சென்னை: புதிய ஓய்வூதிய திட்டத்தை கைவிட வேண்டும என்பது உட்பட 15 அம்ச
கோரிக்கைகளை வலியுறுத்தி மத்திய அரசு நிறுவனங்களின் தொழிற்சங்கங்கள் இன்று
முதல் முதல் இரண்டு நாட்கள் அகில இந்திய அளவில் வேலை நிறுத்தம் தொடங்கியுள்ளது. அதனால் கடிதங்கள் பட்டுவாடா உட்பட மத்திய அரசு துறைகளின் பணிகள்
பாதிக்கப்படும் நிலை ஏற்பட்டுள்ளது.
புதிய ஓய்வூதிய திட்டத்தை கைவிட வேண்டும்,
7வது ஊதியக்குழுவில் தொழிற்சங்க
நிர்வாகி ஒருவரை உறுப்பினராக நியமிக்க வேண்டும்
வேலைப்பளுவின் அடிப்படையில் சரியான கணக்கீட்டின்படி, தகுதியுள்ள தபால்
நிலையங்களுக்கு தேவையான தபால்காரர்களை நியமனம் செய்யவேண்டும். பதவி உயர்வை
1-1-2006 முதல் அமல்படுத்தவேண்டும் என்பன உட்பட பல்வேறு
கோரிக்கைகளை வலியுறுத்தி அணுசக்தித்துறை, கணக்கு தணிக்கைத்துறை,
வருமானவரித்துறை, சுங்க இலாகா உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்ட மத்திய அரசு
நிறுவனங்களின் தொழிற்சங்கங்கள் இந்த வேலை நிறுத்தத்தில் பங்கேற்கின்றன.
நாடு முழுவதும் நடைபெறும் இந்த வேலை நிறுத்தத்தில் தமிழகத்தில் உள்ள 1.5
லட்சம் மத்திய அரசு ஊழியர்கள் உட்பட நாடு முழுவதிலும் இருந்து சுமார் 12
லட்சம் பேர் இந்த வேலை நிறுத்தத்தில் பங்கேற்கின்றனர்.
அஞ்சல் துறையில் முக்கிய சங்கங்களான என்எப்பிஈ, எப்என்பிஓ (FNPO), அஞ்சல் ஊழியர் முன்னேற்ற சங்கம் உட்பட அனைத்துச்
சங்கங்களும் பங்கேற்கின்றன. அதனால் கடிதங்கள் சேகரிப்பு, பட்டுவாடா, விரைவு
அஞ்சல், பார்சல், சேமிப்பு உள்ளிட்ட சேவைகளும் பாதிக்கும் அபாயம் உள்ளது.
2 நாள் வேலைநிறுத்தத்தில் ஒட்டுமொத்த தபால் ஊழியர்கள் கலந்துகொள்வார்கள் என
அறிவிக்கப்பட்டு இருப்பதால், நாடு முழுவதும் தபால் சேவை குறிப்பாக
பட்டுவாடா முழுமையாக பாதிக்கும் என்று கூறப்படுகிறது. அது மட்டுமின்றி,
தபால் நிலையங்களில் கார்டு, கவர், ஸ்டாம்ப் விற்பனையும் நடைபெறாது என்று
போராட்டத்தில் ஈடுபடவுள்ள சங்கங்களின் நிர்வாகிகள் தெரிவித்தனர்.
நன்றி : http://tamil.oneindia.in
0 comments:
Post a Comment