Saturday, 22 August 2015

வெல்லட்டும் ஒருநாள் அடையாள வேலை நிறுத்தம்.

         சமிப காலங்களில் பல்வேறு மட்டங்களில் நமது தொழிற்சங்க தோழர்களிடம் இருந்து பெற்ற ஆலோசனை அடிப்படையில் நமது சம்மேளனம் மத்திய அரசின்  தொழிலாளர் எதிர்ப்பு கொள்கைக்கு  எதிராக அனைத்து தேசிய தொழிற்சங்களின் அறைகூவலின் படி நடைபெறும் செப்டம்பர் 2 ஒருநாள் அடையாள வேலைநிறுத்தத்தில் பங்கேற்க முடிவு செய்துள்ளது.
        
மாற்று தொழிற்சங்கத்தினர் சமீபத்திய
உறுப்பினர் சரிபார்ப்பு பணியில், நமது உறுப்பினர் சேர்ப்பில் பாதிப்பு ஏற்படும் வகையில் அனைத்து வகையான யுத்திகளையும் நியாயமற்ற வகையில் பயன்படுத்தினர்.  அப்படிபட்ட அவர்களுடன் இணைந்து வேலை நிறுத்தத்தில் கலந்து கொள்வது இயலாத ஒன்றாகிறது. இருந்தபோதிலும் நாமும் இது ஒரு " அரசியல் சார்பு வேலைநிறுத்தம் "  என்று முத்திரை குத்துவதன் மூலம் தவிர்க்க விரும்பவில்லை. இது  அரசின் தவறான கொள்கை எதிராக தேசிய தொழிலாளர் நலன் சார்ந்த வேலைநிறுத்தம். எனவே நாமும் செப்டம்பர் 2 அன்று நடைபெறும் வேலை நிறுத்த போராட்டத்தில்  பங்கேற்க முடிவு செய்துள்ளோம். அதற்காக நமது துறை தலைவரிடம் 17 இம் தேதி ஒரு வேலைநிறுத்த கடிதம் கொடுத்துள்ளோம்.            உங்களின் மேலான ஒத்துழைப்பும் ஆதரவும் இல்லாமல் நாம் செப்டம்பர் 2 - 2015 அன்று வேலை நிறுத்த போராட்டத்தை வெற்றிகரமாக நடத்த முடியாது என்பதை நாம் அறிவோம். ஆகையால் நாம் அனைவரும் ஒன்றுபட்டு வேலைநிறுத்தத்தில் பங்குபெற்று வெற்றிபெற செய்ய நம்முடைய சம்மேளனம் உங்களிடம் அன்புடன் வேண்டுகிறது. 

        நன்றி 
  வெல்லட்டும் ஒருநாள் அடையாள வேலை நிறுத்தம் - எட்டுத்திக்கும் 
  முழங்கட்டும் நமது போராட்ட முழக்கங்கள்
  அதிரட்டும் அரசின் செவிப்பறையில் விரைவில்
  கிட்டட்டும் வெற்றி நமக்கு.
                      போராட்ட வாழ்த்துகளுடன்...........................
                                                         தேசிய சங்கம் 

குறிப்பு :  தேசிய சங்கத்தின் அனைத்து சகோதர சங்கங்களும் இணைந்து போராட்டம் வெற்றி பெற தனியாக ( NO JCA )  களம் காண வேண்டுகிறோம்.

0 comments:

Post a Comment

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More

 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | Grants For Single Moms