புதுடெல்லி:
ஷாப்பிங் போன்றவற்றுக்கு பயன்படுத்தவும், ரொக்கம் எடுக்கவும் இனி வெளி
நாட்டு நிறுவனங்களின் ‘பெமென்ட்’ கார்டுகளை எதிர்பார்க்க வேண்டாம்.
வந்துவிட்டது இந்தியாவின் சொந்த பேமென்ட் கார்டு ‘ரூ பே’ஜனாதிபதி பிரணாப்
முகர்ஜி நேற்று இதை தொடங்கி வைத்தார். இந்த ‘ரூ பே’ கார்டை பயன்படுத்தி
ஷாப்பிங் செய்யலாம்; ரொக்கமும் பெறலாம். நாடு முழுவதும் 10 ஆயிரம் வியாபார
நிறுவனங்கள் இந்த கார்டை ஏற்கின்றன. வங்கி ஏடிஎம்களிலும் ரொக்கம் எடுக்க
இந்த கார்டை பயன்படுத்தலாம். இது ஒரு ப்ரீபெய்டு கார்டு. ரிசர்வ் வங்கியால்
ஊக்குவிக்கப்பட்ட லாப நோக் கம் இல்லாத நிறுவனம் ‘நேஷனல் பேமென் ட்ஸ்
கார்ப்பரேஷன் ஆப் இண்டியா’ இந்த திட்டத்தை கொண்டு வந்துள்ளது. பல்வேறு
வகையான ‘ரூ பே’ கார்டு இனி வலம் வரும். அதாவது, விவசாயிகளுக்கு பலன் தரும்
வகையில் கிசான் கார்டு வெளியிடப்படுகிறது. அதுபோல, விரைவில் ரயில்
முன்பதிவுக்கு பயன்படும் வகையில் ரயில்வேயின் ஐஆர்டிசி நிறுவனம் விரைவில்
வெளியிட உள்ளது. வங்கிகள் தரும் ஏடிஎம் கார்டுகளை தவிர, சில வெளிநாட்டு
நிறுவனங்கள் மூலம் தான் பேமென்ட் கார்டுகள் வெளியாகி உள்ளன.
இப்போது தான் முதன் முதலில் இந்தியாவின் சொந்தமான ஒரு பேமென்ட் கார்டு
வெளியாகிறது. விசா, மாஸ்டர்கார்டு இரண்டுமே அமெரிக்காவை சேர்ந்தது. இந்த நிலையில் ‘ரூ பே’ இந்தியாவில் முதன் முதலாக வெளியாகி உள்ளது. இதனால் வெளிநாட்டு நிறுவனங்களை இனி எதிர்பார்க்க தேவையில்லை.
0 comments:
Post a Comment