Tuesday, 28 April 2015

காலவரையற்ற வேலைநிறுத்தத்துக்கு தயாராவீர்

அன்பார்ந்த தோழர்களே தோழியர்களே 
 
                     வணக்கம்  மத்திய அஞ்சல் ஊழியர் சங்கங்களின் சம்மேளனங்கள் NJCA விடுத்த அறைகூவலுக்கு இணங்க  ஐந்து கட்ட போராட்டத்தின் கடைசி கட்டமாக காலவரையற்ற வேலைநிறுத்தம் வருகிற மே  6 ம் தேதி தொடங்குகிறது.
                  அகில இந்திய அளவில் அதற்கான ஆயுத்த பணிகள் JCA வால் முழு வீச்சில் நடத்தப்பட்டு வருகிறது.  ஆனால் தமிழகத்தில் சில புல்லுருவிகள், தூண்டுதலில் பேரில் நமது மூன்றாம் பிரிவு சங்கத்துக்கு உரிய மதிப்பு அளிக்காமல் நம்மை புறக்கணித்து JCA ஏற்படுத்தபட்டுள்ளது. இது நமது கோட்ட மற்றும் கிளை செயலர்கள் மத்தியில் ஒருவித மனகசப்பையும் அதிர்பதியையும்  ஏற்படுதியுள்ளது. நாமும் அதே உணர்வில் எமது அதிர்ப்தியையும் தெரிவித்து கொள்கிறோம்.
 
                    பல்வேறு மன மாட்சர்யங்கள் இருந்தபோதிலும் போராட்டம் என்பது ஒட்டு மொத்த ஊழியர்களின் நலன் சார்ந்தது மட்டுமல்லாமல் ஒற்றுமை இன்மை நமது ஒன்றுபட்ட போராட்டத்தை  சிதைத்து விடம்  என்ற காரணத்தாலும் அந்த அறிவீழிகளின் சூழ்ச்சிக்கு நாமும் பலியாகி விடகூடாது என்ற காரணத்தாலும் நமது அகில இந்திய செயலர் திரு கிஷன் ராவ் அவர்களின் ஆணைக்கு இணங்க அஞ்சல் மூன்று சங்கமும் தமிழகத்தில் முழு மனதாக வேலை நிறுத்த போராட்டத்தில் பங்குபெறும் என்பதை தெரிவித்து கொள்கிறோம். அனைத்து கிளை மற்றும் கோட்ட செயலாளர்கள் போராட்டம் வெற்றி பெற முழு அளவில் நமது சகோதர சங்கங்களுடன் இணைந்து போராட வேண்டுகிறோம்.
 
                   போராட்ட சுற்றறிக்கை விரைவில் தங்களை வந்தடையும்.
 
போராட்ட வாழ்த்துகளுடன் 
 
திருஞான சம்பந்தம்,
தலைவர் தமிழ் மாநில இடைகால குழு 


கோரிக்கைகள் 

1. அஞ்சல் இலாக்கா சேவையை CORPORATION  மற்றும் தனியார் மயமாக்காதே !

2GDS ஊழியர்களை ஏழாவது ஊதியக் குழுவின் வரம்புக்குள் கொண்டுவந்து அவர்களுக்கு அரசு ஊழியர் அந்தஸ்து வழங்கு. அரசு ஊழியர்களுக்கு உண்டான அனைத்து சலுகைகளையும் மற்றும் விகிதாசார அடிப்படையில் ஊதியமும் எந்த வித பாகுபாடும் இன்றி வழங்கு.
3.காசுவல், பகுதி நேர, CONTINGENT ஊழியர்களை பணி நிரந்தரம் செய். அதற்கான வரம்பு காலத்தை நீக்கு.
4. 01.01.2014  முதல் GDS ஊழியர் உள்ளிட்ட அனைத்து ஊழியர்களுக்கும், 
100 % பஞ்சப்படியை அடிப்படை ஊதியத்துடன் இணைத்து எல்லா வித பயன்களையும் அதன் மீது வழங்கி விடு .

5. 01.01.2014 முதல் 25%  அடிப்படை ஊதியத்தை GDS உள்ளிட்ட அனைத்து ஊழியர்களுக்கும் இடைக்கால நிவாரணமாக வழங்கி விடு.

6. புதிய பென்ஷன் திட்டத்தை ரத்து செய். 01.01.2004  க்குப் பின்னர் பணியில் அமர்ந்த ஊழியர்களுக்கும்  அதற்கு முன்னர் உள்ளதுபோல சட்டபூர்வமான பாதுகாக்கப்பட்ட பென்ஷன் வழங்கி விடு.

