கால்டுவெல் (1814-1891) என்று அழைக்கப்படும் ராபர்ட் கால்டுவெல்
திராவிட மொழியியலின் தந்தை எனப் போற்றப்படுபவர். திராவிட மொழிகளின் தனித்துவத்தை
நிலைநிறுத்தியதில் பெரும்பங்கு இவருடைது.
ராபர்ட் கால்டுவெல் இருநூற்றாண்டு நிறைவு தினம் இன்று (07.05.2014).
அன்னாரை இந்த நாளில் நாமும் நினைவு கூர்வோமாக.............
ராபர்ட் கால்டுவெல் 1814 ஆம் ஆண்டு மே மாதம் அயர்லாந்தில் பிறந்தார். இளமையிலேயே சமயப் பற்று மிக்கவராகக் காணப்பட்டார்.
தொடக்கத்தில் தானாகவே கல்வி பயின்ற இவர்,
பின்னர் கிளாசுக்கோ பல்கலைக்கழகத்தில்
இணைந்து கல்வி பயின்றார். அங்கே அவருக்கு ஒப்பியல் மொழி ஆய்வில் ஆர்வம் ஏற்பட்டது.
24 வயதாக இருந்தபோது இலண்டன் மிசனரி சொசைட்டி என்னும் கிறித்தவ மதக் குழுவினருடன் சேர்ந்து,
மதத்தைப் பரப்புவதற்கென்று 1838 சனவரி 8
ஆம் தேதி சென்னைக்கு வந்து தமது மதப்பணியைத் தொடங்கினார். பின்னர் இவர் நற்செய்தி
பரப்புவதற்கான சபை (Propagation
of the Gospel Mission)
எனும் குழுவினருடன் இணைந்து கொண்டார். தனது பணிக்குத் தமிழ் மொழி அறிவு முக்கியம்
என்பதை உணர்ந்த கால்டுவெல், தமிழை முறைப்படி பயிலத் தொடங்கினார்.
மொழியியல்
ஆய்வுகள்
1841ல் குரு பட்டம் பெற்றுத் திருநெல்வேலி சென்று அங்கே இடையன்குடி என்னும் ஊரில் தங்கி 50 ஆண்டுகள்
தமது மதப்பணியுடன் சேர்த்து தமிழ்ப்பணியும் செய்தார். இவர் ஆங்கில மொழியில் ஆக்கிய திராவிட மொழிகளின் ஒப்பிலக்கணம் என்னும் நூல் உலகெங்கும் இவருக்கு மிகுந்த புகழ்
ஈட்டித்தந்தது. தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் ஆகிய மொழிகள் எல்லாம் ஓரினத்தைச் சேர்ந்தவை என்பதை இந் நூல்
மூலம் உலகம் ஒப்ப விளக்கிச் சொன்னார். திராவிட மொழிக் குடும்பம் ஒன்று இருப்பது பற்றிக் கண்டு பிடித்தது இவரல்லர் எனினும், அதற்கான சான்றுகளை
ஒருங்கிணைத்து உறுதிப்படுத்தியவர் இவரே."
வரலாற்று
ஆய்வுகள்
திருநெல்வேலியில் பணியாற்றிய காலத்தில்
அதன் வரலாறு பற்றி ஆய்வுகள் செய்துள்ளார். தகவல் சேகரிப்புக்காகச் சங்க
இலக்கியங்களின் ஏட்டுப் பிரதிகளைப் படித்தது மட்டுமன்றி, அகழ்வாய்வுகளில்
ஈடுபட்டுப் பல பண்டைய கட்டிடங்களின் அடிப்படைகளையும், ஈமத் தாழிகள், நாணயங்கள் முதலானவற்றையும் வெளிக் கொணர்ந்துள்ளார். மீன் சின்னம்
பொறிக்கப்பட்ட பாண்டிய நாட்டுக் காசுகள் பல இவ்வாய்வுகளில் கிடைத்துள்ளன. இந்த
ஆய்வுகளின் பெறுபேறாக "திருநெல்வேலி மாவட்டத்தின் அரசியல் மற்றும் பொது
வரலாறு (A Political and General History of the
District of Tinnevely) என்னும் நூலை
எழுதினார். இது 1881 ஆம் ஆண்டில் மதராசு அரசினால் வெளியிடப்பட்டது. இது பற்றிக்
குறிப்பிட்ட இராபர்ட் எரிக்கு ஃபிரிக்கென்பர்க்கு (Robert Eric
Frykenberg) என்பார்,
தொல்லியல், கல்வெட்டியல், இலக்கியம்
ஆகிய மூலங்களிலிருந்தான தகவல்களைக் கொண்டு எழுதப்பட்ட இந்நூல் தனி நூல்களுள்
முழுமைத் தன்மையில் முதன்மையானது என்றார்.
0 comments:
Post a Comment