Saturday, 20 April 2013

சொல்ல மறந்த கதைதான்.

தம்பிக்கு என ஆரம்பித்த அண்ணனுக்கு.............

சொல்ல மறந்த கதைதான் நாங்களும் சொல்ல விரும்பினால்  ?
வேண்டாம் உங்களை போல மாற நாங்களும் விரும்பவில்லை.


கூட்டு நடவடிக்கை குழு Notice க்கு பதில் சொல்ல விரும்பிய அண்ணா.......
எதற்கு எடுத்தாலும் "தான்" "தான்"  என்ற எண்ணம் கொண்ட தாங்கள் கூட்டு நடவடிக்கை குழு Notice க்கு தனி நபரை (தம்பியை) குற்றம் சுமத்துவதில் வியப்பில்லை. இருந்தபோதிலும் கூட்டு நடவடிக்கை குழு அமைப்பாளர் என்ற முறையில் பதில் சொல்ல விரும்புகிறேன்.
மூன்றாவது முறையாக FNPO சங்கம்  உங்கள் செயல்பாடுகளை  விமர்சனம் செய்வதாக குறிப்பிட்டுள்ளீர்கள்.  
விமர்சனத்தை எதிர்கொண்டு தானும் மாறிகொள்வது தான் சிறப்பு.
இல்லையேல் பதில் சொல்ல வேண்டும்  இத்தனை நாள் பதில் சொல்ல மறந்தது ஏன் ? இன்றாவது மவுனம் கலைந்ததற்கு சந்தோசமே.
 FNPO  பங்கு பற்றி குறிப்பிட்டுள்ளீர்கள்  நாங்கள் எந்த இடத்திலும் தவறான ஒன்றை சொல்லவில்லை  பெரிய சங்கம் போராட்டத்தை குலைக்கும்  போது என்ன நடக்கும் என நான் சொல்லி தாங்கள் தெரியவேண்டிய அவசியம் இருப்பதாக கருதவில்லை. 
12.12.2012  வேலை நிறுத்தத்தை முறியடிக்க NFPE க்கு எதிராக  நாங்கள் செய்த உள்ளடிகள்  உங்களால்  கூற முடியுமா ? என்றைக்கும் தொழிலாளர் மற்றும் தொழிசங்க நலன்களுக்கு எதிராக நாங்கள் செயல்பட்டதில்லை. அதே சமயம் 
FNPO பங்குபெறாத போது பாளை FNPO தோழர் வேலை செய்ய அனுமதித்தல் எப்படி குற்றமாகும் ? சிந்திப்பீர்.
R 4 குறித்து சரியான தகவல்கள்  மட்டுமே கொடுக்கபட்டுள்ளது. பொய்சொல்லி அரசியல் பொழப்பு நடத்தவேண்டிய அவசியம் எங்களுக்கு இல்லை. அத்தனைக்கும் மேலாக மனசாட்சி இருக்குமானால் சிந்திப்பீர்.
பல்வேறு JCA போராட்டங்களில் தங்களோடு கைகோர்த்து வந்ததை  மறைக்கலாமா ?   இல்லை மறுக்கமுடியுமா ?
ஆனால் இன்று FNPO ஏன் இந்த நிலை எடுத்தது என்பதையும், தங்களின் Double Stand ஐ முடிந்தால் எண்ணி பாருங்கள்........   
கடந்த 20,21 போராட்டத்தின் போது  10 தினகளுக்கு முன்பாக போராடுவதில்லை என முடிவெடுத்துவிட்டு இரு தினங்களுக்கு முன்பாக JCA சார்பாக Notice போடுவதற்கு FNPO ஒப்புதல் கேட்டது ஏன் ? பிறகு அனைத்து NFPE Member களையும் கூப்பிட்டு வேலை செய்ய சொன்னது ஏன் ? 
JCA ஏன் தங்களின் மத்திய மாநில தலைமைகளையும் மதிக்க தெரியாத நீங்கள் எங்களுக்கு சொல்ல முனையும் கதை தான் என்ன ? 
கதை சொல்லி இதுவரை ஏமாற்றியது போதும். உண்மை சற்று  கசக்கத்தான் செய்யும். மேலும் முறையாக அனைத்து சங்கங்களும் கலந்து கொள்ள அழைப்பு விடுத்தும் JCA கூட்டத்தில் கலந்து கொள்ள மறுத்தது ஏன்? உங்கள் நிலைப்பாட்டை அங்கே விளக்க வேண்டியது தானே? பெரும்பான்மை முடிவுக்கு கட்டுபடுவதை விட்டு விட்டு விதண்டா வாதம் செய்வது ஏன்?   
நீங்கள் எண்ணிக்கையில் பெரியவர்களாக இருக்கலாம் ? 
ஆனால் எண்ணத்தில் இல்லையே என்பதே எங்கள் வேதனை.
குழப்பவாதிகளை கொஞ்சம்  தள்ளி  வைத்தே  பார்போம் . ஆம் தொழிலாளர் பிரச்சனைக்கும் தொழிற்சங்க குழு மனப்பான்மைக்கும் வித்தியாசம் தெரியாத குழப்பவதிகளை சற்றே தள்ளிவைப்போம்.
பல்வேறுபட்டவர்களின் சிந்தனைகளை பிரசுரிப்பதோடு விட்டு விடாமல் சற்று உள்வாங்கி கொள்ள முயற்சியுங்கள்
இன்னும் காலம் கெட்டு போயிடவில்லை 
வாருங்கள் இணைந்த கரங்களாய் போராடுவோம்
நம் போராட்டம் அதிகார வர்க்கத்திற்கும்  அடக்குமுறைக்கும் எதிராக தானே தவிர நமக்குள் இல்லை.மனசாட்சி உள்ளவர்கள் சிந்திக்கட்டும். 