7. கருணை அடிப்படையிலான பணி நியமனங்களில் உள்ள 5% கட்டுப்பாட்டை நீக்கு. பணியில் இறந்த அனைத்து ஊழியர்களின் வாரிசுகளுக்கும் வேலை கொடு. GDS ஊழியர்களுக்கு உள்ள குறைந்த பட்ச 50% புள்ளிகள் என்ற உத்திரவை உடனே நீக்கு .

8.  MMS, GDS உள்ளிட்ட அனைத்து பகுதிகளிலும் உள்ள காலியிடங்களை , நேரடி நியமனம், இலாக்கா பணிமூப்பு பதவி உயர்வு ,  தேர்வு முறை பதவி உயர்வு என்று எல்லா வழிகளிலும் தாமதமின்றி நிரப்பு. காலாவதியான MMS வாகனங்களை மாற்றி புதிய வாகனங்களை வழங்கு .

9.  JCM இலாக்கா குழு ஊழியர் தரப்புக்கு அளித்த உடன்பாட்டின்படி கேடர் சீரமைப்புத் திட்டத்தை அஞ்சல் , RMS, MMS, கணக்குப் பிரிவு உள்ளிட்ட அனைத்து பகுதிகளிலும் உடனே அமல் படுத்து.

10. POSTMASTER GRADE ஊழியர்களுக்கு உண்டான பிரச்சினை தீர்த்து வை. IP, GR. B தேர்வு எழுதிட அனுமதி. பதவி உயர்வில் உள்ள சேவைக்கால இடைவெளியை  GENERAL LINE ஊழியர்களுக்கு உள்ளது போல , அதற்கு சமமான பதவி உயர்வுகளில் வழங்கி விடு. அனைத்து   PSS GR. B, PM GRADE III, PM GRADE II  காலிடங்களையும்  நிரப்பிடு.  அதற்கு உண்டான தகுதி அடிப்படை பூர்த்தியாகாவிட்டால் அனைத்து காலியிடங்களையும் ADHOC PROMOTION அடிப்படையில் நிரப்பி விடு. POSTMASTER CADREக்கு ஒதுக்கப் பட்ட அனைத்து SENIOR POSTMASTER/CHIEF POSTMASTER பதவிகளையும் POSTMASTER CADRE ஊழியர்களைக் கொண்டு நிரப்பிடு . இதற்கான CIRCLE GRADATION LIST வெளியிடு.

11. SYSTEM ADMINISTRATOR களுக்கு முழுமையான   ROAD MILEAGE ALLOWANCE வழங்கி விடு. அவர்களின் பணித்தன்மை மற்றும் பணி நேரத்தை வரையறை செய்.  SYSTEM ADMINISTRATOR களுக்கு தனியான கேடர் உருவாக்கு.

12. நிர்வாக மற்றும் RMS அலுவலகங்களில் உள்ளது போல  அஞ்சல் பகுதி காசாளர்களுக்கு CASH HANDLING ALLOWANCE வழங்கி விடு.

13.  PO & RMS ACCOUNTANT களுக்கு வழங்கப்படும் SPECIAL ALLOWANCEஐ பதவி உயர்வுக்கான ஊதிய நிர்ணயக் கணக்கீட்டிற்கு எடுத்துக் கொள்.

14.    I.T. MODERNISATION PROJECT செயல்படுத்துவதில் உள்ள அனைத்து பிரச்சினைகளையும் உடனே தீர்த்து வை. உதாரணம் :   COMPUTERISATION, CORE BANKING SOLUTION, CORE  INSURANCE SOLUTION ETC. காலாவதியான கணினி, PRINTER உள்ளிட்ட கணினி பயன்பாட்டு சாதனங்களை புதிதாக உடனே மாற்றி வழங்கு. NETWORK மற்றும் BANDWIDTH அளவுகளை உயர்த்து. ஊழியர் விடுப்பு நாட்களில் மாற்று ஊழியருக்கு உண்டான USER CREDENTIAL  பிரச்சினைகளை தீர்த்து வை.  CBS, CIS  செயல்பாட்டில் உள்ள குளறுபடிகளை முழுமையாக களைந்திடாமல் அவசர கதியில்  MIGRATION செய்து, சேவைக் குறைபாட்டை ஏற்படுத்தி  பொது மக்கள் பார்வையில்  இலாக்கா பெயரை அசிங்கப் படுத்தாதே. CBS, CIS திட்ட அமலாக்கத்தில்  ஊழியர்களுக்கு திட்டத்தை சிறப்பாக செயல்படுத்திட எல்லா உதவிகளையும் வழங்கு. SERVICE PROVIDER களை கட்டுப் படுத்தாமல் ஊழியர்களை கொடுமைப் படுத்தாதே. HEAD POSTMASTER களுக்கு உயர் நிதி செலவீட்டு அதிகாரத்தை வழங்கு.

