Saturday, 12 July 2014

மாநில தேர்தல் சிறப்பு மாநாடு

தமிழ் மாநில பொறுப்பாளர்கள் அகில இந்திய பொறுப்பாளர்களுடன்
அன்பு தோழர்களே
        வணக்கம் நமது தமிழ் மாநில தேர்தல் சிறப்பு மாநாடு கோவில்பட்டி நகர் L.G.செல்வமஹாலில்  10.07.2014 அன்று வியாழன் காலையில்  சரியாக 1௦3௦ மணிக்கு கிருஷ்ணகிரி கோட்டசெயலாளர் இடைக்கால குழுவின் உறுப்பினர் திரு.K.மோகன்ராவ், அவர்கள்  தலைமையில் மிக கோலாகலமாக தொடங்கியது
         மாநாட்டின் முதல் நிகழ்ச்சியாக இறைவணக்கம் பாடப்பட்டது.
அதனை தொடர்ந்து இடைக்கால குழுவின் தலைவர் திரு.P.திருஞான சம்பந்தம் அவர்கள் வரவேற்புரை நிகழ்த்தினார் 
          மாநாட்டில் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து சார்பாளர்கள் பலர் கலந்து கொண்டனர். அதனை தொடர்ந்து  
அகில இந்திய பொதுச்செயலாளர் திரு.D.கிஷன் ராவ் அவர்கள்  தற்போதைய நிலையில் இலாகா சந்திக்கும் பிரச்சனைகள் 7 வது ஊதியகுழுவில் நமது கோரிக்கைகள் அதனை பற்றிய நிலை போன்றவற்றை விளக்கினார். அதனை தொடர்ந்து கர்நாடக மாநில செயலரும் நமது அகில இந்திய உதவி செயலருமான திரு B . ஷிவ்குமார் அவர்கள்.
முன்னாள் அகில இந்திய பொதுச்செயலாளர் திரு. P.S. பாபு  அவர்கள் முன்னாள் ACP Tamilnadu Circle திரு.N.R. கிருஷ்ணன் மற்றும் பல முன்னணி தலைவர்கள் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினர். இம்மாநாட்டில் தமிழ் மாநில நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கபட்டனர்.

      இடைக்கால குழுவின் தலைவர் மற்றும் உறுப்பினர்கள் கோவில்பட்டி கோட்ட நிர்வாகிகளுடன் இணைந்து மாநாடு ஏற்பாடுகளை சிறப்புற செய்திருந்தனர்.
From Left to Right, Shri.Thirugnana Sampantham, Shri.K.Mohan Rao, Shri.B.Shivkumar, Shri.P.S.Babu and Shri Kishan Rao

0 comments:

Post a Comment

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More

 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | Grants For Single Moms