சம்மேளன பொதுச் செயலாளருடன் நமது கோட்ட தலைவர் திரு ஆனந்தராஜ் அவர்கள் |
நெஞ்சம் நிறை நல்வாழ்த்துமடல்
அன்பின் பிறப்பிடமே ஆற்றலின் பூங்காற்றே
இசக்கிமுத்து ஈன்றெடுத்த ஏற்றமிகு பொற்குடமே
உண்மை எனும் மண்ணகத்தே ஊன்றி வைத்த மரிகொழுந்தே
வள்ளுவன் நெறிகண்டு வாழ்ந்து நின்ற இலக்கணமே
சொன்ன சொல் தவறாத தற்கால அரிச்சந்திரனே
என்றும் இளமையோடு ஏந்திழையின் துணையோடும்
செம்மையுற வாழ்ந்திடவே சித்தனை இறைஞ்சுகின்றோம.
அஞ்சல் துறையில் தேசிய சங்கத்தினை
தலைமை பொறுப்பேற்று தலை நிமிர நிற்க வைத்து
நெஞ்சம் போற்றும் நெறியுடன் சேவையாற்றி
ஆன்றோரும் ஏத்தும் அறிவார்ந்த சேவைதனை
எல்லோரும் பாராட்ட வல்லாரும் வாழ்த்திடவே
சேவை செய்திட்ட செம்மலே நாங்கள் எல்லாம்
உன் வழியில் செயல்படவே உற்ற துணையாய் நீ இருப்பாய்
என்ற எண்ணத்தில் உன் பொற்பாதம் பணிந்து நின்றோம்.
எஞ்சிய வாழ்க்கைதனை இன்புற்று வாழ்த்திடவே
ஆனந்தராஜ் சிவகாமி தம்பதியர் குடும்பத்துடன்
எல்லா வளமும் இன்பமும் பெற்றுய்ய
வல்லோன் திருவடியை வாழ்த்தி வணங்கி நின்று
அஞ்சல் துறையின் அனைத்து ஊழியரும் தேசிய உள்ளங்களும்
நெஞ்சம் நிறைவுடனே நேசத்துடன் வாழ்த்துகின்றோம்
வாழ்க வளமுடனே என்று ..........................
தேசிய சங்கம்
0 comments:
Post a Comment