Monday 20 January 2014

தமிழ் மாநில மாநாடு

அன்பார்ந்த நெல்லை கோட்ட தோழர்களே 
                வணக்கம் வருகிற பிப்ரவரி திங்கள் 25,26 மற்றும் 27 ஆகிய நாள்களில் காஞ்சிபுரம் மாநகரில் நமது தேசிய சங்க மூன்றாம் பிரிவின் தமிழ் மாநில மாநாடு நடைபெற இருக்கிறது. மாநாட்டிற்கு செல்ல புகைவண்டிக்கு முன்பதிவு செய்ய வேண்டிருப்பதால் அதில் கலந்து கொள்ள விரும்பும் தோழர்கள் செயலாளர் திரு இராம சுப்பிரமணியன் அவர்களை (94439 00200, 96 26 26 4774) உடனடியாக தொடர்பு கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

காஞ்சி மாநகரம் தென்னிந்தியாவின் மிகவும் பழமையான நகரங்களில் ஒன்றாகும். இங்குதான் பிரசித்திபெற்ற காமாட்சியம்மன் கோயில், ஏகாம்பரநாதர் கோயில், வரதராஜபெருமாள் கோயில், கைலாசநாதர் கோயில் ஆகியவை அமைந்துள்ளன.
தமிழகத்தின் முன்னாள் முதலமைச்சர் பேரறிஞர் அண்ணா பிறந்த இடமெனும் சிறப்பையும் பெற்றது இந்நகரமாகும்.
காஞ்சிபுரம் நெசவுத்தொழிலுக்கும் மிகவும் புகழ் பெற்றது. இங்கு தயாரிக்கப்படும் காஞ்சிப் பட்டுப் புடவைகள் மிகவும் பிரபலமானவை.

நாயன்மார்களாலும், ஆழ்வார்களாலும் பாடற்பெற்ற தலங்களில் காஞ்சிபுரமும் முக்கியமானதாகும். அப்பர், சுந்தரர் மற்றும் சம்பந்தரால் ஏகாம்பரநாதர் மீது திருமுறைகளை புனைந்துள்ளார்கள்.  

ஆழ்வார்களான திருமங்கையாழ்வார், பூதத்தாழ்வார், பேயாழ்வார் நம்மாழ்வார் மற்றும் திருமழிசையாழ்வார் ஆகியோரால் மங்களாசாசனம் செய்யப்பட்ட பதின்மூன்று திவ்யதேசங்களான (திவய தேசம் என்பது 108 வைணவ திருப்பதிகள் ஆகும். 108 இல் 13 கோயில்கள் இங்கு உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது ) வரதராஜப் பெருமாள் திருக்கோயில், திருவெஃகா (சொன்னவண்ணம் செய்த பெருமாள் திருக்கோயில்) , அஷ்டபுஜகரம், திருஊரகம்-திருநீரகம்-திருகாரகம் அடங்கிய உலகளந்த பெருமாள் திருக்கோயில், திருக்கார்வண்ணப் பெருமாள் திருக்கோயில், வைகுந்தநாத பெருமாள் திருக்கோயில், பச்சைவண்ண-பவளவண்ண பெருமாள் திருக்கோயில், பாண்டவதூதர் பெருமாள் திருக்கோயில், நிலாத்திங்கள் துண்ட பெருமாள் திருக்கோயில், திருக்கள்வனூர், திருவேளுக்கை மற்றும் திருத்தண்கா ஆகியன விஷ்ணுக்காஞ்சியிலேயே அமைந்துள்ளன. பொய்கையாழ்வார், எம்பெருமானார் இராமனுஜர், திருக்கச்சி நம்பிகள், வேதாந்ததேசிகர், பிரதிவாதிபயங்கரம் அண்ணங்காச்சாரியர் ஆகிய வைணவப் பெரியோர்கள் இத்தலத்தோடு நெருங்கிய தொடர்புடையவர்கள்.

இன்னும் ஏராளமான சிறப்புகளுக்குரிய காஞ்சி மாநகரம்.
அது மட்டுமல்ல காஞ்சிக்கு மிக அருகில்
வேடந்தாங்கள் பறவைகள் சரணாலயம்.
குடவோலை முறைக்கு பெயர்பெற்ற உத்திரமேரூர்.
மகாபலிபுரம், திருகழுகுன்றம், திருத்தணி முருகன் ஆலயம்
சிவபெருமானின் திருத்தாண்டவத்தில் தொடர்புடைய இரத்தினசபை என அழைக்கப்படும் திருவாலங்காடு.
இராமானுஜர் அவதார் ஸ்தலமான ஸ்ரீபெரும்புதூர் 
(மறைந்த முன்னாள் பிரதமர் திரு ராஜீவ்காந்தி அவர்கள் நினைவிடம் )


0 comments:

Post a Comment

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More

 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | Grants For Single Moms