வேதனையோடு நாங்கள் சொன்னதை மீண்டும் இதோ கீழே தருகிறோம் மீண்டும் படித்து பாருங்கள் 



போலி தொழிற்சங்க  வா(வியா)திகள்
                நாடு தழுவிய இரண்டு நாள் வேலைநிறுத்த போராட்டம் பிப்ருவரி 20 மற்றும் 21-  2013 இன்று வெற்றிகரமாக தொடங்கியது.  நாட்டின் பல்வேறு இடங்களில் இருந்தும் செய்திகள் வந்தவண்ணம் உள்ளன.
ஆனால் தமிழ்நாட்டில் மட்டும் அதுவும் அஞ்சல் துறையில் Mixed Responseஆக உள்ளது. ஏன் இந்த நிலை ?. இரு காரணங்கள் சொல்லபடுகிறது
1.      இரு மாத இடைவெளியில் அடுத்த போராட்டம் :

               ஊழியர் தரப்பில் ஒருவித அதிருப்தியும் உள்ளது என்னவென்றால் கடந்த 8, 10மாதங்களுக்கு முன்பே  இந்த வேலைநிறுத்த போராட்ட தேதி முடிவு செய்திட்ட போது , கடந்த டிசம்பர் மாதம் ஒரு நாள் வேலைநிறுத்த போராட்ட அறிவிப்பு NFPE தலைமை செய்தது ஏன் ?
அந்த அரசியல் சார்பு போராட்டம் தேவைதானா ? என ஊழியர் தரப்பில் வினா எழுப்பிகின்றனர். இதை மாற்று சங்கத்தின் தலைமை சிந்திக்குமா ?
உடனடியாக  இரு மாத இடைவெளியில் அடுத்த போராட்டம் ஒருவித சலனத்தை நம்மிடையே தோற்றுவிக்க காரணமாக விடலாமா ?

