Friday, 17 October 2014

மாதந்திர பேட்டி


                கோட்ட கண்காணிப்பாளருடனான மாதந்திர பேட்டி  திருநெல்வேலி கோட்டகண்காணிப்பாளர் திரு சொர்ணம் அவர்களுடன் 16.10.2014 அன்று  வியாழகிழமை பிற்பகல் 0200 மணிக்கு நடைபெற்றது. கோட்ட மட்டத்தில் தேங்கி கிடக்கும் பல்வேறு பிரச்சனைகள் விவாதிக்கபட்டன. கோட்ட கண்காணிப்பாளர் அவர்கள் பல்வேறு பிரச்சனைகள் தீர்த்து வைப்பதாக உறுதியளித்தார்.  
குறிப்பாக Gradation List (Group C,MTS Postman) இம்மாதத்திற்குள்ளாக வெளியிடுவதாக கூறினார். பல்வேறு அலுவலகங்களின் Computer, Printer பிரச்சனைகள் தீர்த்து வைப்பதாக கூறினார். கடந்த 15.08.2014 சுதந்திர தின விடுமுறைக்கான சம்பளம் Officiating Postmanகளுக்கு உடனடியாக அளிக்க உத்தரவிட்டார்நீண்ட நாட்களாக வழங்கபடாத Cashoverseer Allowance அம்பாசமுத்திரம் CO விற்கு வழங்க நடவடிக்கை எடுத்திட உறுதியளித்தார். பெண் GDS ஊழியர்களின் Maternity Leave சம்பளம் கால தாமதம் குறித்து விவாதிக்கபட்டது அதற்கு நடவடிக்கையை துரித படுத்த உத்தரவிட்டார்

       இந்த கூட்டத்தில் மூன்றாம் பிரிவின் சார்பாக கோட்ட செயலாளர் திரு.ச.ஆ. இராம சுப்பிரமணியன்,  தலைவர் திரு.P.சுப்பிரமணியன்,
அம்பை கிளை செயலாளர் திரு.C.முத்துசாமி ஆகியோரும்
நான்காம் பிரிவு சார்பாக தலைவர் திரு.A.காளிதாசன்,
செயலாளர்  திரு.G. சாக்ரடிஸ், அம்பை கிளை செயலாளர் திரு.ஆவுடையப்பன் ஆகியோரும் கலந்து கொண்டனர்.

0 comments:

Post a Comment

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More

 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | Grants For Single Moms