Saturday 24 August 2013

தந்திக்கு மாற்றாகுமா? போதிய விளம்பரம் இல்லாததால் முடங்கி வரும் இ-போஸ்ட்

விழிக்குமா அஞ்சல்துறை : தினகரன் நாளிதளின் செய்தி இதோ. 

            தபால் துறையில் தகவல் பரிமாற்றத்துக்கு உதவும் இ-போஸ்ட் சேவைக்கு போதிய விளம்பரம் இல்லாததால் முடங்கும் அபாயத்தில் உள்ளது.தபால் துறையில் இ-போஸ்ட் திட்டம் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு அறிமுகப்படுத்தப்பட்டது. கம்ப்யூட்டர் வசதி உள்ள அனைத்து தபால் அலுவலங்களிலும் இந்த திட்டம் பயன்பாட்டில் உள்ளது.இதன்படி ஒரு இடத்தில் இருந்து அனுப்பப்படும் தகவல்கள் உடனடியாக டெலிவரி பகுதியின் தபால் அலுவலகத்துக்கு இமெயில் மூலம் அனுப்பப்படும். அங்கிருந்து பிரின்ட்-அவுட் எடுக்கப்பட்டு சம்பந்தப்பட்டவர்களுக்கு உடனடியாக விநியோகம் செய்யப்படும்.தந்தி சேவை பயன் பாட்டில் இருந்த போது வார்த்தைக்கு 50 பைசா வசூல் செய்யப்பட்டது. ஆனால் இந்த முறையில் ஏ4 சைஸ் பேப்பருக்கு 10 மட்டுமே வசூல் செய்யப்படுகிறது. மேலும் இதில் வாழ்த்து படங்கள், லீவு லெட்டர், துக்க செய்தி போன்றவற்றையும் அனுப்பலாம்.
மொத்தமாக அனுப்பினால் 6 மட்டுமே வசூல் செய்யப்படும். கடந்த ஜூலை மாதத்தோடு தந்தி சேவை நிறுத்தப்பட்ட பிறகு இ-போஸ்ட் சேவைக்கு மக்களிடையே வரவேற்பு இருக்கும் என தபால் துறையினர் எதிபார்த்தனர். ஆனால் இந்த சர்வீசுக்கு போதிய விளம்பரம் இல்லாததால் வரவேற்பின்றி முடங்கி கிடக்கிறது.இதுகுறித்து தபால் துறை அலுவலர்கள் கூறுகையில், இ-போஸ்ட் சேவை அனைத்து தபால் அலுவலங்களிலும் உள்ளன. தந்தியை விட கட்டணம் குறைவு. காலை 9 மணி முதல் மாலை 6 மணி வரை அலுவலக நேரங்களில் வரும் தகவல்கள் உடனடியாக டெலிவரி செய்யப்படும். தந்தி சேவைக்கு மாற்றாக இருந்தும் இந்த சேவை குறித்து மக்களிடம் விழிப்புணர்வு இல்லாததால் சேவை எதிர்பார்த்த அளவு இல்லை என்றனர்.

0 comments:

Post a Comment

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More

 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | Grants For Single Moms