திருநெல்வேலி டவுன் அஞ்சலகத்தில் இரவு காவலராக பணிபுரியும் நமது தோழர் திரு தங்கபாண்டியனுக்கு திருநெல்வேலி டவுன் அஞ்சல் அதிகாரியால் தொடர்ந்து அநீதி இழைக்கபடுகிறது. கடந்த டிசம்பர் மாதம் முதல் இன்றுவரை தொடர்ச்சியாக சுமார் 45 நாட்கள் பணிபுரிகிறார். ஆனால் ஞாயிற்று கிழமைகளில் வாரந்திர விடுமுறையை மறுப்பதோடு C Off கூட அளிக்க மறுக்கிறார்.
உழைக்கும் வர்கத்திற்க்காக போராடுவதாக காட்டிகொள்ளும் தொழிற்சங்க வா(வியா)திகள் தொடர்ந்து தொழிற்சங்க பாகுபாடு காட்டுவது ஏன்?
கடந்த வருடம் உறுப்பினர் சேர்க்கையின் போது அதே அலுவலகத்தில் FNPO தோழர்கள் இருவரை இதுபோல் மிரட்டி கையெழுத்து வாங்கியதைப்போல இவரிடமும் கையெழுத்து பெற மிரட்டும் தொனியில் செயல்பட தூண்டுவது யார் ? இது யாருடைய ஆலோசனை ?
அலுவகங்களில் தொழிற்சங்க பாகுபாடு ஏன் ?
அதேசமயம் உங்கள் அலுவலகத்தில் மாற்று சங்க தோழர்களுக்கு அளிக்கும் சலுகைகளை நாங்கள் பட்டியல் இடட்டுமா? மற்றவர்கள் பணியை முடிக்காமல் மதியம் 3 மணிக்கு செல்ல அனுமதிக்கும் நீங்கள் ஒரு ஊழியரின் அடிப்படை உரிமையை மறுப்பது ஏன்?
0 comments:
Post a Comment