாமா ?
என்றைக்கும் ஊழியர் நலன் சார்ந்து முடிவுகளை எடுக்கும் தேசிய சங்கம் இம்முறையும் கடந்த டிசம்பர் மாதம் ஒரு நாள் வேலைநிறுத்த போராட்டத்தை ஆதரிக்க வில்லை. அந்த அரசியல் சார்பு போராட்டம் தேவையில்லை என நல்ல முடிவை எடுத்தது. ஆனால் மாற்று சங்கத்தின் தலைமையோ போராட்டத்தை ஆதரித்தது ? ஏன்
அன்றே நாம் கூட 10.12.2012 அன்று நமது website இல் Our FNPO and its affiliated unions have decided not to participate in the proposed strike by others on 12.12.12. However on the same demands, we propose to go on strike in the month of FEB. 2013. Details will be posted during first week of Jan. 2013 after consultation with other Central Govt Employees Unions/ Federations
என தெளிவாக சொன்னோம் .
2. கோஷ்டி பூசல்
எப்போதும் தொழிலாளர்களுக்காக பிறந்தவர்கள் என காட்டிகொள்ளும் மாற்று சங்கம். மேடை கிடைத்தால் வீர வசனங்களை
வீரா வேசமாக பேசி மார்தட்டி கொள்பவர்களின் இன்றைய நிலை என்ன ?
பல்வேறு கோட்டங்களில் தங்களுக்குள் உள்ள கோஷ்டி பூசல்களால் அகிலஇந்திய தலைமையின் எதிர்ப்பாளர்கள் கோட்ட மட்டங்களின் தங்கள் எதிர்ப்பை காட்ட தங்கள் உறுப்பினரை கூட வேலை செய்ய சொல்வதாக கேள்விப்பட்டோம். மிகுந்த மனவேதனைதான். இந்த செய்கை ஊழியர் மட்டத்தில் போராட்டகுணத்தை நீர்த்துபோக செய்யாதா ? சிந்திக்க மறந்தது ஏன்?
ஏன் நமது நெல்லை கோட்டத்தில் கூட JCA முடிவுக்கு மாறாக மாற்று சங்கத்தில் தங்களுக்குள்ளாகவே முக்கியமான தொழிற்சங்க தலைவர்கள் மட்டும் போராட முடிவெடுத்தது வருத்தத்திற்குரியது.
மிக பெரிய தொழிற்சங்கம் இப்படி முடிவெடுக்கலாமா ?
பெரியது என்பது எண்ணிக்கையில் மட்டும் இருந்து என்ன பயன் ? எண்ணத்தில் இல்லையே ? என்பது வேதனையே ?
குறிப்பாக JCA வில் தலைமை பொறுப்பில் உள்ளவர்கள் JCA நோக்கத்திற்கு எதிராக இப்படி முடிவெடுக்கலாமா ?
இந்நிலை தொடருமானால் நாளை நாம் கூட JAC வில் பங்கேற்பதா இல்லையா ? என மறுபரிசிலனை செய்யவேண்டிய நிலை உருவாகும்.
மிகுந்த தொழிற்சங்க அனுபவம் உடைய திரு s.k.ஜேக்கப் ராஜ் போன்றவர்கள் கூட இப்படிப்பட்ட முடிவை எடுத்தது வேதனைக்குரியது.
இந்திய தேசமெங்கும் அனைத்து பகுதி ஊழியர்களும் அணி திரளும் போது
நாம் மட்டும் ஒதுங்கிக் கொள்ளலாமா ? அப்படி செய்வது கோழைத்தனமாகாதா? தேவை குழு மனப்பான்மையா ? பொது நன்மை தேவையா ?
தனி மனிதர்களின் விருப்பு வெறுப்பு தேவையா ?சிந்திக்க வேண்டுகிறோம் .
இன்று 10 கோடி பேருடன் இணைந்து போராட வில்லையானால் , நாளை தனியே போராடி மட்டும் தலைகீழாக மத்திய அரசின் கொள்கை முடிவுகளை புரட்டிப் போட்டுவிட முடியுமா ? ஒவ்வொரு துறையிலும் ஊழியர்கள் பாதிக்கப் படும் போது ஆங்காங்கே போராடி தடுக்க முடியாத போது , தற்போது அனைத்து பகுதி ஊழியர்களும் ஒன்று திரண்டுள்ளோம் ! இன்னும் காலம் முடிந்து விடவில்லை. இன்னும் ஒருநாள் எஞ்சி உள்ளது இன்றாவது முடிவெடுங்கள் நாளைய போராட்டம் இன்னும் தீவிரமாகட்டும்.
இன்று 10 கோடி பேருடன் இணைந்து போராட வில்லையானால் , நாளை தனியே போராடி மட்டும் தலைகீழாக மத்திய அரசின் கொள்கை முடிவுகளை புரட்டிப் போட்டுவிட முடியுமா ? ஒவ்வொரு துறையிலும் ஊழியர்கள் பாதிக்கப் படும் போது ஆங்காங்கே போராடி தடுக்க முடியாத போது , தற்போது அனைத்து பகுதி ஊழியர்களும் ஒன்று திரண்டுள்ளோம் ! இன்னும் காலம் முடிந்து விடவில்லை. இன்னும் ஒருநாள் எஞ்சி உள்ளது இன்றாவது முடிவெடுங்கள் நாளைய போராட்டம் இன்னும் தீவிரமாகட்டும்.
போராடுவோம் ! போராடுவோம் ! போராடுவோம் !
போராட்டத்தை முழு வெற்றியாக்குவோம் !
0 comments:
Post a Comment