மத்திய அரசின் தொழிலாளர் எதிர்ப்பு கொள்கைக்கு எதிராக அனைத்து தேசிய தொழிற்சங்களின் அறைகூவலின் படி நடைபெறும் செப்டம்பர் 2 ஒருநாள் அடையாள வேலைநிறுத்த விளக்க கூட்டம் தூத்துக்குடி தலைமை அஞ்சலகத்தில் நேற்று நடைபெற்றது.
அக் கூட்டத்திற்கு தூத்துக்குடி தலைமை அஞ்சலக அதிகாரி
திரு.இராமச்சந்திரன் அவர்கள் தலைமை தாங்கினார்.
நமது சம்மேளன பொது செயலாளர் திரு.D.தியாகராஜன் அவர்கள் கலந்து கொண்டு போராட்ட விளக்க உரையாற்றினார்.
மேலும் தற்போதைய சூழல் அதில் 7 வது ஊதிய குழுவில் நமது கோரிக்கைகள், 7 வது ஊதிய குழுவினருடன் நடைபெற்ற பேச்சு வார்த்தையில் காணப்பட்ட சிறப்பு அம்சங்களை விளக்கினார்.
முடிவில் திரு ஜோதிவேல் அவர்கள் நன்றி நவின்றார்.
இக்கூட்டத்தில் தூத்துக்குடி கோட்ட செயலாளர் திரு.N.J.உதயகுமாரன்
P4 கோட்ட செயலாளரும் மாநில அமைப்பு செயலாளருமான திரு.A.ஜெயச்சந்திரன்
திருநெல்வேலி கோட்ட செயலாளர் திரு.S.A.இராம சுப்பிரமணியன்
திருநெல்வேலி செயலாளர் பொறுப்பு திரு.J.குணா (எ) குணசேகரன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
0 comments:
Post a Comment