Saturday, 15 February 2014

அழைக்கிறது காஞ்சி....

தோழர்களே.
                     கட்டிட கலைக்கு கட்டியம் கூறும் காஞ்சி மாநகரம் புதிய எழுச்சி கண்டிட உங்களை அழைக்கிறது காஞ்சி நோக்கி..........
  

காஞ்சி நகரம்
தென்னிந்தியாவின் மிகவும் பழமையான நகரங்களில் ஒன்றாகும். இது பாலாற்றின் கரையில் அமைந்துள்ள நகரம்,
இந்த கோயில் நகர் காஞ்சிபுரம் மாவட்டத்தின் தலைநகருமாகும். 
இங்குதான் பிரசித்திபெற்ற காமாட்சியம்மன் கோயில், ஏகாம்பரநாதர் கோயில், வரதராஜபெருமாள் கோயில், கைலாசநாதர் கோயில் ஆகியவை அமைந்துள்ளன.
தமிழகத்தின் முன்னாள் முதலமைச்சர் பேரறிஞர் அண்ணா பிறந்த இடமெனும் சிறப்பையும் பெற்றது இந்நகரமாகும்.
காஞ்சிபுரம் நெசவுத்தொழிலுக்கும் மிகவும் புகழ் பெற்றது. இங்கு தயாரிக்கப்படும் காஞ்சிப் பட்டுப் புடவைகள் மிகவும் பிரபலமானவை.

நாயன்மார்களாலும், ஆழ்வார்களாலும் பாடற்பெற்ற தலங்களில் காஞ்சிபுரமும் முக்கியமானதாகும். அப்பர், சுந்தரர் மற்றும் சம்பந்தரால் ஏகாம்பரநாதர் மீது திருமுறைகளை புனைந்துள்ளார்கள்.  


ஆழ்வார்களான திருமங்கை ஆழ்வார், பூதத்தாழ்வார், பேயாழ்வார் நம்மாழ்வார் மற்றும் திருமழிசை ஆழ்வார் ஆகியோரால் மங்களாசாசனம் செய்யப்பட்ட பதின்மூன்று திவ்யதேசங்களான வரதராஜப் பெருமாள் திருக்கோயில், திருவெஃகா (சொன்னவண்ணம் செய்த பெருமாள் திருக்கோயில்) , அஷ்டபுஜகரம், திருஊரகம்-திருநீரகம்-திருகாரகம் அடங்கிய உலகளந்த பெருமாள் திருக்கோயில், திருக்கார்வண்ணப் பெருமாள் திருக்கோயில், வைகுந்தநாத பெருமாள் திருக்கோயில், பச்சைவண்ண-பவளவண்ண பெருமாள் திருக்கோயில், பாண்டவதூதர் பெருமாள் திருக்கோயில், நிலாத்திங்கள் துண்ட பெருமாள் திருக்கோயில், திருக்கள்வனூர், திருவேளுக்கை மற்றும் திருத்தண்கா ஆகியன விஷ்ணுக்காஞ்சியிலேயே அமைந்துள்ளன. பொய்கையாழ்வார், எம்பெருமானார் இராமனுஜர், திருக்கச்சி நம்பிகள், வேதாந்ததேசிகர், பிரதிவாதிபயங்கரம் அண்ணங்காச்சாரியர் ஆகிய வைணவப் பெரியோர்கள் இத்தலத்தோடு நெருங்கிய தொடர்புடையவர்கள்.

இன்னும் ஏராளமான சிறப்புகளுக்குரிய காஞ்சி மாநகரம்
2014 ம் ஆண்டு பெப்ரவரி  25, 26 மற்றும் 27 நாட்களில் உங்களை  
தமிழ் மாநில மாநாட்டிற்கு அழைக்கிறது        வாரீர்     வாரீர்                                

1 comments:

Anonymous said...

Hearty wishes for your informative website.

Post a Comment

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More

 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | Grants For Single Moms