"போற்றுவோர் போற்றலும் தூற்றுவோர் தூற்றலும் கண்ணனுக்கே"
என்கிறது கீதை. நமது வேதனை கண்ணன் மேல் இல்லை.
எய்தவரை விட்டு அம்பை நொந்து என்னபயன் ?
நேற்றைய பதிவில் நாம் திருநெல்வேலி டவுன் அஞ்சலகத்தில் இரவு காவலராக பணிபுரியும் நமது தோழர் திரு தங்கபாண்டியனுக்கு ஏற்பட்ட பிரச்சனையை கூறியிருந்தோம்.
யார் மனதையும் புண்படுத்துவது நமது நோக்கம் அல்ல.
ஆனாலும் திருநெல்வேலி டவுன் அஞ்சல் அதிகாரி தமது பொறுப்பை தட்டி கழிக்க முற்பட்டது தான் வேதனை.
தொடர்ந்து இதுபோல நமக்கு இழைக்கப்படும் அநீதிகளை கண்டு மனவேதனை அடைகிறோம். நமது கோட்டத்தில் அடிப்படை உரிமையை கூட போராடி பெறவேண்டிய நிலை வருத்ததுக்குரியது. எல்லா பிரச்சனைகளையும் அந்தந்த மட்டங்களில் தீர்க்கவே நமது விருப்பம்.
கோட்ட கண்காணிப்பாளரிடம் கொண்டு சென்று பெறவேண்டும் என்பது நமது நிலைப்பாடும் அல்ல.
இந்த பிரச்சனையை நமது கோட்ட கண்காணிப்பாளர் அவர்களிடம் கொண்டு சென்ற உடன், உடனடியாக தலையிட்டு C-Off வழங்கிட உத்தரவிட்டதை நன்றியுடன் நினைவு கூர்கிறோம்.
ஊழியர் தம் பிரச்சனைகளுக்கு தீர்வு வழங்கிட உடனடியாக முயற்சி எடுக்கும் நமது கோட்ட கண்காணிப்பாளர் அவர்களுக்கு நெஞ்சார்ந்த நன்றிகள்.

0 comments:
Post a Comment