Wednesday, 1 January 2014

மாதாந்திர பேட்டி புறக்கணிப்பு.

அன்பு தோழர்களே. 
              கோட்ட கண்காணிப்பாளர் உடன் இன்று (31.12.2013) நடைபெறுவதாக இருந்த மாதாந்திர பேட்டியை  தவிர்க்க முடியாத காரணத்தால் நாம் புறக்கணித்துள்ளோம்.
குறிப்பாக நமது தொழிற்சங்க உரிமைகளை தொடர்ந்து மறுக்கும் நடவடிக்கையாக தபால்காரர் தோழர்கள் கூட தனது பணியை செய்துமுடித்து விட்டு 0400/0500 PM  மணிக்கு பிறகு மாதாந்திர பேட்டியில் கலந்து கொள்ள வேண்டிய நிர்பந்தம். கடந்த ஒருவருட காலமாக எந்த பிரச்சனையிலும் தீர்வு காணபடாமல் இழுத்தடிக்கும் மனோபாவம், இதைவும் மீறி நாம் கோட்ட நிர்வாகத்துடன் ஊழியர் நலன் சார்ந்து கடைபிடித்துவரும் இணக்கமான சூழலை சுமூக போக்கை சீர்குலைக்கும் மனோநிலை வருத்ததோடு வேறுவழியின்றி  இன்றைய புறக்கணிப்பு.
             ஏற்கனவே நாம் இழந்தது அதிகம்  இனி இழப்பதற்கு ஏது ? என்ற நிலையிலும் சிறு சிறு சலுகைகளை கூட மறுக்கும் அவலம். இதுவே நமது புறக்கணிப்புக்கு காரணம்.

0 comments:

Post a Comment

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More

 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | Grants For Single Moms