July 19, 2013
Kalaivaraikalai
தமிழ் வழியில் படித்து இந்தியாவின் உயர்ந்த பதவியை அடைந்துள்ள சாதனை தமிழரை வாழ்த்துவோம் ! கடந்த 50 ஆண்டு கால வரலாற்றில் தமிழகத்தை சேர்ந்த சதாசிவம் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியாக இன்று காலை பொறுப்பேற்றார்.
ஜனாதிபதிமாளிகையில் நடந்த எளிய விழாவில் இவருக்கு ஜனாதிபதி பிரணாப்முகர்ஜி பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்.
இந்தியாவின் தலைமை நீதிபதியாக இருந்த திரு அல்டமாஸ்கபீர் பதவிக்காலம் நேற்றுடன்
நிறைவடைந்தது. இதற்கு பதிலாக திரு சதாசிவம் தலைமை நீதிபதியாக நியமிக்கப்பட்டார்.
இவர் இன்று தனது பொறுப்பை ஏற்றுக்கொண்டார். பதவியேற்பு விழாவில் பிரதமர்
மன்மோகன்சிங்கும் பங்கேற்றார்.மேலும் காங்., தலைவர் சோனியா, பா.ஜ., மூத்த
தலைவர் அத்வானி, மத்திய அமைச்சர்கள், நீதிபதிகள், மூத்த வழக்கறிஞர்கள்
கலந்து கொண்டனர்.
64 வயதாகும் சதாசிவம் உச்ச நீதி மன்றத்தின் 40
வது தலைமை நீதிபதியாவார். இவர் 2014 ஏப்ரல் மாதம் 26 ம் தேதி வரை பதவியில்
இருப்பார். 50 ஆண்டு கால வரலாற்றில் தமிழகத்தை சேர்ந்த ஒருவர் தலைமை
நீதிபதியாக பொறுப்பேற்றமைக்கு பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். நாமும் வாழ்த்துவோம்.
0 comments:
Post a Comment