Tuesday, 17 November 2015

கண்கெட்ட பிறகு சூரிய நமஸ்காரமா ?

செய்தி :
GDS களுக்கு ஓய்வு பெற்ற உயரதிகாரி தலைமையில் குழு அதற்கு ஆயுத்தமாகிறது இலாகா.  செயலாளராக Agra PMG அவர்களை பணிமாறுதல் செய்து நியமிக்கிறது. 

இதுவரை "நான்" என்கிற இருமார்ப்பில் "யார் பெரியவன் ?" என்ற தோரணையில் ஊழியர் நலனைவிட சுயநலமே பெரிதென தங்களுக்கே (NFPE)  உரித்தான பாணியில் சண்டையிட்டு கடைசியில் ஒற்றுமையே பெரிதென புதிய ஞானோதயம் ஏற்பட்டு அனைவருக்கும் கடிதம் எழுதுகிறார் மகாதேவ்வையா.
(கடிதம் நகல் கீழே இணைக்க பட்டுள்ளது)

 யார் இந்த மகா தேவையா ?
நமது அஞ்சல் சங்கங்கள் எல்லாம் இணைந்து (JCA) போராட்ட அழைப்பு விடுக்கும் போதெல்லாம் முந்தி கொண்டு ஒருசில நாட்களுக்கு முன்பாக போரட்ட அறிவிப்பு விடுத்து களம் காண்பவர்.  ஊழியர்களின் ஒற்றுமைக்கு உலை வைத்தவர். GDS களின் ஒரே விடிவெள்ளி, GDS களே தனியாக போராடிவெல்வோம் என சூளுரைத்தவர். 
இன்றைக்கு புதிய ஞானோதயத்தின் சொந்தக்காரர்.
(காலம் கடந்த சிந்தனையானாலும் Unity is Our Strength )
இன்று ஒருகை ஓசை பலனில்லை என்று ஒப்பாரி வைக்கிறார்.
இவர் நமக்கு தேவையா சிந்திப்பீர் GDS தோழர்களே ?

சரி அவரை விட்டுவிடுவோம். இவர் துணைக்கு அழைக்கும் இந்த கம்யுனிச சிந்தனைவாதிகள் யார் ?
தங்கள் இயக்கத்துக்குள்ளேயே பதவி சண்டையில் ஒரு இயக்கத்தையே உடைத்து ஒற்றுமையை சீர்குலைத்து தங்கள் அபிலாசையை நிறைவேற்றி கொண்டவர்கள்.  இவர்கள் தங்கள் ஈகோ வை விட்டு விட்டு GDS தோழர்களுக்காக கரம் கோர்த்து அரசை எதிர்த்தது போராடுவார்களா ? அப்பாவி GDS  ஊழியனின் எதிர்பார்ப்பு நிறைவேறுமா ? 
நிச்சயம் இல்லை.

சற்றே பின்னோக்கி பாருங்கள்.
ஒரு மாத காலத்துக்கு முன்பு நமது சங்கத்துடன் இணைந்து JCA என்று சொல்லி, ஏன் ! மத்திய அரசு ஊழியர்கள் மஹா சம்மேளனம் போராடினாலும் போராடவிட்டாலும் நமது காலவரையற்ற போராட்டம் தொடரும் என்று மார்தட்டி இலாகாவிற்கு நோட்டீஸ் கொடுத்து எப்போதும் போல தாங்கள் தான் போராடவே பிறந்தவர்கள் என வீரவசனம் பேசியவர்கள். (கூட்டு போராட்ட வெற்றியிலும் 100% காப்பி ரைட் கேட்பார்கள்)
கடைசியில் போராட திராணியற்று அந்த நோட்டீஸ் க்கு பதில் சொல்லாமல் FNPO தலைவர்களிடம் கலந்து பேசாமல் திசம்பர் மாதம் 1 & 2 அன்று 48 மணிநேர போராட்டம் என பின்வங்கியவர்கள். 
அரசை எதிர்த்து போராடும் துணிவை இழந்தவர்கள். 
இவர்களா போராடபோகிறார்கள் ? சிந்திப்பீர் 

நீங்கள் கேட்கலாம் ஏன் FNPO போராட வேண்டியது தானே என்று ?
FNPO மட்டும் போராடினால் அரசிடம் வெற்றிபெற முடியுமா?
FNPO இல்லாமல் NFPE போராடினாலும் போராட்டம் முழு வெற்றி அடையுமா ?
100 % போராட்ட வெற்றியை காட்டாமல் இந்த அரசுகளிடம் சாதிக்கமுடியுமா ?
சிந்திப்பீர்

இந்த சுயநல தலைமைகள் இருக்கும் வரை 
நமது போராட்டம் மட்டுமல்ல  வெற்றியும் கேள்விக்குறியே !!
GDS களின் நிலைமையும் ??????????????????????
                                                                                                                 



0 comments:

Post a Comment

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More

 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | Grants For Single Moms