தனியார் துறையில் புதிய வங்கி உரிமம் பற்றி - RBI புதிய வங்கி உரிமம் விதிமுறைகளை இந்த ஆண்டு பிப்ரவரி மாதம் வெளியிட்டது. அதன் படி வங்கி உரிமம் பெற 26 விண்ணப்பதாரர்கள். அந்த விண்ணப்பதாரர்களில் இந்திய தபால் துறை, தொலை தொடர்பு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகமும் ஓன்று ( India Post),
இந்தியா போஸ்ட் ஒரு அமைச்சகத்தின் ஒரு பகுதியாக இருப்பதால், இது ஒரு தனியார் நிறுவனம் என்று கருத முடியாது. ஒரு அரசு துறை இந்திய ரிசர்வ் வங்கி கீழ் வர முடியாது என்பதால், இந்திய ரிசர்வ் வங்கி விதிகளின்படி, ஒரு வங்கி உரிமம் தகுதி பெற, இந்தியா போஸ்ட், ஒரு நிறுவனம் ஆக வேண்டும். குறிப்பாக தனது பங்கினை விற்கவேண்டும்.
அதற்கு அவர்கள் கூறும் காரணம், வாடிக்கையாளர் விபரம் (KYC) அல்லது எதிர்ப்பு பணமோசடி நெறிகள் (Anti-Money laundering norms) அவர்கள் மீறியதாக தெரிந்தால் - எப்படி ஒழுங்குபடுத்தி இந்திய அரசு சார் நிறுவனத்திற்கு எதிராக தண்டனை விதிக்க முடியும் ? என்பது தான்.
எங்கே போகிறோம் நாம் ?
இலக்கை அடையவா ? இல்லை........ இலக்கு இன்றியா ?
இது வளர்ச்சியா ? இல்லை...... வீழ்ச்சியா ?
தொழிலாளர்களே ! உஷார் ! உஷார் ! உஷார் !!!.
0 comments:
Post a Comment