Sunday, 18 October 2015

கூட்டு பொதுக்குழு கூட்டம்


P3 Secretary Smt.Suriyakala Greeted by Smt.Gomathy.
தேசிய சங்கத்தின் கூட்டு பொதுக்குழு கூட்டம்  (திருநெல்வேலி மற்றும் அம்பை கிளைசங்கத்தின் முச்சங்கங்கள்) திருநெல்வேலி தலைமை அஞ்சலகத்தில் வைத்து இன்று 18.10.2015 ஞாயிறு காலை 1000 மணிக்கு நடைபெற்றது.   பெரும்பாலான உறுப்பினர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

முதலில் திருமதி சூரியகலா அவர்கள்  இறைவணக்கம் பாட கூட்டம் இனிதே ஆரம்பமானது.  பின்பு சமிபத்தில் மரணமடைந்த திரு செல்லபாண்டி அவர்களின் தாயார் மறைவுக்கு மவுனம் அனுஷ்டிக்க பட்டது.

கூட்டத்திற்கு திரு.S.A.இராமசுப்பிரமணியன் அவர்கள் தலைமை வகித்தார்.
திரு.J.குணசேகரன் திரு.S.இராமலிங்கம் திரு.M.முத்துசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். 

வங்கி அதிகாரியாக தேர்வு பெற்று சென்ற திரு.S.இராஜ பிரசாத் அவர்கள் பாராட்டபெற்றார் அதனை தொடர்ந்து வருகிற அக்டோபர் 20 அன்று ஓய்வு பெற போகும் நமது கிராமிய அஞ்சல் அலுவலர் ஊழியர் திரு.D..செய்யது அகமது கபீர் அவர்கள் பாராட்டு  பெற்றார் அவர்களை அனைவரும் வாழ்த்தினர்.

நமது தேசிய சங்கத்தில் காலியாக உள்ள பதவிகளுக்கு புதிய உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்க பட்டனர். 

மூன்றாம் பிரிவு தலைவராக தற்போதைய கோட்ட செயலாளர்
திரு.S.A. இராமசுப்பிரமணியன் அவர்களும்,
உப தலைவராக திருS.வெங்கடேஸ்வரன் , ஜனாப் அஹமது ஷெரிப் 

நெல்லை கோட்ட தொழிற்சங்க வரலாற்றில் முதன்முறையாக
ஒட்டுமொத்த மாதர் குலத்தின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றும் விதமாக 
செயலாளராக திருமதி சூரியகலா அவர்களும்

பொருளாளராக திரு.M. இரமேஷ் அவர்களும்
ஒருமனதாக தேர்ந்தெடுக்க பட்டனர் 

நான்காம் மற்றும் MTS பிரிவில்
தலைவராக  திரு இராமலிங்கம் அவர்களும்,
உப தலைவராக திரு சோமசுந்தரம், &  திரு மாரியப்பன் 
செயலாளராக திரு வெங்கிடாசலம்  அவர்களும் 
 ஒருமனதாக தேர்ந்தெடுக்க பட்டனர்

கிராமிய அஞ்சல் ஊழியர் பிரிவில்
செயலாளராக திரு  சரவணகுமார் அவர்களும்
பொருளாளராக திரு கோமதிநாயகம் அவர்களும் தேர்ந்தெடுக்கபட்டனர்.

அடுத்ததாக ஒவ்வொரு உறுப்பினரும் தற்போதைய சூழ்நிலையில் நமது இலாகாவில் ஊழியர்கள் எதிர்கொள்ளும் பிரச்சனைகளை பட்டியலிட்டனர் அதற்கு நமது சங்கம் ஆற்றவேண்டிய பணிகளை குறித்து பேசினார் 

நமது சங்கத்தை பலப்படுத்த எடுக்க வேண்டிய நடவடிக்கைகளையும் அதற்கு ஆற்றவேண்டிய செயல்களையும் பேசினர் 

தீர்மானங்கள்  ஒருமனதாக நிறைவேற்ற பட்டன 
1. எதிர்வரும் நவம்பர் 23 முதல் நடைபெற உள்ள காலவரையற்ற போராட்டத்தில் அனைவரும் பங்குபெற்று வெற்றி பெற செய்ய வேண்டும் 
2. 7 வது ஊதிய குழுவின்  வரம்பிற்குள் கிராமிய அஞ்சல் ஊழியர்களையும் இணைக்க வேண்டும் 
3. 7 வது திய குழுவை காலதாமதபடுத்த முயற்சிக்கும் அரசின் நடவடிக்கையை கண்டிக்கிறோம் 
4. ஏற்கனவே ஒத்து கொண்டபடி போனஸ் உச்சவரம்பை இலாகா மற்றும் கிராமிய ழியர்களுக்கு உடனடியாக உயர்த்தி வழங்கிட வேண்டும்  
 5. போராட்ட கோரிக்கைகளை உடனடியாக நிறைவேற்ற வேண்டும் 
6.  RPLI மற்றும் சேமிப்பு கணக்குகளை வரைமுறை இன்றி பிடித்திடவும் இல்லையேல்  அதற்காக ஊழியர்களின் சொந்த பணத்தில் கணக்கு தொடங்கிட தொடர்ந்து வற்புறுத்தும் அதிகாரிகளை  கண்டிக்கிறோம்.

நமது 26வது கோட்ட மாநாட்டினை எதிர் வரும் டிசம்பர் திங்கள் நடத்திடவும் இடம் மற்றும் தேதியை நிர்ணயம் செய்ய கோட்ட செயலருக்கு இப்பொதுக்குழு அதிகாரம் வழங்குகிறது. 

திரு வெங்கிடாசலம் அவர்கள் நன்றி கூற பொதுக்குழு கூட்டம் இனிதே நிறைவுற்றது.
Shri.DSA Kabeer greeted by President S.A.Rama Subramanian


All General Body Members

GDS Secretary Saravanakumar greeted by S.A.Rama Subramanian

Shri.Venkatachalam greeted by Shri Venkateswaran

0 comments:

Post a Comment

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More

 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | Grants For Single Moms