Wednesday, 2 September 2015

தன்னெழுச்சியுடன் நடைபெற்ற வேலை நிறுத்தம்

         மத்திய அரசின்  தொழிலாளர் எதிர்ப்பு கொள்கைக்கு  எதிராக அனைத்து தேசிய தொழிற்சங்ககள் மற்றும் நமது FNPO சம்மேளனத்தின்  அறைகூவலின் படி இன்று  செப்டம்பர் 2 ஒருநாள் அடையாள வேலைநிறுத்தத்தில் தேசம் முழுவதும் பல கோடி மக்கள் தன்னெழுச்சியுடன் பங்கேற்று வருகிறார்கள். குறிப்பாக நமது நெல்லை கோட்டத்தில் சுமார் 95 சதவிகிதம் அஞ்சல் துறை ஊழியர்கள் பங்கேற்று வருகிறார்கள்
        
     இன்று காலை 1000 மணிக்கு திருநெல்வேலி தலைமை அஞ்சலகத்தின் முன்பு வேலைநிறுத்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அதில் பெருந்திரளான தோழர்கள் கலந்து கொண்டனர். 
                      வருகிற அக்டோபர் மாதம் 21 யில் பணிநிறைவு பெறப்போகும்  நமது தேசிய சங்க GDS ஊழியர் தோழர் D.செய்யது  அஹமது கபீர் அவர்கள் எவ்வித பிரதிபலனையும் எதிர்பாராது தேசிய சங்க அறைகூவலுக்கு  இணங்க இப் போராட்டத்தில் கலந்து கொண்டார்கள் அவர்களுக்கு நமது சிரம் தாழ்ந்த வணக்கங்கள் 
குறிப்பு  : தோழர் D.செய்யது  அஹமது கபீர் அவர்கள் படத்தில் வட்டமிட்டு காட்டப்பட்டுள்ளார்.

0 comments:

Post a Comment

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More

 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | Grants For Single Moms