வணக்கம் கடந்த 24.07.2013 அன்று புது டெல்லியில் நடைபெற்ற
அனைத்து FNPO தொழிற்சங்க
அகில இந்திய செயலாளர்களின் கூட்டத்தில் GDS கோரிக்கைகளையும் அது சம்பந்தமாக
கடந்த முறை Minister Of State மற்றும் துறை
செயலாளர்கள் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்ற
தவறியதையும் கண்டித்து தேசிய சங்கம் மூன்று கட்ட போராட்டம் அறிவித்துள்ளது.
முதற்கட்ட
போராட்டம்
மாநில தலைநகரங்களில்
CPMG அலுவலகம் முன்பு 23.08.2013 அன்று ஆர்ப்பாட்டமும்
அதனை தொடர்ந்து அன்று மாலை ராஜ் பவன் சென்று கவர்னரிடம் பிரதமருக்கான கோரிக்கை மனு
சமர்பிக்க படஉள்ளது
இரண்டாவது
கட்ட போராட்டம்
09.09.2013 முதல்
13.09.2013 வரையிலான காலங்களில் அந்தந்த பகுதி நாடாளுமன்ற உறுப்பினர்களிடம் பிரதமருக்கான கோரிக்கை மனு சமர்பித்து பிரதம
அமைச்சருக்கு அனுப்ப வேண்டுதல்
மூன்றாவது
கட்ட போராட்டம்
புது டில்லியில் DG அலுவலகம், மாநில தலைநகரங்களில் CPMG அலுவலகம் முன்பும்
17.09.2013 முதல் 20.09.2013
வரையிலான நான்கு நாள்கள் “தொடர் பட்டினி அறப்போர்“
நடைபெறும் .
நமது
தேசிய சங்க மகாசம்மேளனத்தின் அறைகூவலை, வேண்டுகோளை ஏற்று
நாமும் நமது மதிப்பிற்குரிய திருநெல்வேலி பாராளுமன்ற
உறுப்பினர்
மாண்புமிகு திரு இராமசுப்பு MP., அவர்களிடம் பிரதமருக்கான
கோரிக்கை மனு சமர்பிக்க இருக்கிறோம் ( நாள்
மற்றும் நேரம் பின்னர் அறிவிக்கபடும் )
கோரிக்கைகளை
வென்றெடுக்க தயாராவீர்
போராட்ட வாழ்த்துக்களுடன்
தேசிய சங்க செயலாளர்கள்
குறிப்பு : PFRDA மசோதா பாராளுமன்றத்தில் விவாதத்திற்கு
வரும் தினத்தன்று நமது FNPO மகாசம்மேளனத்தின் அறைகூவலுக்கு இனங்க அனைவரும் கருப்பு பேட்ச் அணித்து வேலை செய்ய வேண்டுகிறோம்.
மசோதா பாராளுமன்றத்தில் விவாதத்திற்கு வரும்
தினம் நமது வலைய தளத்தில்
பிரசுரிக்க படும்.
0 comments:
Post a Comment