               என்றைக்கும் ஊழியர் நலன் சார்ந்து முடிவுகளை எடுக்கும் தேசிய சங்கம்  இம்முறையும் கடந்த டிசம்பர் மாதம் ஒரு நாள் வேலைநிறுத்த போராட்டத்தை ஆதரிக்க வில்லை. அந்த அரசியல் சார்பு போராட்டம் தேவையில்லை என நல்ல முடிவை எடுத்தது.  ஆனால் மாற்று சங்கத்தின் தலைமையோ போராட்டத்தை ஆதரித்தது ? ஏன்
அன்றே நாம் கூட 10.12.2012 அன்று நமது website இல் Our FNPO and its affiliated unions have decided not to participate in the proposed strike by others on 12.12.12. However on the same demands, we propose to go on strike in the month of FEB. 2013. Details will be posted during first week of Jan. 2013 after consultation with other Central Govt Employees Unions/ Federations
 என தெளிவாக சொன்னோம் .
      2.  கோஷ்டி பூசல் 
                எப்போதும் தொழிலாளர்களுக்காக பிறந்தவர்கள் என காட்டிகொள்ளும் மாற்று சங்கம்.  மேடை கிடைத்தால் வீர வசனங்களை
வீரா வேசமாக பேசி மார்தட்டி கொள்பவர்களின்  இன்றைய நிலை என்ன ?
பல்வேறு கோட்டங்களில் தங்களுக்குள் உள்ள கோஷ்டி பூசல்களால் அகிலஇந்திய தலைமையின் எதிர்ப்பாளர்கள் கோட்ட மட்டங்களின் தங்கள்  எதிர்ப்பை காட்ட தங்கள் உறுப்பினரை  கூட வேலை செய்ய சொல்வதாக கேள்விப்பட்டோம். மிகுந்த மனவேதனைதான். இந்த செய்கை ஊழியர் மட்டத்தில் போராட்டகுணத்தை நீர்த்துபோக செய்யாதா ?  சிந்திக்க மறந்தது ஏன்?
              ஏன் நமது நெல்லை கோட்டத்தில் கூட JCA  முடிவுக்கு மாறாக  மாற்று சங்கத்தில் தங்களுக்குள்ளாகவே முக்கியமான தொழிற்சங்க தலைவர்கள் மட்டும் போராட முடிவெடுத்தது வருத்தத்திற்குரியது.
மிக பெரிய தொழிற்சங்கம் இப்படி முடிவெடுக்கலாமா ?
பெரியது என்பது எண்ணிக்கையில் மட்டும் இருந்து என்ன பயன் ? எண்ணத்தில் இல்லையே ? என்பது வேதனையே ?
             குறிப்பாக JCA வில் தலைமை  பொறுப்பில் உள்ளவர்கள் JCA நோக்கத்திற்கு எதிராக இப்படி முடிவெடுக்கலாமா ?
இந்நிலை தொடருமானால் நாளை நாம் கூட JAC வில் பங்கேற்பதா இல்லையா ? என மறுபரிசிலனை செய்யவேண்டிய நிலை உருவாகும்.
மிகுந்த தொழிற்சங்க அனுபவம் உடைய திரு s.k.ஜேக்கப் ராஜ் போன்றவர்கள் கூட இப்படிப்பட்ட முடிவை எடுத்தது வேதனைக்குரியது.
            இந்திய தேசமெங்கும்  அனைத்து பகுதி ஊழியர்களும் அணி திரளும் போது 
நாம் மட்டும் ஒதுங்கிக் கொள்ளலாமா ?  அப்படி  செய்வது   கோழைத்தனமாகாதா?  தேவை குழு மனப்பான்மையா ?                                     பொது நன்மை தேவையா ?  
தனி மனிதர்களின் விருப்பு வெறுப்பு  தேவையா ?சிந்திக்க வேண்டுகிறோம் .
            இன்று 10 கோடி பேருடன் இணைந்து  போராட வில்லையானால் , நாளை   தனியே போராடி மட்டும்  தலைகீழாக  மத்திய அரசின் கொள்கை முடிவுகளை புரட்டிப் போட்டுவிட முடியுமா ?  ஒவ்வொரு துறையிலும் ஊழியர்கள் பாதிக்கப் படும் போது  ஆங்காங்கே போராடி  தடுக்க முடியாத போது , தற்போது  அனைத்து பகுதி ஊழியர்களும் ஒன்று  திரண்டுள்ளோம் ! இன்னும் காலம் முடிந்து விடவில்லை. இன்னும் ஒருநாள் எஞ்சி உள்ளது இன்றாவது முடிவெடுங்கள் நாளைய  போராட்டம் இன்னும் தீவிரமாகட்டும்.
போராடுவோம் !                         போராடுவோம் !                              போராடுவோம் !

போராட்டத்தை முழு வெற்றியாக்குவோம் !


0 comments:

Post a Comment

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More

 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | Grants For Single Moms