Monday, 2 June 2014

பணி நிறைவு பாராட்டு விழா

                  திருநெல்வேலி தேசிய  சங்க கோட்ட தலைவர் திரு.E.ஆனந்தராஜ் அவர்களின் பணி நிறைவு பாராட்டு விழா திருநெல்வேலி தெற்கு புறவழி சாலை விஜயா கார்டனில் வைத்து 31.05.2014 அன்று மாலை 6 மணிக்கு நடைபெற்றது. இந்நிகழ்ச்சி Sr Postmaster (Rtd) திரு. P. பேச்சி முத்து அவர்கள் தலைமையில்  தேசிய  சங்க முன்னால் மாநில உதவி செயலாளரும் 
கலங்கரை விளக்கு மாத இதழ் ஆசிரியருமான திரு.M.மாலிக்,  
முதுநிலை கண்காணிப்பாளர் (ஓய்வு)  திரு.M.S.G.சுப்பிரமணியன் ஆகியோர் முன்னிலை நடைபெற்றது.  

நமது கோட்ட செயலாளர் திரு.S.A.இராமசுப்பிரமணியன் அவர்கள் வரவேற்புரை நிகழ்த்தினார் அதனை தொடர்ந்து நிகழ்ச்சியை தொகுத்தும்  வழங்கினார். நமது கோட்ட சங்கத்தின் சார்பாக மூத்த தோழர் 
திரு.P. சுப்பிரமணியன் அவர்கள் பொன்னாடை அனுவிக்க  நமது செயலாளர் அவர்களால் வாழ்த்துமடல் வசித்து அளிக்கபட்டு கவ்ரவிக்கபட்டார்.

அதனை தொடர்ந்து NFPE P3 Secretary திரு.S.K.ஜேக்கப்ராஜ், 
P4 Secretary திரு.S.K.பாட்சா,                        PEPU திரு.P.மைகேல் ராஜ்
வழக்கறிஞர் திரு.P.T.சிதம்பரம்   பொதிகை Walker's Club செயலாளர் திரு.ராஜகிளி
SC/ST Welfare Association Secretary திரு விஜயராஜா 
ஓய்வு பெற்ற தபால்காரர் திரு நியமத்துல்லா 
Tirunelveli Town SubPostmaster திரு.N.கண்ணன் 
ஓய்வூதியர் சங்க செயலாளர் திரு.S.N.சுப்பையா 
Koodankulam Sub Postmaster திரு அந்தோணி பிச்சை 
Kallur GDSBPM திரு.முத்துசாமி 
SAS Agents Association திரு.பேச்சியப்பன் மற்றும் பலர் வாழ்த்துரை வழங்கினர்.  

தமிழ் மாநில தேசிய அஞ்சல் ஊழியர் சங்கம் சார்பாக தூத்துக்குடி கோட்ட செயலாளர் திரு.N.J.உதய குமாரன் அவர்கள் கலந்து கொண்டு வாழ்த்துரை வழங்கினார்.

திரு ஐயன்கன்னு அவர்கள் நன்றி நவில, திரு.E.ஆனந்தராஜ் மற்றும் அவர்தம்  குடும்பத்தினர் ஏற்பாடு செய்திருந்த இனிய சிற்றுன்டியோடு கூட்டம் இனிதே நிறைவுற்றது.

0 comments:

Post a Comment

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More

 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | Grants For Single Moms