அசோக சக்கரம், காந்தி உருவம் பொறித்த நாணயம் விற்பனை உட்பட 3 தங்க முதலீட்டு திட்டங்களை தொடங்கி வைத்தார் பிரதமர் மோடி: ரூ.52 லட்சம் கோடி மதிப்பு தங்கத்தை வெளிக்கொணர உதவும்
பொதுமக்களிடம் பயன்படுத்தப் படாமல் உள்ள தங்கத்தை பணமாக்கும் திட்டம், தங்க சேமிப்பு பத்திர திட்டம் ஆகியவை மற்ற 2 திட்டங்கள் ஆகும். தங்கம் இறக்குமதி செய்வ தைக் குறைக்கவும் பயன்படுத்தப் படாமல் உள்ள ரூ.52 லட்சம் கோடி மதிப்பிலான தங்கத்தை வெளிக் கொணரவும் இந்த திட்டங்கள் உதவும் என மத்திய அரசு கருதுகிறது.
தங்கத்தை பணமாக்கும் திட்டத்தின் மூலம் தனி நபர்கள்/நிறுவனங்களிடம் பயன்படுத்தப்படாமல் இருக்கும் தங்கத்தை வங்கிகள் பெற்றுக்கொள்ளும். 2.5 சதவீத வட்டி வழங்கப்படும். குறைந்தபட்சமாக ஒருவர் 30 கிராம் தங்கத்தை முதலீடு செய்யலாம். முதலீட்டுக்கான அதிகபட்ச காலம் 15 ஆண்டுகள். முதிர்வின் போது தங்கமாகவோ, பணமாகவோ பெற்றுக்கொள்ளலாம். முதலீட்டாளர் களிடம் இருந்து பெறப்படும் தங்கம் நகை உற்பத்தியாளர்களுக்கு ஏலம் மூலம் விற்கப்படும். இந்த திட்டத் தால் தங்கம் இறக்குமதி கணிசமாகக் குறையும்
.
அடுத்தபடியாக தங்க பத்திர திட்டத்தின் கீழ் குறைந்தபட்சம் 2 கிராம் முதல் 500 கிராம் வரை முதலீடு செய்யலாம். இதில், தங்கத்துக்கு பதில் பத்திரம் வழங்கப்படும். இதை பாதுகாப்பது எளிது. இந்த பத்திரங்களுக்கு ஆண்டுக்கு 2.75 சதவீத வட்டி வழங் கப்படும். முதலீட்டு காலம் 8 ஆண்டுகள். ஆனால் 5 ஆண்டு முதல் முதலீட்டை தங்கமாகவோ அல்லது அப்போதைய மதிப்பில் பணமாகவோ பெறலாம்.
அதேபோல ஒருபுறம் அசோக சக்கரம் மறுபுறம் மகாத்மா காந்தியின் உருவங்கள் பொறிக்கப் பட்ட தங்க நாணயம் முதன் முறையாக அறிமுகம் செய்யப் பட்டுள்ளது. இது 5, 10, 20 கிராம் நாணயங்களாக கிடைக்கும். இதை நாடு முழுவதும் இருக்கும் 125 எம்.எம்.டி.சி. விற்பனையகங்களில் வாங்கிக்கொள்ளலாம்.
இந்த நிகழ்ச்சியில் மோடி பேசும் போது, “இந்த ஆண்டில் இதுவரை இந்தியா 562 டன் தங்கம் இறக்குமதி செய்துள்ளது. ஓராண்டில் நாம் சராசரியாக 1,000 டன் இறக்குமதி செய்கிறோம். தங்கம் இறக்குமதி அதிகரிப்பதால் அந்நியச் செலாவணி அதிகரித்து பட்ஜெட் பற்றாக்குறை அதிகரிக்கிறது. மேலும் நம் நாட்டில் பயன்படுத்தப்படாமல் 20,000 டன் தங்கம் இருக்கிறது.
இந்த மூன்று திட்டங்களால் தங்கம் இறக்குமதி குறைய வாய்ப்பு உள்ளது. இந்த திட்டத்தின் மூலம் மக்கள் பயனடையும் பட்சத்தில், அவர்களே இந்த திட்டத்தின் விளம்பர தூதர்களாக மாறுவார்கள். அசோக சக்கரம் மற்றும் மகாத்மா காந்தியின் உருவம் பொறிக்கப்பட்ட நாணயங்கள் வெளியிடப் பட்டிருப்பதால், இனியும் வெளிநாட்டு நாணயங் களை நாம் நம்பி இருக்கத் தேவையில்லை” என்றார். 6 முதலீட்டாளர்களுக்கு தங்க பத்திரங்களையும் வழங்கினார்.
இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்ட மத்திய நிதி அமைச்சர் அருண் ஜேட்லி கூறும்போது, “தங்கம் அதிகஅளவில் இறக்குமதி செய்வதைக் கட்டுப்படுத்தும் நோக்கத் தில் இந்த திட்டங்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன” என்றார்.
நாட்டில் தங்கத்தின் தேவையில் மூன்றில் ஒரு பங்கு முதலீட்டு நோக்கத் துடன் வாங்கப்படுகிறது என்று வர்த்தகத் துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.
0 comments:
Post a Comment