"Here’s the smell of the blood still; all the perfumes of Arabia will not sweeten this little hand".
உலக அறமன்றமே!
உன் மனசாட்சியின் கதவுகளைத் திற
பன்னிரெண்டு
வயது பாலகன்
துப்பாக்கி தூக்கினால்
அது போர்க் குற்றம்!
பன்னிரெண்டு வயது பாலகன் மீது
துப்பாக்கியால் சுட்டால்...
இது யார்க் குற்றம்!
துப்பாக்கி தூக்கினால்
அது போர்க் குற்றம்!
பன்னிரெண்டு வயது பாலகன் மீது
துப்பாக்கியால் சுட்டால்...
இது யார்க் குற்றம்!
உலக அறமன்றமே!
ஈ யையும் எறும்பையும் கூட கொல்வது
குற்றம் என்ற புத்தனின் பெயரால்
கொல்லப்பட்டதோ ஆயிரமாயிரம்
உயிர்கள்.
இன்னும் என்ன தயக்கம் ?
உலக அறமன்றமே! இன்றே நீதி வழங்கு!
இல்லையேல்
உலகில் வலியவன் எளியோனை கொல்வது
நீதியாகும்.
மூன்றாம் உலகமகாயுத்தம் தவிர்க்கமுடியாததாகும்.
இரண்டாம் உலகமகாயுத்ததின் முடிவு
உந்தன் ஆரம்பம் - எச்சரிக்கிறோம்
மூன்றாம் உலகமகாயுத்ததின் ஆரம்பம்
உந்தன் முடிவாகிவிடகூடாது என.
இன்றே
நீதி வழங்கு!
0 comments:
Post a Comment