1. கடந்த 23.07.2013 அன்று நமது கோட்ட கண்காணிப்பாளர் அவர்களால் முறைப்படி ஒப்புதல் அளிக்கப்பட்டும் இன்றுவரை வெளியிடபடாமல் இருக்கும் LR List 2013 - உடனடியாக வெளியிட கேட்டதற்கு, அவற்றில் 2005 முதலான ஆட்குறைப்பு காரணமாக பணியிடம் கண்டறியப்பட வேண்டியதை நிர்வாகதரப்பு எடுத்துரைத்தது. அதனை உடனடியாக கண்டறிந்து வெளியிட நாம் வலியுறித்தினோம் அவர்களும் இசைவு தெரிவித்துள்ளார்கள்.
2. திருநெல்வேலி, பாளையங்கோட்டை "சிற்றுண்டி சாலை " நீண்ட நாட்களாக மூடிகிடப்பதையும் அதனால் பணியாளர்களுக்கு ஏற்படும் அசௌகரியங்களையும் எடுத்துரைதோம் அதற்கு விரைவில் நல்ல பதிலை அளிக்க ஒப்புதல் அளித்தார்கள்.
3. கடந்த மாதம் Maharaja Nagar, Perumalpuram அலுவலகங்களுக்கு அவற்றின் வேலைப்பளுவை கணக்கில் கொண்டு கூடுதலாக ஒரு Postal Assistant Attach செய்ய நாம் கேட்டு கொண்டதற்கு இணக்க Maharaja Nagar அலுவலகத்திற்கு Deputation முறையில் ஒரு Postal Assistant Attach செய்ததற்கு நாம் நன்றி தெரிவித்து கொண்டோம். மேலும் Perumalpuram அலுவலகத்திற்கு ஒரு Postal Assistant Attach செய்ய வேண்டினோம் அதையும் ஏற்று விரைவில் வழங்க ஒப்புதல் அளித்தார்கள்.
மேலும் பல்வேறு பிரச்சனைகளை எடுத்துரைத்த போதும் அணைத்திருக்கும் நல்ல பதிலையும் அதற்கு ஆக்கபூர்வமான முயற்சிகளையும் மேற்கொள்ளும் நிர்வாக தரப்பிற்கு எங்கள் நெஞ்சார்ந்த நன்றிகளை தெரிவித்து கொள்கிறோம்.
கடந்த சில மாதங்களாக மாதந்தோறும் மாதந்திர பேட்டியையும் தொடர்ந்து நடத்தி ஊழியரின் பிரச்சனைகளை தீர்க்க முழு முயற்சி எடுக்கும் நமது கோட்ட கண்காணிப்பாளருக்கும் எங்கள் நெஞ்சார்ந்த நன்றிகளை தெரிவித்து கொள்கிறோம்.
0 comments:
Post a Comment