சிறந்த பேச்சாளர்
நமது கோட்ட கண்காணிப்பாளர் திரு .V.P. சந்திரசேகர் அவர்கள் சிறந்த பேச்சாளர் மற்றும் சிறந்த நிர்வாகி என்பதை நாம் அறிந்தது. பொதுவாக இலாகாவின் இன்றைய நிலை அதற்கு நாம் ஆற்றவேண்டிய பணிகள் என்ன என்பதை மிகவும் எளிய முறையில் அனைவரும் புரிந்து கொள்ளும் முறையில் விளக்கம் அளிப்பதை பார்த்திருப்பீர்கள் .
சிறந்த நிர்வாகி
நமது கோட்ட கண்காணிப்பாளர் அவர்கள் சமீபத்தில் தேனீ கோட்டத்தில் பணியாற்றும் போது குடியரசு தின விழாவில் தேனீ மாவட்ட ஆட்சிதலைவரிடம் சான்றும் பாராட்டும் பெற்றிருக்கிறார். ( தேனீ கோட்டத்தில் Mahatma Gandhi National Rural Employment Gurantee Act NREGA திட்டத்தில் அதிகமான பயனாளிகள் பயன்பெறும் வகையில் சேமிப்பு கணக்குகள் தொடங்கிய வகையில் அதற்காக அவர் ஆற்றிய பங்களிப்பை உறுதிப்படுத்தும் வகையில் நற்சான்றிதல் வழங்கப்பட்டுள்ளது )
சிறந்த கவிஞர்
நமது கோட்ட கண்காணிப்பாளர் திரு .V.P. சந்திரசேகர் அவர்கள் சிறந்த மனிதாபிமானியும் ஆவார். ஊழியர் பிரச்சனைகளில் திறந்த மனதுடன் யார் மனமும் வருத்தபடாத வண்ணம் செயலாற்ற கூடியவர். அனைவரையும் தட்டி கொடுத்து வேலை வாங்கும் சிறந்த பண்பாளர் மட்டுமல்ல அவர் சிறந்த கவிஞரும் ஆவார். ஒரு கவிதை தொகுப்பே வெளியிடும் அளவுக்கு கவிதைகளை எழுதி உள்ளார். அவரின் கவிதை திறனுக்கு இதோ ஒரு சான்று.
அவர் எழுதி வார இதழ் ஒன்றில் பிரசுரமான கவிதை :
குழந்தை பருவத்தையும், வாலிப பருவத்தையும், பள்ளி கல்லூரி படிப்பும் - ஏன் வாழ்க்கை கனவும் கானல் நீறாகி போகும் அந்த குழந்தை தொழிலாளர்களின் வாழ்வியல் அவலத்தை படம்பிடித்து காட்டும் அந்த கவிதை.
கானல் நீர்
கரிசல் மண்ணின்
கரிப்பு கதைகள் இங்கே
சிவகாசியின்
சின்னக் கைகள் - இவை
சீனா பொம்மைகளுடன்
விளையாடவில்லை
தீக்குச்சிகளுடன்
விளையாடுகின்றன
சிரிப்பு அவர்கள் முகத்தில் இல்லை
சின்னச் சின்ன
மத்தாப்புகளில் மட்டுமே
இவர்களுக்கு
கான்வெண்டும்
நர்சரிகளும்
பட்டாசு தொழிற்சாலைகளும்
தீக்குச்சி தொழிற்சாலைகளும் தான்
இவர்களுக்கு
ஆலைகளின் சங்கொலிகள் தான்
ஆத்ம கீதங்கள்
இவர்களின் ஏக்க பெருமூச்சுகள்
அதோ
ஆலைப் புகையினிலே
இவர்கள் வாழ்க்கைப் பாதையின்
விழியோர சுமைதாங்கிகள்
வெள்ளி கொலுசு
தங்க ஜிமிக்கி
வண்ணப் பாவாடை
- இவை பட்டாசுகளின்
அட்டைச் சிறுமிக்கு மட்டுமே
0 comments:
Post a Comment