15.  மாதாந்திரப் பேட்டிகள், இரு மாத, நான்கு மாத பேட்டிகள், JCM கூட்டங்கள், WELFARE BOARD, SPORTS BOARD MEETING ஆகியவற்றை முறையான கால அளவீட்டில் நடத்து. இதற்குண்டான உறுப்பினர்களை அங்கீகரிப்பட்ட சங்கங்களின்  பிரதிநிதிகளைக் கொண்டு உடன் நிரப்பு .

16. GDS ஊழியர்களுக்கு முழுமையான ஊதியப்பாதுகாப்பு (FULL PROTECTION OF TRCA) வழங்கி விடு. ஊதியக் குறைப்பு செய்யாதே. MEDICAL REIMBURSEMENT திட்டத்தை GDS ஊழியர்களுக்கும் அமல்படுத்து. CASH HANDLING NORMS மாற்றி அமை.

17. அனைத்து   C.O.,  R.O.,   DPLI OFFICE, KOLKATA   அலுவலகங்களும் CORE INSURANCE SOLUTION க்கு  CIRCLE PROCESSING CENTRE  ஆக பணி செய்ய உத்திரவு வழங்கு.  PLI/ RPLI சேவையை மேம்படுத்து.  615   எழுத்தர் பதவிகளை  C.O. PLI    மற்றும் APS PLI CELL பகுதியில் இருந்து DIVERSION செய்ய வழங்கப் பட்ட உத்திரவை ரத்து செய். நிர்வாக அலுவலகங்களில் உள்ள ஊழியர்களை DECENTRALISATION பெயரால் கொடுமைக்கு ஆளாக்காதே.

18இலாக்கா கட்டிடங்கள், ஊழியர் குடியிருப்புகள், RMS ஒய்வு இடங்கள் போன்றவற்றை  புதிதாக கட்டுவதற்கும், பழுது  பார்ப்பதற்கும், பராமரிப்பு பணிகள் செய்வதற்கும் உரிய நிதி உடனே வழங்கு.

19. தபால்காரர் மற்றும் MTS காலிப் பணியிடங்கள் அனைத்திலும் SUBSTITUTE ARRANGEMENT வழங்கு. GDS பதிலி இல்லாத இடங்களில் காலியிடங்களில் பணிபுரிய OUTSIDER களை அனுமதி.

20.  DOOR TO DOOR DELIVERY முறையில் தபால்காரர் பணி நேரத்தை கணக்கிடு. 22.05.1979 இல் வெளியிடப்பட்ட பழைய கணக்கீட்டு உத்திரவை  மாற்றி அமை.

21.      L  1  அலுவலகங்களின் எண்ணிக்கையை அதிகப்படுத்து.

22.  SB  BRANCH பணிகளை  SBCO விடம் திணிக்காதே.  SBCO  ஊழியர்களுக்கு APAR வழங்கும் பணியை AO (SBCO) விடம் அளி.

23. குறித்த காலத்தில் தரமான சீருடை, காலணி மற்றும் குடை வழங்கு. இதில் உள்ள பழைய அளவீட்டு முறையை மாற்று.

24. GM FINANCE,CHENNAI யின் ஊழியர்களை பழி வாங்கும் போக்கை தடுத்து நிறுத்து. நூற்றுக்கணக்கான கணக்குப் பிரிவு ஊழியர்களுக்கு வழங்கப் பட்ட தண்டனையை ரத்து செய்.

25. 2012 இல் நடைபெற்ற  JAO POSTAL  PART II தேர்வின் மதிப்பெண்களை SC/ST ஊழியர்களுக்கு மறு பரிசீலனை செய்.

26. POSTMAN/MG/ MTS RECRUITMENT RULES மாற்றி அமை. வெளியார் தேர்வு முறையை ரத்து செய்.  முன்பிருந்தது போல பணி மூப்பு அடிப்படை  பதவி உயர்வு முறையை திரும்ப அமை.

0 comments:

Post a Comment

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More

 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | Grants For Single Moms