புனித ஹஜ் பயணத்தை மேற்கொண்டிருக்கும் "கலங்கரை விளக்கு" பத்திரிக்கையின் ஆசிரியர் உயர்திரு மாலிக் அவர்களும் அவரது துணைவியார் திருமதி அலிமா அவர்களும் மெக்கா சென்றடைந்தனர். அங்கு நேற்று 29.09.2013 நடைபெற்ற சிறப்பு தொழுகையில் பங்கு பெற்று தனது நண்பர்களுக்காகவும், வாசகர்களுக்காகவும் நீண்ட ஆயுளையும் நலத்தையும் அவர்தம் குடும்பத்தின் பிரச்சனைகள் தீரவும் வேண்டி தான் துஅ (Prayer) செய்ததாக மெக்காவிலிருந்து நமது செயலர் அவர்களை தொலைபேசியில் தொடர்பு கொண்டு தெரிவித்தார்கள்.
மேலும் ஓய்வு பெற்ற ASPOs திரு பேச்சிமுத்து அவர்கள் நீண்ட ஆயுளையும் அவர்தம் உடல் நலத்திற்க்காகவும் தான் துஅ (Prayer) செய்ததாக தெரிவித்தார்கள். அன்னாரது பயணம் சிறக்க நாமும் இறையருள் நாடுவோம்மாக.
0 comments:
Post a Comment