Saturday, 4 April 2015

அனைத்து கோட்ட மற்றும் கிளை செயலர் கவனத்திற்கு

அன்பு தேசிய நெஞ்சங்களே. 
                 வணக்கம்,   வருகின்ற 05.04.2015 அன்று ஞாயிற்று கிழமை சென்னையில் 2012 ஆம் ஆண்டிலிருந்து ஓய்வு பெற்றவர்கள் சிலருக்கு பாராட்டு விழா நடைபெறுவதாகவும் அதில் கலந்து கொள்ளுமாறு  சில தினங்களாக நமது அகில இந்திய தலைமையால் இயக்க நலனுக்கு எதிராகவும் நமது ஒற்றுமையை சீர்குலைக்கும் முயற்சியில் ஈடுபட்ட காரணத்தால் அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்து நீக்கப்பட்ட திரு கவுஸ் பாட்சா அவர்கள் நமது முன்னாள் தமிழ் மாநில செயலர் அவர்கள் தூண்டுதலில் அனைத்து கோட்ட மற்றும் கிளை செயலர்களை தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசி அனைவருக்கும் அழைப்பு விடுத்து வருவது தாங்கள் அறிந்ததே.

              மேலும் இந்த கூட்டம் மாநில சங்கத்துக்குள் ஒரு ஒற்றுமையை ஏற்பட்டுத்தும் முயற்சி எனவும்  இந்த கூட்டத்தில் ஒரு சமரச முடிவு எட்டப்படும் எனவும் பொய்யான தகவல்களை தெரிவித்து வருகிறார். 

             எந்த சமரச பேச்சு வார்த்தை ஆனாலும் அது நமது அகில இந்திய தலைமையின் கீழ் தான் நடைபெற வேண்டுமே தவிர வேறு யாரும் நடத்திட முடியாது. மேலும் அகில இந்திய தலைமையால் அங்கீகரிக்க பட்ட நமது இடைகால குழுவின் தலைவர் என்ற முறையில் எனக்கும் இந்த கூட்டத்தில் கலந்து கொள்ள எந்த அழைப்பும் இல்லை, மேலும் இந்த கூட்டம் நமது ஒப்புதல் இன்றி தன்னிச்சையாக கூட்டப்பட்டுள்ளது. 
நானும் கலந்து கொள்ள போவது இல்லை. 
              இந்த நிலையில் இது ஒரு ஏமாற்று முயற்சியே தவிர  வேறு இல்லை . 
எனவே நீங்கள் யாரும் கலந்து கொள்ள வேண்டாம் எனவும் இந்த பொய் பிரச்சாரங்களை நம்ப வேண்டாம் எனவும் தெரிவித்து கொள்கிறேன். 


நன்றி 

P. திருஞான சம்பந்தம் 
Convenor
NAPE P3, T N  Circle
@Tuticorin 628001
Cell : 967733579
E-mail : Sampantham2014@gmail.com 

0 comments:

Post a Comment

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More

 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | Grants For Single Moms